லட்சத்தீவு எம்.பி முகமது பைசல் தகுதி நீக்கம் ரத்து; ராகுல் காந்திக்கும் சூப்பர் வாய்ப்பு!

காங்கிரஸ் எம்.பியாக இருந்த ராகுல் காந்தியின் பதவி தகுதிநீக்க அடிப்படையில் பறிக்கப்பட்டது. இதன் பின்னணியில் 2019 மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரச்சாரம் முக்கியமான விஷயமாக அமைந்தது. அப்போது, தவறு செய்பவர்கள் அனைவரும் தங்கள் பெயருக்கு பின்னால் ’மோடி’ என்ற பெயரை வைத்துக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். அவதூறு வழக்கு இதனை எதிர்த்து பாஜக பிரமுகர் தொடுத்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக … Read more

பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை இடையிலான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் உண்ணாவிரதம்-பலரது உடல்நிலை பாதிப்பு

காளஹஸ்தி : திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி அடுத்துள்ள ஏர்பேடு மண்டலம் பூதலப்பட்டு – நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை இம் மாதம் 18 ஆம் தேதி தனியார் நிறுவனத்தினர் மூடப்பட்தோடு வருவாய் மற்றும் போலீசார் ஆதரவோடு நெடுஞ்சாலைக்கு குறுக்காக (தடுப்பு) சுவரை அமைத்து விட்டனர். இதனால் சிந்தேப்பள்ளி கிராமத்திற்குச் செல்லும் பாதை மூடப்பட்டன.  மூடப்பட்ட பாதையை (எலெக்ட்ரோ ஸ்டீல் காஸ்டிங்) ESL தொழில்துறையினர்  திறக்கும் வரை போராடுவோம் என திங்கட்கிழமை (நேற்று) முதல் சிந்தேபள்ளி கிராமத்தில் உள்ள சிவன் … Read more

முதலீட்டுக்கு ஏற்ற சூழல் காஷ்மீரில் நிலவுகிறது – மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பிரதமர் மோடியின் சரியான கொள்கைகள் நாட்டை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கின்றன. சந்தை அல்லது லாபத்தை கருத்தில் கொண்டு நீங்கள் எங்குவேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதற்கான ஆலோசனைகளை என்னால் வழங்க இயலாது. ஆனால், ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய சூழல் முதலீட்டுக்கு தகுதியாக உள்ளது என்பதை மட்டும் உறுதியாக கூறமுடியும். அங்கு நிலவும் … Read more

எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின..!!

டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. மக்களவை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.

வரும் ஏப்ரல் முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது..!!

இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கண்காணித்து வரைமுறை செய்கிறது. இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை வைத்து வந்தன. அதை ஏற்று சில அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று … Read more

கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் எப்போது? – இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று (மார்ச் 29) வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று கர்நாடக தேர்தல் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் தனித் தனியாக களமிறங்குகின்றன. 3 கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கியுள்ள … Read more

எச்சரிக்கை..கொரோனா புதிய அலை…அச்சப்படுத்தும் புள்ளிவிவரங்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது, செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 1573 பேர் புதிய கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 4 பேர் இந்த தொற்றால் உயிரிழந்தனர். கொரோனாவின் புதிய வகை பாதிப்பு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சகம் திங்களன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கோவிட் 19 மேலாண்மைக்கான தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்ய ஒரு கூட்டத்தை நடத்தியது. கடந்த இரண்டு வாரங்களில் … Read more

”சைபர் குற்றங்களில் மோசடி செய்யப்பட்ட ரூ.235 கோடி மீட்கப்பட்டது..” – அமித் ஷா..!

சைபர் மோசடி, ஏமாற்றுதல் போன்ற காரணங்களால் 500க்கும் மேற்பட்ட செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். டிஜிட்டல் உலகம் அனைவருக்கும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதில் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளதாக அமித்ஷா குறிப்பிட்டார். டெல்லியில் உள்ள சைபர் கிரைம் மையத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் போது அவர் இதனைத் தெரிவிதத்தார். சைபர் கிரிமினல்களால் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேரிடம் … Read more

புதுச்சேரி கடலில் குளிப்பவர்களுக்கு உயிர்காக்கும் கவசம் வழங்கப்படும்: அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி கடலில் குளிப்பவர்களுக்கு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் உயிர்காக்கும் கவசம் வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் கடலில் உயிர்காக்கும் கவசம் அணிந்துதான் குளிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.   

ராகுல் காந்திக்காக என் பங்களாவை காலி செய்ய தயார்: மல்லிகார்ஜுன கார்கே..!!

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ராகுல் காந்திக்கு டெல்லியில் துக்ளக் லேன் பகுதியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. நான்கு முறை பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, கடந்த 2005 முதல் இந்த பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அரசு பங்களாவை காலி செய்வதற்கான நோட்டீசை ராகுல் காந்திக்கு அனுப்ப மக்களவைக்கான பங்களா ஒதுக்கீடு குழு முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான நோட்டீசை மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு … Read more