டெல்லி சம்பவம்: காதல் முறிவால் கொலை; முதற்கட்ட விசாரணையில் இளைஞர் தகவல்
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவரை படுகொலை செய்த இளைஞர், தங்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டதாலேயே கொலை செய்ததாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியீல் கடந்த 28 ஆம் தேதி இரவு பலரது முன்னிலையில் 16 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் ஷாஹில் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் வெளியாகியுள்ளன. … Read more