இந்தியாவில் அடுத்த 10 நாட்களுக்கு கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும்… ஆனால்…!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது அனைவரின் கவலையையும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அடுத்த 8 முதல் 10 நாட்களுக்கு கோவிட் தொற்று பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஓடும் ரயிலில் பயணி ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை..!!

அசாம் மாநிலம் கவுகாத்தில் இருந்து டெல்லி ஆனந்த் விகார் நோக்கி நார்த் இஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைஹுரி அருகே வந்தபோது ரயிலில் இருந்த பயணி ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதை கண்ட சக பயணிகள் அலறினர். இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுட்ட நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ரயில் நியூ ஜல்பைஹூரி … Read more

பிரதமர் மோடி அரசில் கசப்பான அனுபவம் இல்லை – கேரளாவின் மலங்கரா ஆர்த்தோடக்ஸ் சிரியன் சர்ச் தலைவர் கருத்து

கோட்டயம்: கடந்த வாரம் ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதற்கு முன்னதாக டெல்லியில் நடைபெற்ற ஈஸ்டர் விழாவுக்காக, கேரள சிரியன் சர்ச் தலைவர் 3-ம் பசிலியோ மார்த்தோமா மேத்யூஸ் டெல்லியில் ஒரு வாரம் தங்கி இருந்தார். அப்போது, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சர்ச் குழுவினருடன் மேத்யூஸ் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் கேரளாவின் தேவலோகம் பகுதியில் உள்ள சர்ச்சின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் மேத்யூஸ் கூறியதாவது: பிரதமர் மோடி … Read more

எம்.பி., எம்.எல்.ஏ. வரவேற்பு நிகழ்வில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 2 பேர் பலி..!!

தெலுங்கானா மாநிலம் ஹாமம் மாவட்டம் ஷிமலப்பேடு கிராமத்தில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். அப்போது, எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வரவேற்க கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தனர். அப்போது, பட்டாசு தீப்பொறி அருகில் உள்ள ஒரு குடிசையின் கூரை மீது விழுந்து தீப்பற்றியது. குடிசையில் இருந்த கியாஸ் சிலிண்டரிலும் தீப்பற்றி அது வெடித்து சிதறியது. இதில், குடிசை முழுவதும் தரைமட்டமானது. மேலும், குடிசை அருகே நின்று … Read more

சுற்றுலா பயணிகள் செம குஷி..!! சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு “பீர் பஸ்”..!!

புதுச்சேரி மாநிலம் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக விளங்கி வருவதால் தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பீர் பஸ் எனும் புது சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வருகிற 22ம் தேதியன்று இந்த சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு ஒருநாள் பயணமாக நபர் ஒருவருக்கு ரூ.3,000 வசூலிக்கப்படும். இந்த பஸ்ஸில் வித விதமான உணவுகளை சாப்பிட்டபடி புதுச்சேரியின் அழகை கண்டு ரசிக்கலாம். அதேநேரம் பீர் பஸ் என்பதால் … Read more

பஞ்சாப் ராணுவ முகாமில் 4 வீரர்கள் சுட்டுக் கொலை – தாக்குதல் நடத்திய சக வீரர் யார்?

பதிண்டா: பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.35 மணி அளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து, ராணுவ முகாமை அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர். நுழைவுவாயில்கள் மூடப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, ராணுவ முகாமில் 4 வீரர்கள் இறந்து கிடந்தனர். அவர்கள் அனைவரும் பீரங்கிப் படையை சேர்ந்தவர்கள். ராணுவ வீரர் ஒருவர் … Read more

தேவைப்பட்டால் ஆம் ஆத்மி தலைவர்கள் நாட்டுக்காக உயிரை தர முன்வர வேண்டும் – அர்விந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் தேசிய அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்த சாதனையை கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கொண்டாடுவதற்காக டெல்லியிலுள்ள கட்சி அலுவலகத்துக்கு முதல்வரும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று வந்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட10 ஆண்டுகளிலேயே தேசிய அந்தஸ்து கிடைத்துள்ளது. இது அதிசயம் மற்றும் நம்பமுடியாத சாதனையாகும். இதன்மூலம் நமக்கும், நமது கட்சிக்கும் மிகப்பெரிய பொறுப்பை மக்கள் வழங்கியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் … Read more

பெட்ரோல் நிலையங்களில் பாட்டிலில் எரிபொருள் வழங்க கேரளாவில் தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கவும் சமையல் சிலிண்டர்களை தனியார் வாகனத்தில் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அண்மையில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்ட சம்பவத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். 3 பேரின் உடல்கள் பிறகு தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டன. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ஷாரூக் ஷபி என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் முழு ரயிலையும் எரிக்க சதித் திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் … Read more

பஞ்சாபில் பயங்கரம்.. ராணுவ முகாமில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு.. 4 பேர் பலி.. தீவிரவாத தாக்குதலா..?

சண்டிகர் : பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமுக்குள் இன்று அதிகாலை மர்மநபர்கள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பட்டப்பகலில் ராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதால் பஞ்சாப் முழுவதும் ராணுவத்தினரும், போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாபும் பாதுகாப்பும்.. இந்தியாவிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தல் நிறைந்த மாநிலங்களாக விளங்குவது காஷ்மீரும், பஞ்சாபும் தான். இந்த இரு மாநிலங்களும் பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகே அமைந்திருப்பதால் அடிக்கடி தீவிரவாதிகள் ஊடுருவலும், தாக்குதலும் இங்கு அதிகம் நடைபெறுவது வழக்கம். … Read more

ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தகவல்

புதுடெல்லி: ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று அந்த கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் தலையங்க பக்கத்தில் அவரது கட்டுரை நேற்று வெளியானது. அதில் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தின் தூண்களானநாடாளுமன்றம், சட்டப்பேரவை, அரசு நிர்வாகம், நீதித் துறையை மத்திய அரசு திட்டமிட்டு சீர்குலைத்து வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், பிரிவினைவாதம், பட்ஜெட், அதானி குழும … Read more