14 அமைச்சர்கள் தோல்வி முகம்.. சரிந்தது பாஜக கோட்டை.. காங்கிரஸ் பிரமாண்ட வெற்றி!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 113 இடங்களில் ஒரு கட்சி வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் காங்கிரஸ் 137 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக-65, ம.ஜ.த-19, மற்றவை-03 இடங்களிலும் வெற்றி பெரும் நிலையில் உள்ளன. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜகவுக்கு படுதோல்வி மட்டுமல்லாமல் 14 அமைச்சர்கள் ஏறக்குறைய தோல்வி அடையும் தருவாயில் இருப்பது பகீரை கிளப்பியுள்ளது. தேசிய ஊடகங்களில் வெளியான தகவல்கள் படி கீழக்கண்ட … Read more

முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு…? ஆனால் சிவகுமாருக்கும் நல்ல செய்தி இருக்கு!

Siddaramaiah vs DK Shivakumar: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில், கட்சியில் அதிகாரப் பகிர்வு குறித்த முடிவும் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காங்கிரஸுக்கு வாழ்த்துகள்: பிரதமர் மோடி

புதுடெல்லி: மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காங்கிரஸுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவையான நிலையில் 123 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. பாஜக இதுவரை 51 இடங்களில் வெற்று பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் வெற்றி … Read more

காங்கிரஸை வாழ்த்திய பெரும்புள்ளியின் மகன்.. திருப்பம் ஏற்படுமா.?

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு தெலங்கானா முதல்வரின் மகன் கேடிஆர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் படி, வாக்கு பதிவு எண்ணப்பட்டு வெற்றி அறிவிக்கப்பட்ட 223 தொகுதிகளில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 65 இடங்களில் பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 1 … Read more

கடனை அடைக்க 4 வயது மகளை அடமானம் வைத்த குடிகார தந்தை!

குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தை, குடிக்க கடன் வாங்கியதால், அதை அடைக்க 4 வயது மகளை அடகு வைத்த கொடூர சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க வெற்றி..

உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களிலும் வெற்றி பெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் கடந்த 4 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக 75 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் 53 சதவீத வாக்குகள் பதிவானது. அ வை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து மாநகராட்சி மேயர் பதவிகளையும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் … Read more

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்குப் பின்னால் ‘தமிழர்’… யார் இந்த சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்?

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தல் வெற்றிக்குப் பின்னால் நிச்சயமாக பல்வேறு அரசியல் வியூகங்கள் இருக்கும். ஆனால், இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால் ஓர் ஓய்வு பெற்ற அதிகாரியின் மூளையும் இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊடகங்களில் காங்கிரஸ் வெற்றியோடு சேர்த்து ஓர் அடைமொழி போல் கூறப்படுகிறது சசிகாந்த் செந்தில் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் பெயர். யார் இந்த சசிகாந்த் ஐஏஎஸ்? சசிகாந்த் செந்தில் … Read more

1989க்கு பிறகு காங்கிரஸ் படைத்த புதிய வரலாறு.. எப்படி கெத்தா.?

1989ம் ஆண்டுக்கு பிறகு அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இது வரை வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றிகள் அறிவிக்கப்பட்ட 220 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 133 இடங்களிலும், பாஜக 64 இடங்களிலும் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் மீதமுள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையிலும், 1 … Read more

மோக்கா புயலை எதிர்கொள்ளத் தயாராகும் வங்க தேசம்… 175 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை…!

வங்கக் கடலில் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மோக்கா புயலை ஒட்டி, வங்கதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மியான்மரின் சித்வே – வங்கதேசத்தின் காஸ் பஜார் பகுதிகளுக்கு இடையே மோக்கா புயல் ஞாயிறு காலை கரையைக் கடக்கும்போது, மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் காஸ் பஜார் பகுதியில் கடுமையான சேதம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக காஸ் பஜார் பகுதியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் … Read more

கர்நாடக தேர்தல் முடிவு இந்திய அரசியலுக்குக் கிடைத்த வெற்றி: பிரியங்கா காந்தி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு இந்தியாவை ஒன்றிணைத்த அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் –128 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவையான நிலையில் 128 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. பாஜக இதுவரை 60 இடங்களில் வெற்று பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. … Read more