கொரோனா தொற்றுக்க ஒரே நாளில் 9 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் 9 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் 3095 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று சற்று குறைந்து 2994 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் 9 பேர் பலியானார்கள். டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், கேரளா மாநிலங்களில் தலா 2 பேரும், குஜராத்தில் ஒருவரும் பலியானார்கள். இதனால் ஒட்டுமொத்த … Read more

வைக்கம் போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து வெல்ல வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம்: வைக்கம் சத்யாகிரக போராட்டம் போல் இன்றைய சவால்களையும் இணைந்து போராடி வெல்ல வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார். வைக்கம் சத்தியாகிரக போராட்ட நூற்றாண்டு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியது: தமிழ்நாட்டில் சட்டசபை நடைபெறும் நேரமாக இருந்த போதிலும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வந்தது வைக்கம் சத்யாகிரக போராட்டத்திற்கு அவரும், தமிழ்நாடு அரசும் கொடுக்கும் முக்கியத்துவம் தான் காரணமாகும். அதற்காக நான் தமிழக … Read more

ஆயுதமேந்தி போராடும் குழுக்கள் வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் – அமித்ஷா

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதமேந்தி போராடும் குழுக்கள் வன்முறையை கைவிட்டு, ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார். மிசோரமின் ஐஸ்வாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு காலத்தில் வன்முறையும், அசாதாரண சூழலும் நிலவி வந்த மிசோரமில், தற்போது அமைதி தவழ்வதாக குறிப்பிட்டார். இந்தியாவில் ஜனநாயகத்திற்கு இதுவே சான்று என தெரிவித்த அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களிலுள்ள போராளிக்குழுக்கள் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கும், அவர்கள் சார்ந்த பகுதிகளின் வளர்ச்சிக்கும் பங்களிக்க … Read more

மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடி: 2ம் இடம்பிடித்தது

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1.60 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக ஒன்றிய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், ‘மார்ச் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 122 கோடி. இதில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.29,546 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.37,314 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.82,907 கோடி. செஸ் வரி ரூ.10,355 கோடி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட நடப்பாண்டு   13 சதவீதம் அதிக ஜிஎஸ்டி … Read more

மும்பை வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் சில்மிஷம்

மும்பை: மும்பை வந்த விமானத்தில் குடிபோதையில் விமான பணிப்பெண்ணிடம்  அத்துமீறி நட ந்துகொண்ட ஸ்வீடனை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் மும்பை நோக்கி இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் ஸ்வீடனை சேர்ந்த ஹரால்ட் ஜோனஸ் என்ற பயணியும் வந்துள்ளார். அப்போது ஜோனஸ் பயணிகளின் அனைவரின்  முன்னிலையிலும் விமானப்பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.   மும்பை   போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்தேரி … Read more

பூட்டான் மன்னர் நாளை வருகை

புதுடெல்லி: பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக். இவர் நாளை இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக இந்தியா வரும் அவர்  இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஏப்.5 வரை இந்தியாவில் இருக்கும் அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியுடன்  பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

பாஜ ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்!; காங்கிரசுக்கு ஆதரவாக ஓரணியில் கூடும் எதிர்க்கட்சிகள்: ராகுல் சந்திக்கும் வழக்குகள்

டெல்லி: பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையாகி விட்டது பாஜவின் கதை. எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்காக பல அதிரடிகளை காட்டிய பாஜ, ராகுல் விஷயத்தில் அவசரப்பட்டதால் அவர்கள் செய்த வினை பூமராங்க் போல அவர்களுக்கு எதிராக திரும்பி நிற்கிறது. ராகுல் காந்தியை பொறுத்த வரை காங்கிரசில் வலுவான தலைவராக இருந்தாலும், பாஜ அவரை எப்போதும் ஏளனம் செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்தது. 2004ல் அரசியலில் தீவிரமாக களமிறங்கிய ராகுல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2வது 5 … Read more

கர்நாடகா | பிரதமர் மோடி படத்துக்கு முத்தம் கொடுத்த முதியவர் – சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற மே 10-ம்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியை கைப்பற்ற ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மூன்று கட்சிகளை சேர்ந்த முக்கியத் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆளும் பாஜக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த … Read more

குறைந்த அளவு மருந்து இருப்பு வைத்திருப்பதால் மருத்துவர்களை தண்டிக்க முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: குறைந்த அளவு மருந்து இருப்பு வைத்திருப்பதால் மருத்துவர்களை தண்டிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறைந்த அளவிலான மருந்துகளை மருத்துவர்கள் இருப்பு வைத்திருப்பது என்பது குற்றமாகாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீதான வழக்கில் நடவடிக்கை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

மேற்கு வங்கத்தில் ரம்ஜான் நோன்பு கால சலுகை – முஸ்லிம் அரசு ஊழியர்கள் பிற்பகல் 3.30 மணிக்கு வீடு திரும்ப அனுமதி

புதுடெல்லி: கடந்த வாரம் துவங்கிய ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் நோன்பு இருப்பது வழக்கம். சூரியன் உதயம் முதல் அஸ்தமனம் வரை கடைபிடிக்கப்படும் நோன்பினால் பலரும் சோர்ந்து விடுவது உண்டு. இதற்காக முஸ்லிம்கள் தங்கள் அன்றாடப் பணியிலிருந்து சற்று முன்னதாக மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் மதரஸா கல்வித் துறையின் பொறுப்பை முதல்வர் மம்தா கடந்த மார்ச் 26-ல் ஏற்றார். மறுநாளே முஸ்லிம் அரசு ஊழியர்களுக்காக … Read more