கார்கேவுக்கு கொலை மிரட்டல்: காங். புகார் மீதான விசாரணைக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதி

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவைக் கொலை செய்ய பாஜக சதி செய்ததாக காங்கிரஸ் கூறி இருப்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா, சித்தாப்பூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட், மல்லிகார்ஜுன கார்கேவை அவதூறான வார்த்தைகளில் திட்டி அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவேன் என்று பேசும் ஆடியோவை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “காங்கிரஸ் … Read more

‘இதெல்லாம் ரொம்ப ஓவர்’.. பிரதமர் பேச்சை புறக்கணித்த மாணவர்கள்.. Fine போட்ட பள்ளி.!

பிரதமரின் மன் கி பாத் உரையைக் கேட்காத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. 100வது மன் கி பாத் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்தவகையில் பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடைபெற்றது. அதில் பல முக்கிய காரணிகள் குறித்து பிரதமர் மோடி பேசினார். 100வது … Read more

எல்லையில் அமைதி ஏற்படாத நிலையில், சீனாவுடனான உறவுகள் இயல்பு நிலையில் இருக்காது – ஜெய்சங்கர்

எல்லையில் அமைதி ஏற்படாத நிலையில், சீனாவுடனான உறவுகள் இயல்பு நிலையில் இருக்காது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு முடிவடைந்த நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், எல்லைப் பகுதியில் அசாதாரண நிலை நீடிப்பதாகத் தெரிவித்தார். சீனாவுடனான உறவுகள் இயல்புநிலையில் இல்லை என்றும், எல்லையில் பிரச்சினைகள் தீராத வரை அது இயல்புக்கு வராது என்றும் தெளிவுபடுத்தினார். எல்லைப் பிரச்சினை குறித்து சீனாவுடன் வெளிப்படையான முறையில் விரிவாக விவாதித்து … Read more

மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழப்பு; முகாம்களில் 13,000 மக்கள் தங்கவைப்பு

இம்பால்: மணிப்பூரில் நடந்த கலவரங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் இம்பாலில் இன்று (சனிக்கிழமை) கடைகள், சந்தைகள் திறந்திருந்தன. நகரில் இயல்பு வாழ்க்கை மெதுவாகத் திரும்பி வருகிறது. ராணுவத்தினரின் உறுதியான நடவடிக்கையால் அமைதி திரும்பி வரும் நிலையில், சாலைகளில் வாகனங்கள் ஓடத் தொடங்கின. பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்தனர், 54 பேர் உயிரிழப்பு: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை நடந்து இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், ராணுவத்தினரின் நடவடிக்கைகளால் மாநிலத்தில் சற்றே … Read more

மண்டையில் தையல் போடாமல் 'ஃபெவிக்விக்' தடவிய டாக்டர்… அலறிய சிறுவன்.. அதிர்ந்த பெற்றோர்!

தலையில் அடிப்பட்டு வந்த சிறுவனுக்கு தையல் போடாமல் கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 5 ரூபாய் ஃபெவிக்விக் பேஸ்ட்டை ஒட்டிய தனியார் மருத்துவமனையின் சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது. கர்நாடகா மாநிலம் ரைச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்கசூகூரைச் சேர்ந்த தம்பதி வம்சிகிருஷ்ணா மற்றும் சுனிதா. இவர்கள் தெலுங்கானா மாநிலம் அய்சாவில் நடந்த உறவினர் திருமணத்துக்கு சென்றுள்ளனர். அப்போது வம்சிகிருஷ்ணா – சுனிதா தம்பதியின் ஏழு வயது மகன் வெளியில் விளையாடி கொண்டிருந்தபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளது. சிறுவனின் இடது … Read more

நடு வானில் கொட்டிய தேள்… ஏர் இந்தியா பயணிக்கு நேர்ந்த பயங்கர அனுபவம்!

ஏர் இந்தியாவின் நாக்பூர்-மும்பை விமானம் AI 630 ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் பயணம் செய்த பெண்ணை திடீரென தேள் ஒன்று கடித்துள்ளது.

ஆம்னி பேருந்தில் ஜெர்மன் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது..!

ஓடும் ஆம்னி பேருந்தில் ஜெர்மன் பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த பெங்களூர் இளைஞரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் தன்னார்வலராக சேவையாற்றி வருகிறார். பெங்களூருக்கு சுற்றுலா செல்வதற்காக ஆம்னி பேருந்தில் கடந்த ஏப்ரல் மாதம் சென்ற போது, தோழியுடன் வந்திருந்த இளைஞர் மதுபோதையில் ஜெர்மன் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்பெண் கூச்சலிடவே, சக பயணிகள் இளைஞரை தாக்கி தோழியுடன் சேர்த்து பேருந்திலிருந்து … Read more

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு ..!!

சுதிப்தோ சென் இயக்கியுள்ள படம் தி கேரளா ஸ்டோரி.அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலரில், கேரளாவில் மதமாற்றம் செய்யப்பட்ட 32 ஆயிரம் பெண்களின் கதை என்ற வசனம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் படம் உருவாக்கப்பட்டு இருப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் நீட்சியாக தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, படம் கேரளாவில் வெளியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஏன் … Read more

“நான் ஜோதிடர் அல்ல, ஆனாலும் கர்நாடகாவில் காங். தோற்கும்” – ஸ்மிருதி இரானி கணிப்பு

பெங்களூரு: “நான் ஜோதிடர் அல்ல. ஆனாலும் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் தோற்கும்” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். கர்நாடக தேர்தலையொட்டி மத்திய குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருந்தி இரானி பெங்களூருவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்துக்களை வெறுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. பஜ்ரங் தள அமைப்பை ஒரு தீவிரவாத அமைப்புடன் ஒப்பீடு செய்ததன் மூலம் ஹனுமான் பக்தர்களை அக்கட்சி அவமதித்துள்ளது. ஜெய் … Read more

Manipur: மணிப்பூர் வன்முறையில் 54 பேர் படுகொலை… பலர் மருத்துவமனையில் அனுமதி!

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. ஏராளமான வீடுகள், கடைகள், கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. King Charles III crowned: இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடினார் சார்லஸ்… ராணி ஆனார் கமிலா! மாநிலம் முழுவதும் கலவரம் பற்றியதால் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான ராணுவத்தினரும் ஆயுதம் ஏந்திய மத்திய படையினரும் … Read more