அரியானாவில் கோபுர ஓட்டலில் தீ விபத்து..!!

அரியானா: அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள அமராவதி அங்காடியில் கட்டிடத்தின் உச்சியில் உள்ள வட்டவடிவ ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. பல அடி உயரத்தில் உள்ள ஓட்டலில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் போஸ்டர்: ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரச்சாரம்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நாடு முழுவதும் நேற்று போஸ்டர் ஒட்டும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் நேற்று கூறியதாவது. ஆம் ஆத்மி சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டும் பிரச்சாரம் நடைபெறுகிறது. ‘மோடியை அகற்றுவோம் நாட்டைக் காப்போம்’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்கள் பல்வேறு மொழிகளில் அச்சடிக்கப்பட்டு நாட்டின் 22 மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளன. … Read more

சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது: காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் பேச்சு

டெல்லி: ஆங்கிலேயரிடம் சுதந்திரத்திற்கு போராடினோம்; தற்போது சுதந்திரமாக பேச போராட வேண்டியுள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். முக்கிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

ராம நவமியையொட்டி திருப்பதி கோயிலில் சிறப்பு பூஜைகள்

திருப்பதி: ராம நவமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள அனைத்து ராமர் கோயில்களிலும் நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஆந்திர மாநிலத்தில் ராம நவமி விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சீதாதேவி, ராமர், லட்சுமணர் மற்றும் அனுமனின் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், மாலையில் அனுமன் வாகனத்தில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல, திருப்பதியில் … Read more

வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட பேரணியில் வன்முறை: பல இடங்களில் வாகனங்கள், வீடுகள் தீவைத்து எரிப்பு

மும்பை: வடமாநிலங்களில் ராம நவமி கொண்டாட்ட யாத்திரைகளில் கலவரம் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவுகின்றது. மராட்டிய மாநிலம் சத்திரபதி சம்பாஜி நகரில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு மதத்தை சேர்ந்த ஏராளமானோர் சாலையில் நின்று கற்களை வீசி தாக்கிக்கொண்டதால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. மேற்கு வாங்க மாநிலம் ஹௌராவில் உள்ள ஷீபூர் பகுதியில் ராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் தீடிரென கலவரம் வெடித்தது. இரு தரப்பும் கல்வீசி தாக்கிக்கொண்டதில் ஏராளமானோர் காயமடைந்தனர். குஜராத் … Read more

கணக்கு தொடங்கிய 5 ஆண்டுகளுக்குள் இபிஎஃப் தொகையை எடுத்தால்…

பட்ஜெட் 2023 மெமோராண்டத்தில், “பல குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு பான் அட்டை இல்லை என்பது கவனிக்கப்படுகிறது. இதனால் பிரிவு 192A இன் கீழ் பல கணக்குகளில் அதிகபட்ச விளிம்பு விகிதத்தில் TDS கழிக்கப்படுகிறது. எனவே, சட்டத்தின் பிரிவு 192A க்கு இரண்டாவது விதியைத் தவிர்க்க முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் ஒரு நபர் பான் எண்ணை அளிக்கத் தவறினால், திரட்டப்பட்ட நிலுவைத் தொகையை செலுத்துவதில், 20 சதவீதம் என்ற விகிதத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வருமான … Read more

ராஜஸ்தானில் அமலான சுகாதார உரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: தனியார் மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிப்பு

புதுடெல்லி: ராஜஸ்தானில் அமலான சுகாதார உரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனியார் மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ‘சுகாதார உரிமை சட்டம்’ காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் அமலாகி உள்ளது. இதற்கான மசோதா சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அறிமுகமானது. இது கடந்த மார்ச் 21-ல் குரல் வாக் கெடுப்பு மூலம் சட்டமானது. இந்த சட்டத்தின்படி, விபத்துகளில் படுகாயம் அடைந்தும் அல்லது பிற பாதிப்புகளுக்கும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் அனைவருக்கும் … Read more

Old Pension Scheme: ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி, திட்டத்தில் மாற்றங்கள் செய்ய தயாராகும் அரசு!!

அரசு ஊழியர்களிடையே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் மத்திய அரசு இதற்காக பல வித ஏற்பாடுகளை செய்து திட்டங்களை தீட்டி வருகிறது. சொல்லப்போனால் இது ஒரு தேர்தல் பிரச்சனையாகவே மாறி வருகிறது. இந்த ஆண்டு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பின்னர் 2024ல் மக்களவைத் தேர்தலும் வரவுள்ளது. இதற்கு முன், 3 நடவடிக்கைகள் தொடர்பாக, அரசுக்கும், ஓய்வூதிய ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கும் இடையே பல வித வாக்குவாதங்களும் பேச்சுவார்த்தைகளு நடந்துவருகின்றன.  முதல் வழி … Read more

டெல்லி வாசிர்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

டெல்லி: டெல்லி வாசிர்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 25 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

அதானி நிறுவனத்தில் ‘திடீர்’ தீ விபத்து..!!

நொய்டாவில் தகவல் மையம் ஒன்றை அதானி நிறுவி வருகிறது. இதற்கான கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த நிறுவனத்தில் வெல்டிங் பணிகள் நடந்த இடத்தில் திடீரென தீப்பிடித்தது. அருகில் இருந்த தெர்மோகோல் மற்றும் பிளாஸ்டிக் ஷீட்டுகளில் தீப்பிடித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இந்த தீ … Read more