CAPF தேர்வை தொடர்ந்து SSC தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்: மத்திய அரசு

சி.ஆர்.பி.எப். தேர்வைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சி. தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  

குட் நியூஸ்! இனி எஸ்.எஸ்.சி தேர்வை தமிழில் எழுதலாம்!!

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் எஸ்.எஸ்.சி தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மத்திய அரசு பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தேர்வினை நடத்துகிறது. இந்த தேர்வானது இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால், இனி தேர்வு தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு ஒப்புதல் … Read more

புல்வாமா தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் நினைவு இழந்துவிட்டதாக பாஜக கடும் விமர்சனம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் நினைவிழந்துவிட்டார் என்றும், அவர் மனநல மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த இருபெரும் நிகழ்வுகளான சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் புல்வாமா தாக்குதல் ஆகியவற்றின்போது அம்மாநில ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக். 2019 இறுதியில் அவர் கோவா ஆளுநராக மாற்றப்பட்டார். அதன் பிறகு மேகாலயாவுக்கு மாற்றப்பட்ட சத்யபால் மாலிக், கடந்த 2022 அக்டோபரில் ஆளுநர் … Read more

நாடு முழுவதும் வேலை நேரத்தில் மாற்றம்… வெயிலை சமாளிக்க முக்கிய ஏற்பாடு… மத்திய அரசு கடிதம்!

நாடு முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வட மேற்கு இந்தியா, வட கிழக்கு இந்தியா, மத்திய இந்தியா, கிழக்கு கடலோரப் பகுதிகள், இமயமலையை ஒட்டிய பகுதிகள் ஆகியவற்றில் சராசரி வெப்பநிலையை விட அதிகப்படியான வெப்பம் பதிவாகும். அதிகரிக்கும் வெப்பநிலை எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பகல் மற்றும் பிற்பகல் நேரங்களில் வீட்டிற்குள் அல்லது … Read more

சூப்பர் அறிவிப்பு! மாமல்லபுரத்தில் சர்வதேச அலை சறுக்கு போட்டி!!

மாமல்லபுரத்தில் சர்வதேச அலை சறுக்குப் போட்டி ஆகஸ்ட் 14 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளை நடத்தத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 3 முதல் எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாமல்லபுரத்தில் சர்வதேச அலை சறுக்குப் … Read more

பாலியல் தொழில் நடத்திய பிரபல நடிகை கைது!!

மாடல் அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாக பாலிவுட் நடிகை ஆர்த்தி மிட்டல் கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட்டில் கேஸ்டிங் இயக்குனராகவும் நடிகையாகவும் உள்ள ஆர்த்தி மிட்டல், இளம் மாடல்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுவதாக மும்பை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸார் ரகசிய ஆபரேஷனில் ஈடுபட்டனர். போலீஸார் கஸ்டமர் போல் மாறுவேடத்தில் ஆர்த்தியை அணுகினர். இரண்டு நண்பர்களுக்காக இரண்டு மாடல் அழகிகள் வேண்டும் என்று போலீஸ் கூறியதற்கு, ஆர்த்தி ரூ.60,000 பணம் கேட்டுள்ளார். அவரை நம்ப வைக்க … Read more

கரோனா குறித்த பீதி பரவாமல் தடுக்கப்பட வேண்டும்: மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி: கரோனா குறித்த பீதி பரவாமல் தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ஜி20 சுகாதாரப் பணிக் குழுவின் இரண்டாம் அமர்வில் பங்கேற்று மன்சுக் மாண்டவியா உரையாற்றினார். அப்போது, ”கரோனா குறித்த பீதி பரவக் கூடாது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பீதி பரவுவதை தடுக்க வேண்டும். அதேநேரத்தில், கரோனாவுக்கு எதிரான தயார் நிலைகளை மேற்கொள்வதில் சோர்வுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. ஜி20 தலைமைப் பொறுப்பில் இதற்கு முன் … Read more

"ரவுடிகள் வீட்டை விட்டு வெளியேறவே பயந்து நடுங்குகிறார்கள்".. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

லக்னோ: “உத்தரபிரதேசத்தில் தற்போது ரவுடிகள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்து நடுங்குகிறார்கள்.. இனி எந்தவொரு தொழிலதிபரையும், தொழில் நிறுவனங்களையும் மிரட்ட கூட ரவுடிகள் துணிய மாட்டார்கள்” என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். உத்தரபிரதேசத்தில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வந்த அடிக் அகமது போலீஸார் முன்னிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. அதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் அடிக் அகமதின் மகன் ஆசாத், போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் … Read more

கொளுத்தும் வெயில்… பணி நேரத்தை மாற்ற உத்தரவு!!

கடுமையான வெப்பம் நிலவுவதால் தொழிலாளர்களை பாதுகாக்க முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு வெப்ப நிலை இயல்பை விட கூடுதலாக இருக்கும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை சுட்டிக்காட்டி மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹுஜா, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றி அமைப்பது, பணியிடங்களில் குடிநீர் வசதி … Read more

வெப்பத்தில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வரும் வேளையில், பலதரப்பட்ட துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அஹுஜா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் அவர், “வடகிழக்கு இந்தியாவிலும், கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவிலும், நாட்டின் … Read more