ரூ.2,000 நோட்டு வாபஸ் நடவடிக்கை ஏன்?: ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மிகமிக குறைவாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்ற போது அதன் இடத்தை விரைவாக நிரப்புவதற்காகவே 2 ஆயிரம் நோட்டுகள் முதன்மையாக அறிமுகப்படுத்தப்பட்டன என சக்திகாந்த தாஸ் விளக்கமளித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நாணய மேலாண்மை நடவடிக்கையின் ஒரு பகுதியாக உயர்மதிப்பு கொண்ட நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி … Read more

நாடாளுமன்ற கட்டிட விவகாரம் | “பாஜக ஆட்சியில் ‘பெயரளவில்’ குடியரசுத் தலைவர் பதவி” – கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: “பாஜக ஆட்சியில் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுபவராக, குடியரசுத் தலைவர் மாற்றப்பட்டுள்ளார்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது குறித்து கார்கே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக சில பதிவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களில் இருந்து இந்தியக் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் … Read more

அடையாள ஆவணம் இல்லாமல் ரூ.2000 நோட்டுகளை மாற்ற அனுமதிக்கக் கூடாது: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: ரூ.2,000 நோட்டுகளை அடையாள ஆவணம் இல்லாமல் மாற்ற அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் பொதுமக்கள் ஒரு நாளில் ரூ.20,000 மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்த படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டியது இல்லை. ஆதார் போன்ற அடையாளச் சான்றும் அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவ்வாறு அனுமதிக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் … Read more

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் இருதரப்புக்கு இடையே மோதல்; தீ வைப்பு சம்பவம் – ஊரடங்கு அமல்

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் இம்பாலின் சாக்கோன் பகுதியில் சந்தையில் ஒன்றில் இடம் பிரச்சினை தொடர்பான தகராறு மெய்தாய் மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையே மோதலாக வெடித்தது. இது தீவிரமடைந்ததை தொடர்ந்து, இருதரப்பினருக்கு இடையே மோதல் மூண்டதாகவும், தீ வைப்பு நிகழ்வுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். Source link

“புகார் அளித்த அனைத்துப் பெண்களும் நார்கோ சோதனைக்கு தயார்” – பிரிஜ் பூஷனுக்கு மல்யுத்த வீராங்கனைகள் பதில்

புதுடெல்லி: வினேஷ் போகத் மட்டுமல்ல மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் புகாரளித்துள்ள அத்தனைப் பெண்களும் உண்மை கண்டறியும் சோதனைக்குத் தயார் என்று மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வினேஷ் போகத்,”அவர் (பிரிஜ் பூஷன் சரண் சிங்) என் பெயரையும், பஜ்ரங் புனியா பெயரை … Read more

கர்நாடகா சட்டமன்றத்தை கோமியம் கொண்டு புனிதம் செய்த காங்கிரஸ்.. மென் இந்துத்துவா அரசியல்.?

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. அதைத் தொடர்ந்து முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவி ஏற்றுள்ளனர். இந்த பதவி ஏற்கும் நிகழ்சியில் பல்வேறு மாநில முதல்வர்களும், எதிர்கட்சி தலைவர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை அப்புறப்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட மாநில எதிர்கட்சிகள் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றன. அதனால் தான் கர்நாடகா முதல்வர் … Read more

ஸ்ரீநகரில் ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் – பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் வருகை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் மூன்றாவது ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் பங்கேற்பாளர்கள் வருகை தந்துள்ளனர். ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் ஸ்ரீநகரில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜி20 உறுப்பு நாடுகள், அழைப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஸ்ரீநகருக்கு … Read more

Tirupati: வார இறுதி நாளில் திருப்பதியில் அலைமோதிய கூட்டம்.. 4 கிமீ தொலைவுக்கு நின்ற பக்தர்கள்!

கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் தற்போது வழக்கத்தை பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து வருவதால் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் 24 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனம் செய்ய பக்தர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். வார இறுதி நாளான … Read more

அப்போதே நோ சொன்ன மோடி… ரூ. 2000 வாபஸ் பெறுவதற்கு இதுதான் காரணமா?

PM Modi On 2000 Rupees Note: 2016ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு வருவதை பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை என அவரின் முன்னாள் முதன்மை செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இரவு நேர பார்ட்டியில் இருந்து BMW காரில் திரும்பிய இளம்பெண்… அதிவேகமாக மோதியதில் இருசக்கர வாகன ஓட்டி பலி

டெல்லியில், இரவு நேர பார்ட்டியிலிருந்து திரும்பிய இளம்பெண், தனது பி.எம்.டபுள்யு காரை வேகமாக ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் உயிரிழந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அஜய் குப்தா, அதிகாலை 4 மணியளவில் மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவ்வழியாக பி.எம்.டபுள்யு காரில் வேகமாக வந்த இளம்பெண் ஜெனரேட்டர் ஒன்றின் மீது காரை மோதிவிட்டு, பின் அஜய் குப்தா மீதும் மோதினார். படுகாயமடைந்த அஜய் குப்தாவை அந்த பெண் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை … Read more