இந்து கோயில்கள் மீதான தாக்குதல்: ஆஸ்திரேலிய பிரதமரிடம் மீண்டும் முறையிட்ட பிரதமர் மோடி

சிட்னி: ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்து கோயில்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்தும், அந்நாட்டில் காலிஸ்தான் ஆதரவு சக்திகளின் செயல்பாடுகள் குறித்தும் அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸிடம் பிரதமர் மோடி இன்று மீண்டும் இந்தியாவின் கவலைகளை தெரிவித்தார். மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கிறார். அதன்படி, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸும் பிரதமர் மோடியும் இன்று (புதன்கிழமை) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தினர். பரந்த அளவிலான இந்தப் பேச்சுவார்த்தையில், இருதரப்பு வர்த்தக உறவுகளை குறிப்பிடத்தக்க … Read more

இந்து கோயில்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும்… பிரதமர் மோடியிடம் ஆஸி. பிரதமர் உறுதி

ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி அதற்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடியிடம் அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உறுதியளித்துள்ளார். 3 நாள் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிட்னி பாதுகாப்பு படையினரின் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீசும், பிரதமர் மோடியும் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். அப்போது ஆஸ்திரேலியாவுக்கு இந்திய மாணவர்கள் கல்வி கற்க செல்வதையும், தொழிலதிபர்களின் … Read more

சர்வதேச சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் முதல் 50 இடங்களில் காஷ்மீர் இடம்பெறும்: ஜி20 கூட்டத்தில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நம்பிக்கை

ஸ்ரீநகர்: சர்வதேச சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் இடம்பிடிக்கும் என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான ஜி-20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேசியதாவது: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைதி திரும்பத்தொடங்கியுள்ளது. யூனியன் பிரதேசத்தில் புதிதாக தொழிற்சாலைகள் வரத்தொடங்கி உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இங்கு முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். … Read more

வெறித்தனமாக பெய்த மழை.. மூழ்கியது பெங்களூர் நகரம்.. முதல்வர் சித்தராமையா அவசர ஆலோசனை

பெங்களூர்: கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கடந்த 4 நாட்களாக கொட்டி வரும் கனமழையால் அந்நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த மழை பாதிப்பில் இருந்து பெங்களூரை மீட்பது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தை கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூட்டினார். கர்நாடகாவின் பல மாவட்டங்களில் பருவமழைக் காலத்துக்கு முன்கூட்டியே மழை வெளுத்து வாங்கி வருகிறது. பெங்களூரில் கடந்த ஒரு மாதக்காலமாகவே விட்டுவிட்டு … Read more

காஷ்மீரில் G20 … இந்தியாவிற்கு எதிராக விஷத்தை கக்கும் பாகிஸ்தான்!

சர்வதேச அளவில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் இந்த ஆண்டு தலைமையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறை சார்ந்த பணிக்குழுக் கூட்டம் இன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெறுகிறது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்க பல்வேறு எதிர்கட்சிகள் முடிவு

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்க பல்வேறு எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் 28ந் தேதியன்று பிரதமர் மோடி திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விவாதித்தாகத் கூறப்படுகிறது. இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் … Read more

நிர்வாக வசதிக்காகவே ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “ரூ.2,000 திரும்பப் பெறுதல் தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிவிக்கை மற்றும் எஸ்பிஐயின் ஆதாரம் இல்லாமல் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு ஊழலை ஒழிக்க இயற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிரானவை” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி … Read more

இனி இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய தரச்சான்று அவசியம்..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் காம்பியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனமே உறுதி செய்தது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம் என்றும், ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் மாதிரியை குறிப்பிட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும். வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது என மத்திய அரசு கூறியுள்ளது. இது குறித்து, வெளிநாட்டு … Read more

புதிய பார்லி. கட்டிடம் பிரதமர் மோடி, ஓம் பிர்லா முன்னிலையில் நாட்டுக்கு அர்ப்பணிப்பு.!!

நாடாளுமன்ற புதிய கட்டிடம் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 888, மாநிலங்களவையில் 384 என இருக்கைகள் அமைகின்றன இந்நிலையில், நாடாளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ம் தேதி திறக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் சமீபத்தில் தெரிவித்தன. மக்களவை செயலகமும் சமீபத்தில் இதனை உறுதிப்படுத்தியது. எனினும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமரால் அல்ல என்றும் ராகுல் காந்தி சமீபத்தில் கூறினார். இதனால் சர்ச்சை … Read more

மக்களவை தேர்தல் 2024 – காங்கிரஸுக்கு நிபந்தனை விதிக்க எதிர்க்கட்சிகள் ஆதரவை தேடும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்

புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி புதிய உருவம் எடுக்கிறது. இதில், காங்கிரஸுக்கு முன் நிபந்தனைகள் விதிப்பது தொடர்பாக பிற எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால். பாஜகவிற்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் களம் இறங்கியுள்ளார். காங்கிரஸுடன் கைகோக்க திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, பாரத் ராஷ்டிர சமிதியின் கே.சந்திரசேகர ராவ், ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் … Read more