ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார். மும்பையில் நடைபெற்ற நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்த அவர், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருவதால் பணப்புழக்கம் அதிகரித்து வருவதாக கூறிய … Read more

‘பிப்பர்ஜாய்’ அதிதீவிரப் புயலாக வலுவடைந்து வடக்கு நோக்கி நகரும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: பிப்பர்ஜாய் புயல் படிப்படியாக அதிதீவிரமடைந்து வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் திங்கள்கிழமை மாலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது செவ்வாய்க்கிழமை காலை வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. பின்னர் இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. அந்தப் புயல் புதன்கிழமை மேலும் வலுவடைந்து தீவிரப் புயலாக மாறியது. இந்த நிலையில் … Read more

தெருநாய் பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் வீடியோ எடுத்த பெண்ணிடம் செல்போன் பிடுங்க முயன்ற முன்னாள் பாஜக எம்.பி.

புதுடெல்லி: தெருநாய் பிரச்சினைகள் தொடர்பான கூட்டத்தில் வீடியோ எடுத்த பெண்ணிடம் செல்போனை பிடுங்க முன்னாள் பாஜக எம்.பி. விஜய் கோயல் முயன்றுள்ளார். இந்நிலையில் தெரு நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது என்று விஜய் கோயல் கூறிய கருத்துக்கு எதிராக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் எம்.பி.யான விஜய் கோயல் டெல்லியில் வசித்து வருகிறார். இவர் வடக்கு டெல்லியில் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வருகிறார். இந்நிலையில் வடக்கு டெல்லியின் மாடல் டவுன் பகுதியிலுள்ள பூங்காவில் தெருநாய்களுக்கு … Read more

பிபர்ஜாய் புயலால் 'பேரழிவு' யாருக்கு? வானிலையை புரட்டிப்போட போகும் முக்கியமான 3 நாட்கள்!

அரபிக் கடலில் நிலைக்கொண்டுள்ள பிபர்ஜாய் புயல் மிகத் தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்தப் புயல் அடுத்த 3 நாட்களுக்கு மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மிகத் தீவிர புயல்தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுப்பெற்றது. தற்போது இந்த புயல் மிகத் தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயல் அடுத்த 3 நாட்களில் மேலும் தீவிரம் அடையும் என இந்திய … Read more

ரயில் விபத்து இழப்பீடு பெற கணவன் இறந்ததாக நாடகமாடியவர் மீது புகார்

புவனேஸ்வர்: இழப்பீடு பெறுவதற்காக ஒடிசா ரயில் விபத்தில் கணவர் இறந்துவிட்டதாகக் கூறி நாடகமாடிய பெண் மீது கணவரே புகார் கொடுத்துள்ளார். ஒடிசாவின் கட்டாக் மாவட்டம், மணியபந்தா பகுதியை சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா. இவர், ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி அடுத்தடுத்து நிகழ்ந்த ரயில் விபத்தில் தனது கணவர் இறந்துவிட்டதாகவும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். மேலும் ஓர் உடலையும் அடையாளம் காட்டியுள்ளார். ஆனால், ஆவணங்களை சரிபார்த்ததில், அவரது கோரிக்கை பொய் எனத் தெரியவந்தது. இதையடுத்து … Read more

Accident Video: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நடந்தபோது ரயிலுக்குள் என்ன நடந்தது? வீடியோ வைரல்

CBI Investigation on Balasore Train Accident Video: பாலசோர் விபத்துக்கு சில வினாடிகளுக்கு முன்பு, ரயிலுக்குள் நிலைமை எப்படி இருந்தது? இறுதித் தருணம் மற்றும் விபத்து நிகழ்ந்ததும் என்ன நடந்தது என்பதைக் காட்டும் வீடியோ வைரலாகிறது

ராகுல், ஸ்டாலின் பங்கேற்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்

பாட்னா: அடுத்த மக்களவை தேர்தலில் பாஜக.,வுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இறங்கியுள்ளார். அதன் அடுத்த கட்டமாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பிஹார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 12-ம் தேதி நடத்த ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். ஆனால், இதற்கான தேதியை தள்ளிவைக்கும்படி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட சில கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன. இந்நிலையில் பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி நேற்று கூறியதாவது: முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம், பாட்னாவில் 23-ம் தேதி … Read more

மிரட்டும் பிபர்ஜாய்.. மிகத் தீவிர புயலாக வலுவடைந்தது!

அரபிக் கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் புயல் மிகத் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. பிபர்ஜாய் புயல் அரபிக் கடலில் இந்த ஆண்டின் முதல் புயலாக பிபர்ஜாய் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு பெங்காலி மொழியில் வங்க தேசம் வைத்துள்ள பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிபர்ஜாய் என்றால் பெங்காலி மொழியில் பேரழிவு என்று அர்த்தம். பெயருக்கு ஏற்றது போலவே மிரட்டி வருகிறது பிபர்ஜாய் புயல். மிக தீவிர புயலாக தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய … Read more

ஒடிசா ரயில் விபத்து | பாதுகாப்பு ஆணையர் விசாரணை மட்டுமே முறையானது

சென்னை: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பாதுகாப்பு ஆணையர் நடத்தும் விசாரணை மட்டுமே முறையான விசாரணையாக இருக்கும் என்று ரயில்வேயில் ஓய்வு பெற்ற நிலைய கண்காணிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரயில்வேயின் ஓய்வு பெற்ற நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் கூறியதாவது: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்தும் விசாரணை மட்டும்தான் முறையான விசாரணை. விபத்து தொடர்பாக முதல் கள நிலவர அறிக்கையே இதுதான். இந்த களநிலவர விசாரணையில் எல்லா துறை அதிகாரிகளும் ஈடுபடுவார்கள். விபத்துகளுக்கு தங்கள் துறை குற்றமில்லை … Read more

மத்திய அமைச்சர் அனுராக் தாக்குரிடம் மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்த 5 நிபந்தனைகள்

புதுடெல்லி: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குரைச் சந்தித்து பேசிய மல்யுத்த வீராங்கனைகளும் வீரர்களும், அவரிடம் 5 நிபந்தனைகளை வைத்துள்ளனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நேற்று இரவு வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில், “மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்சினை தொடர்பாக அவர்களுடன் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று டெல்லியில் உள்ள அனுராக் தாக்குரின் இல்லத்துக்கு மல்யுத்த வீராங்கனை … Read more