சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல் – பிரதமர் மோடி கடும் கண்டனம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் 10 காவலர்கள் உள்பட 11 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த மாவோயிஸ்டுகளின் வெடிகுண்டு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட காவல் படையை (DRG) சேர்ந்த போலீசார் ஒரு வேனில் அங்கு சென்றனர். தேடுதல் வேட்டை முடிந்து அவர்கள் திரும்போதும் அரண்பூர் சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்துள்ளது. இதில் 10 காவலர்கள், ஒரு … Read more

தமிழகத்தில் 11 உள்பட நாடு முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாட்டில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1,570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. … Read more

போர்க் களங்கள், வெடிகுண்டுகளில் எல்லாம் உயிர் தப்பிய ராணுவ வீரர் பட்டாசு வெடித்து பலி..

போர்க் களங்கள், வெடிகுண்டுகளில் எல்லாம் உயிர் தப்பிய ராணுவ வீரர் ஒருவர், பட்டாசு வெடிக்க முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிராமம் ஒன்றில் நடைபெற்றது. நிர்பய் சிங் என்ற அந்த ராணுவ வீரர் காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டு இருந்தார். ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்தின் போது பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார். பிறருக்கு வேடிக்கை காட்டும் வகையில், ராக்கெட் ஒன்றை எடுத்து … Read more

பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டல்!!

பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தது. திடீரென பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி அங்குள்ள மாணவர்களை மிரட்டினார். இதனால் பள்ளி மாணர்கள் அச்சம் அடைந்தனர். அந்த நபர் தனது கையில் ஆசிட் பாட்டிலையும் வைத்திருந்தார். இதை எல்லாம் பார்த்த பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உறைந்து போனார்கள். அப்போது, அந்த … Read more

“கர்நாடகாவில் பாஜக அரசு ரூ.1.5 லட்சம் கோடி ஊழல்” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பெங்களூரு: “கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு அனைத்து துறைகளிலும் 40 சதவீத கமிஷன் வாங்கி ரூ.1.5 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கர்நாடகாவுக்கு வந்தார். இன்று பிற்பகல் 12 மணிக்கு மைசூரு வந்த அவர், டி.நர்சிபுராவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் சாம்ராஜ்நகரில் நடைபெற்ற … Read more

கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் மஜதவுக்கு சந்திரசேகர் ராவ் கட்சி ஆதரவு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி ஆதரவு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத), ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக களமிறங்குகின்றன. இதில் பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மஜத மூத்த தலைவரும் … Read more

கடினமான சூழலிலும் புதுமைகளை உருவாக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது – பிரதமர்

கடினமான சூழலிலும், புதுமைகளை படைக்கும் ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளதாக செளராஷ்டிரா – தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத்தில் நடைபெற்ற செளராஷ்டிரா – தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி சிறைப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவரும் ஒருங்கிணைந்து கலாச்சார மோதல்களை கைவிட்டு, நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறினார். இந்த சங்கமம் சர்தார் படேலுக்கும், சுப்பிரமணிய பாரதிக்கும் உள்ள சங்கமம் என்றும், நர்மதை – … Read more

“எங்கள் மனதின் குரலை பிரதமர் மோடி கேட்க மாட்டாரா?” – தொடர் போராட்டத்தில் மல்யுத்த வீராங்கனைகள்

புதுடெல்லி: எங்கள் மனதின் குரலை பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும் என்று டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்து வரும் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் முதல் குற்றம் சாட்டி வருகின்றனர். பாஜக எம்பியாகவும் இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங்-குக்கு எதிராக … Read more

பயங்கரம்.. மாவோயிஸ்ட் நிகழ்த்திய கொடூர தாக்குதல்.. 11 போலீஸார் உடல் சிறதி பலி.. அலறும் சத்தீஸ்கர்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 11 போலீஸார் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில் கடந்த சில ஆண்டுகளாக அடங்கி இருந்த நக்சல் தீவிரவாதம், மீண்டும் தலைதூக்கி இருப்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் அரன்பூர் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்று மதியம் 3 மணியளவில் வேன் ஒன்றில் 10 போலீஸார் அந்தப் பகுதிக்கு சென்று … Read more

சில்மிஷம் செய்த Rapido பைக் டிரைவர்… ஓடும் பைக்கில் இருந்து குதித்து தப்பித்த பெண்…!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் Rapido பைக் ஓட்டுநரினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளனதாக கூறப்படும் பெண் ஒருவர் ஓடும் பைக்லிருந்து குதித்தார்.