பி.எஃப் வட்டி விகிதம் உயர்வு
டெல்லி: பி.எஃப் வட்டி விகிதம் 8.1%ல் இருந்து 8.15%ஆக அதிகரிக்கப்படுவதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. பி.எஃப் வட்டி வட்டி உயர்வால் நாடு முழுவதும் சுமார் 7 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
டெல்லி: பி.எஃப் வட்டி விகிதம் 8.1%ல் இருந்து 8.15%ஆக அதிகரிக்கப்படுவதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது. பி.எஃப் வட்டி வட்டி உயர்வால் நாடு முழுவதும் சுமார் 7 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
புதுடெல்லி: டெல்லி மதுபான விற்பனை கொள்கை ஊழல் வழக்கில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினரு மான கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை கவிதாவிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கைது நடவடிக்கையிலிருந்து பாதுகாக்கவும், அமலாக்கத் துறையின் தொடர் விசாரணையிலிருந்து விலக்குக் கோரியும் கவிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அஜய் ரஸ்தோகிதலைமையிலான அமர்வு, … Read more
புதுடெல்லி: தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி எழுதுப்பூர்வமான பதில்: ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்களில் கலாச்சார நிகழ்ச்சிகளை அனுமதிப்பது குறித்து ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. இருப்பினும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் நினைவுச்சின்னங்கள் அமைந்துள்ள நிலத்தில் வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்க விரும்பவில்லை. இருப்பினும் உரிய விதிவிலக்கு அடிப்படையில் குறிப்பிட்ட … Read more
கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் பிரதமர் நரேந்திரமோடி, நீரவ்மோடி, லலித் மோடி ஆகியோரை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசிய பேச்சு தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் பூர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படது. இந்த நிலையில் 2 ஆண்டுகள் தண்டணை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி … Read more
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பசுக்களுக்கு ஒரு நாள் வார விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் லடேஹர் அருகிலுள்ள சக்லா பஞ்சாயத்துக்கு உட்பட்ட துரிசோத் உள்ளிட்ட12 கிராமங்களில் உள்ள பசுக்கள், கறவை எருமை மாடுகளுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கும் பழக்கம் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது. மாடுகளை தினந்தோறும் வேலை வாங்குவதாலும், பால் கறப்பதாலும் அவை சோர்ந்து விடுகின்றன. இதனால் அவற்றுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை அளித்து வருவதாக கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். துரிசோத் கிராமத்தைச் … Read more
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தினசரி பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. விரைவில் கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சூழலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அலிபிரி இலவச டோக்கன்அதில், அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்தே வரும் பக்தர்களுக்கு மீண்டும் இலவச டோக்கன்கள் (Divya … Read more
பெங்களூரு: லஞ்ச புகாரில் சிக்கிய கர்நாடக பாஜ எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவன அலுவலகத்தில் தனியார் நிறுவன பங்குதாரரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரியும் பாஜ எம்எல்ஏ மாடால் விருபாட்சப்பாவின் மகனுமான பிரசாந்த் மாடாலை லோக்ஆயுக்தா போலீசார் கடந்த 2ம் தேதி கைது செய்தனர். அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.8.10 கோடி பணம், தங்கம், … Read more
புதுச்சேரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. புதுச்சேரி வில்லியனூர் பொறையூரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் பிரதீஷ் (23). இவர் அப்பகுதியில் பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார், அப்போது பேருந்தில் பள்ளிக்கு செல்லும் 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இந்த நிலையில், … Read more
நாசிக்: மக்களவை எம்.பி. பதவியை இழந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார். இதுகுறித்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று கூறியதாவது: அந்தமான் சிறையில் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு பல கொடூரங்களை 14 ஆண்டுகள் சாவர்க்கர் அனுபவித்தார். அதுவும் ஒருவிதமான தியாகம்தான். சாவர்க்கரை இழிவுபடுத்துவதை எப்போதும் சகித்துக் கொள்ள … Read more
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒன்றிய அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. கொரோனா மூன்று அலைகள் காரணமாக நாடு முழுவதும் மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினர். உறவுகளை இழந்து தவித்தனர். கொரோனா பொது முடக்கத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். பல ஆண்டுகள் சேமிப்பு கரைந்து கடனாளிகளாக மாறினர். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பின்னரே பாதிப்பு கட்டுக்குள் வந்தது. உயிரை காப்பாற்றிய தடுப்பூசிகள்! இரண்டு டோஸ் தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் … Read more