TMC, NCP, CPI கட்சிகளின் தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணையம்

பல அரசியல் கட்சிகளின் தேசிய அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை மாலை நீக்கியது. இதில் TMC, NCP, CPI போன்ற கட்சிகளும் அடங்கும். அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியை உள்ளடக்கிய சில அரசியல் கட்சிகளுக்கு  தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 

பொது விடுமுறை அறிவிப்பு!!

ஏப்ரல் 14ஆம் தேதியை மத்திய அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளை பொது விடுமுறையாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இந்த ஆண்டு அதற்கான அறிவிப்பு வெளியாகாமல் இருந்ததால் வேலை நாள் என பலரும் எண்ணினர். சிலர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு … Read more

தென்மேற்குப் பருவமழை 96% வரை பெய்யும்: மத்திய புவி அறிவியல் துறை தகவல்

இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்குப் பருவமழை 96 சதவீதம் வரை பெய்யும் என்றும், குறைந்த மழைப்பொழிவு குறித்து விவசாயிகள் கவலையடையத் தேவையில்லை என்றும் மத்திய புவி அறிவியல் துறைச் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் கூறியுள்ளார். 2023-ம் ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்குப் பருவமழை 96 சதவீதம் வரை பெய்யும். குறைந்த மழைப்பொழிவு குறித்து விவசாயிகள் கவலையடையத் … Read more

சிபிஐ அந்தஸ்து காலி… கம்யூனிஸ்ட்கள் ஏன் வீழ்ந்தார்கள்? 75ல் கிடைச்ச சூப்பர் சான்ஸ்!

இந்தியாவிலேயே மிகவும் பழமையான கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெருமையை பெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இது 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் சுதந்திரத்தை வாங்கி தந்த பெருமையுடன் விளங்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒருகாலத்தில் மிகப்பெரிய சவாலாக திகழ்ந்தது. உலகிலேயே தேர்தல் மூலம் ஆட்சி அமைத்த கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெருமையை கேரள மாநிலத்தில் நம்பூதிரிபாட் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி படைத்தது. கம்யூனிஸ்ட்கள் ஆதிக்கம் அப்போது மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 60 இடங்களை கைப்பற்றி கேரளாவில் ஆட்சி … Read more

மரணம் குறித்து தெரிந்ததும் இளம் மருத்துவர் செய்த செயல்..! கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி கதை!

Interesting Story In Tamil: தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மருத்துவர் ஒருவர், தனது இறுதிச்சடங்கு முதற்கொண்டு முன்பே ஏற்பாடு செய்துவிட்டு சென்ற சம்பவம் சோகத்தையும், அதே நேரம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலனை கடத்தி நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலி!!

முதல் காதலனை கடத்தி நிர்வாணமாக்கி சித்திரவதை செய்து அதை வீடியோ எடுத்த காதலியை காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் வர்க்கலா பகுதியை சேர்ந்த லட்சுமி பிரியா (19) என்ற இளம்பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரும் காதலித்தனர். இந்நிலையில் லட்சுமி பிரியாவுக்கு கல்லூரியில் படிக்கும் இன்னொரு மாணவருடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த மாணவரை லட்சுமிபிரியா காதலிக்க தொடங்கினார். இதனால் முதல் காதலனை சந்திப்பதை தவிர்த்தார். … Read more

“நான் நடக்க வேண்டிய பாதை இதுதான்…” – வயநாடு பொதுக் கூட்டத்தில் பாஜகவை சாடிய ராகுல் காந்தி பேச்சு

வயநாடு: “எனது எம்.பி. பதவி, வீட்டை அவர்கள் (பாஜக) பறிக்கலாம் அல்லது என்னைச் சிறையில் அடைக்கலாம். ஆனால், நான் வயநாடு மக்களுக்காகவும், இந்திய மக்களுக்காக இயங்குவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாது” என்று கடந்த மக்களவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்ற தொகுதியான வயநாட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். கேரளாவில் உள்ள வயநாட்டில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை, காங்கிரஸ் பேரணியும் பொதுக் கூட்டமும் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இந்தப் … Read more

எடப்பாடிக்கு புதிய தலைவலி… கர்நாடகா தேர்தல் முடிவால் வரும் சிக்கல்… கறார் பிளானில் பாஜக!

தென்னிந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என ஆளும் பாஜக தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. ஆனால் சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவிக்கின்றன. இதற்கிடையில் கிங் மேக்கராக ஆதிக்கம் செலுத்த மதச்சார்பற்ற ஜனதா தளம் வியூகம் வகுத்துள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் இதனால் கர்நாடக தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இங்கு பெறும் வெற்றி அடுத்த … Read more

பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின்கள்… மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரத்தை நிர்வகிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) மற்றும் தேசிய மாடலை தயார் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் திங்களன்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

கர்நாடகாவில் ராகுல் காந்தி பொதுக் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு: காங். கட்சியினர் அதிருப்தி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, … Read more