மோடி அரசின் 9 முக்கிய சாதனைகளை பட்டியலிட்ட பாஜக மாநிலச் செயலாளர்..!!

பாஜக மாநிலச் செயலாளர் டால்பின் ஸ்ரீதரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நரேந்திர மோடி அரசு பதவியேற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து, முக்கியமான ஆண்டாக பார்க்கப்படும் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில், பாஜக தனது பணிகளை முந்தைய காங்கிரஸ் கால ஆட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்து தனது தனது தனிப்பெரும் சாதனைகளை புள்ளி விபரங்களுடன் கூறியுள்ளது. ஒன்பது ஆண்டுகள், ஒன்பது அதிசயங்கள் என்ற பெயரில் சேவா, சமர்பன், கரிப் கல்யாண்’ என்ற கோஷத்துடன் அரசின் ஒன்பது ஆண்டு … Read more

மக்களவையில் செங்கோலை நிறுவியது பொருத்தமானது

சீனா தன்னை ‘‘சீன மக்கள் குடியரசு’’ என அழைத்துக்கொள்கிறது. குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்றால் மட்டுமே ஒரு நாடு ஜனநாயக நாடாக மிளிர முடியும். எனவே சீனா ஜனநாயக நாடாக முடியாது. பரம்பரையாக வரும் ராஜா அல்லது ராணியை தலைமையாக கொண்டிருக்கும் ஒரு நாடு குடியரசாக முடியாது. இங்கிலாந்து ஜனநாயக நாடாக திகழ்ந்த போதிலும், மன்னர் ஆட்சி நடைபெறுவதால் அந்த நாடு குடியரசாக முடியாது. ஆனால் இந்தியா ஒரே சமயத்தில் … Read more

விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி எப்12: என்னென்ன சிறப்பம்சங்கள்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (ISRO) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ (GSLV F12) ராக்கெட்டை இன்று (மே 29) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இந்த ராக்கெட் 51.7 மீட்டர் உயரமும் 420 டன் உந்துவிசை எடையும் கொண்டது. ஜி.எஸ்.எல்.வி., வரிசையில் இது 15ஆவது ராக்கெட் ஆகும். இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட ‘என்.வி.எஸ்.-01’ … Read more

அதிர்ச்சி சம்பவம்..!! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மத்திய உணவில் பாம்பு..!

பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் பார்பிஸ்கஞ்ச் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மத்திய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பார்பிஸ்கஞ்ச் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நேற்று முன்தினம் மத்திய உணவாக கிச்சடி வழங்கப்பட்டது. இந்த உணவை சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்கொண்ட நிலையில், அதில் ஒரு மாணவருக்கு பறிமாறிய சாப்பாட்டில் பாம்பு ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது … Read more

கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை கௌரவித்த பிரதமர் மோடி..!!

இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் 96 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். முன்னதாக நாடாளுமன்ற கட்டடத்திற்குள் வருகை தந்த பிரதமர் மோடியை … Read more

புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தடுத்து நிறுத்தம்

புதுடெல்லி: பாஜக எம்.பி. மீதான பாலியல் புகாரில் அவர் மீது நடவடிக்கை கோரி புதிய நாடாளுமன்றக் கட்டிடம் நோக்கி பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை டெல்லி போலீஸார் தடுத்து நிறுத்தினர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ளவர் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர், இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த … Read more

இன்று விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி- எஃப்-12 ராக்கெட்..!

தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிப்பதற்கான என்.வி.எஸ்-01 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை சுமந்தபடி இஸ்ரோவின் ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12’ ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. இதற்கான 27½ மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ஏவுதளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு, ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக் கோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் … Read more

எனது நாடாளுமன்றம், எனது பெருமை – புதிய நாடாளுமன்ற வீடியோவை பகிர பிரதமர் அழைப்பு

புதுடெல்லி: எனது நாடாளுமன்றம், எனது பெருமை என்ற ஹேஷ்டேக்குடன் புதிய நாடாளுமன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவியேற்றது. அதன்பிறகு இந்தியா முழுவதும் ஆங்கிலேய ஆட்சி சுவடுகளின் அடையாளத்தை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி பிரதமர் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலை, லோக் கல்யாண் சாலை என்று பெயர் … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினர் பங்கேற்பு..!

மக்களவை தலைவர் இருக்கை அருகே இன்று நிறுவப்பட்ட செங்கோலை 1947ம் ஆண்டு உருவாக்கி அளித்த தமிழகத்தை சேர்ந்த உம்மிடி பங்காரு செட்டி நிறுவன குடும்பத்தினர் 15 பேர், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். ஆங்கிலேயர்களிடம் இருந்து  இந்தியா சுதந்திரம் அடைந்ததை குறிக்கும் வகையில், அந்த செங்கோல் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டனால், முதல் பிரதமராக பதவியேற்ற நேருவிடம் 1947ம் ஆண்டு அளிக்கப்பட்டது. அந்த செங்கோலை உருவாக்கி அளித்த  உம்மிடி பங்காரு செட்டி நிறுவன … Read more

செங்கோல் பற்றிய தகவல் பொய் என கூறிய ஜெய்ராம் ரமேஷுக்கு அமித்ஷா கண்டனம்

புதுடெல்லி: செங்கோல் பற்றி கூறப்படும் தகவல்கள் பொய் என கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கோல் பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: தமிழகத்தில் அரசியல் செய்வதற்காக பிரதமரும் அவரது ஆதரவாளர்களும் செங்கோலை பயன்படுத்துகின்றனர். தங்களின் நோக்கங்களுக்கு பொருந்தும் வகையில் உண்மைகளை இவர்கள் திரித்து கூறுகின்றனர். கம்பீரமான செங்கோலை, தமிழகத்தைச் சேர்ந்த மத அமைப்பு, சென்னையில் தயாரித்து, அதை ஜவஹர்லால் … Read more