“அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சி அடைய செய்வதே பாஜகவின் செயல்திட்டம்” – பிரதமர் மோடி

இந்தியாவை வறுமையில் இருந்து விடுவித்து, அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை வளர்ச்சியடையச் செய்வதை செயல்திட்டமாக கொண்டு பாஜக செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி, அம்மாநில பாஜக தொண்டர்களிடையே காணொலிக்காட்சி வாயிலாக பேசிய பிரதமர், இதர கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதை செயல் திட்டமாக கொண்டுள்ளதாகவும், பாஜக இளைஞர்களின் திறனை முறைப்படுத்தி பயன்படுத்த செயல்திட்டம் வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி ஊழலை ஒழிப்பதற்கு விருப்பம் காட்டாமல் இருந்ததாகவும், அக்கட்சியே ஊழலின் ஆதாரமாக திகழ்ந்ததாகவும் அவர் … Read more

பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் “சூலா அடுப்புகள்”..!!

பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கினை எரிக்கும் சூலா அடுப்புகளை 34 ஆயிரம் மகளிருக்கு இலவசமாக வழங்கும் பணி புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. ஒரு அடி அகலம் ஒன்றரை அடி உயரம் கொண்ட களிமண் மூடியுடன் கூடிய இந்த மண் அடுப்பில் நாப்கினை போட்டு எரித்தால் எவ்வித புகையும் ஏற்படாமல் சாம்பல் ஆகிவிடும்.இதை கீழ்புறமாக எடுத்து வெளியே கொட்டி விடலாம். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அடுப்புகளை தயாரிக்கும் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். சூலா அடுப்புகளை தயாரிக்கும் பணி சுடுமண் சிற்பக் … Read more

கர்நாடகாவில் தோசை சுட்டு வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி!

பெங்களூரு: கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மைசூருவில் உள்ள உணவகத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார். கர்நாடகாவில் வருகிற மே 10‍-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன் தினம் மைசூரு வந்தார். நேற்று காலையில் கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் பிரியங்கா காந்தி ஆலோசனை நடத்தினார். பின்னர் மைசூருவில் பிரபலமான … Read more

இந்தியாவிலேயே முதல்முறை..!! 2 மணி நேரம் வேலை குறைப்பு..!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுத்துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் என்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.அதாவது 8 மணி நேரத்திற்கு பதில் 6 மணி நேரம் வேலை பார்த்தல் போதும். அதன்படி காலை 9 மணிக்கு வேலை என்பதை 11 மணி என்று மாற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவிட்ட கேஜ்ரிவால் – பாஜக குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி வரிப் பணத்தை செலவிட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அர்விந்த் கேஜ்ரிவால், அரசியலுக்கு வந்தபோது நேர்மை மற்றும் எளிமையை ஊக்குவிப்பேன் என்றார். ஆனால் அதை அவர் மறந்துவிட்டார். தன்னை மகாராஜா என நினைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆர்வமாக இருக்கிறார். கேஜ்ரிவால் தனது … Read more

பெங்களூரு – சென்னை ஒகாலிபுரம் காரிடர் பணிகள் எப்போது நிறைவேறும்? ரயில்வே பதில்

Bengaluru Chennai Pending Works: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பெங்களூரு-சென்னை வழித்தடங்களில் உள்கட்டமைப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும்

நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த காவலரின் உடலை சுமந்து சென்ற முதலமைச்சர் பூபேஷ் பாகல்

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிர்நீத்த மாவட்ட ரிசர்வ் காவலரின் உடல் இருந்த சவப்பெட்டியை முதலமைச்சர் பூபேஷ் பாகல் தோளில் சுமந்து சென்றார். தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் 10 பேர் உள்பட 11 உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு இன்று துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதனை அடுத்து, மாவட்ட ரிசர்வ் காவலரின் உடலை பூபேஷ் பாகல் தோளில் சுமந்து சென்றார். உயிர்நீத்தவர்களின் தியாகம் வீண் போகாது என்றும் … Read more

“விரக்தியின் வெளிப்பாடு” – காங். பற்றிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடி

புதுடெல்லி: “அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மோடியும் விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக தரக்குறைவான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்” என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். கர்நாடகா தேர்தல் தொடர்பாக பாஜக பூர் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பிரதமர், “காங்கிரஸுக்கு வாக்களித்த மக்கள், அக்கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக காத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இனி வாக்குறுதிகள் … Read more

பிரதமர் மோடி விஷபாம்பு போன்றவர்; அவருடன் பயணித்தால் மரணம் நிச்சயம் -கார்கே சர்ச்சை

Karnataka Election 2023 Updates: பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர். அதைத் தொட முயன்றால் செத்துவிடுவீர்கள் எனப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

7 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 4 பேர் காயம் – 12 வாகனங்கள் சேதம்

மகாராஷ்டிர மாநிலத்தில் 12 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். மும்பை – புனே விரைவுச்சாலையில் கோபோலி என்ற இடத்தில் இந்த விபத்து நேரிட்டது. டிரக் ஒன்றின் பிரேக் செயலிழந்ததால் கார் மீது மோதிய நிலையில் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. இந்த விபத்தில் 7 கார்கள் உள்ளிட்ட 12 வாகனங்கள் சேதமடைந்ததாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். விரைவுச்சாலையில் நேரிட்ட இந்த விபத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. … Read more