டிஜிட்டல் ஈஸ்ட் இண்டியா கம்பெனி! கூகுளின் பில்லிங் கொள்கையை சாடும் அனுபம் மிட்டல்

Digital East India Company: இந்திய போட்டி ஆணையத்தின் உத்தரவை மீறி மாற்று பில்லிங் முறையைத் தேர்வுசெய்த ஆப் டெவலப்பர்களிடமிருந்து 11-26 சதவிகிதம் வரை கமிஷன்களை கூகுள் வசூலிப்பதாக குற்றச்சாட்டு

“கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அரசியல் உச்சத்தில் இருக்கும்” – அமித் ஷா

கர்நாடகாவில் ஒருவேளை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வாரிசு அரசியல் உச்சத்தில் இருக்கும் என்றும், ஒட்டுமொத்த கர்நாடகாவும் கலவரங்களால் பாதிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பாகல்கோட் என்ற பகுதியில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாநிலத்தின் வளர்ச்சி ரிவர்ஸ் கியரில் சென்று விடும் என்று விமர்சித்தார். பாஜகவால் மட்டுமே புதிய கர்நாடகத்தை வழிநடத்த முடியுமென்று கூறிய அமித் ஷா, மாநிலத்தில் மீண்டும் இரட்டை எஞ்சின் ஆட்சியை … Read more

"இந்திய எரிபொருட்களின் விலை குறித்த புகார்கள் வெறும் கட்டுக்கதைகளே" – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

புதுடெல்லி: “இந்தியாவில் எரிபொருட்களின் விலை மிக அதிகம் என கட்டுக் கதைகள் பரப்பப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி எடுத்த சீரிய முயற்சியின் பலனாக, எரி பொருட்களின் விலை குறைவாக உள்ள உலக நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றிருப்பது என்பதுதான் எவரும் மறுக்க முடியாத உண்மை“ என்று மத்திய வீட்டு வசதி, நகர்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்து தமிழ் இணையதளத்திற்கு அவர் பிரத்யேகமாக எழுதிய கட்டுரையின் … Read more

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது..!

கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வந்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 4 பேரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் வசிக்கும் சூர்யா செல்வராஜ் என்பவரிடமிருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை வாங்கி புழக்கத்தில் விட்டதாக சூரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குஜராத் போலீசார் சென்னைக்கு வந்து சூரியாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 17 லட்சம் ரூபாய்க்கு கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நோட்டுகள் அச்சடிக்கப் பயன்படுத்திய இயந்திரங்கள், ஸ்டாம்ப் … Read more

வந்தே பாரத், நீர்வழி மெட்ரோ சேவை கேரளாவில் பிரதமர் தொடங்கி வைத்தார்: பயணிகள், மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் – காசர்கோடு வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் ரூ.1,137 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரயிலில் பயணிகள், மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கேரளாவுக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார். மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வந்த பிரதமர் மோடி, கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பட்டு வேட்டி, சட்டை … Read more

‘மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகள் தீவிரமானது’- டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் 

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்ய இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும் படி டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் … Read more

அது ‘மவுனமான குரல்’ – பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி பற்றி காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் மேடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்காக அவரது மக்கள் தொடர்பு எந்திரம் கூடுதல் நேரம் வேலைபார்ப்பதாகவும், ஆனால் அது அதானி குழுமம், சீன விவகாரங்கள், சத்தியபால் மாலிக் பேச்சு போன்ற தீவிரமான விஷயங்களில் மவுனமாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பிரதமர் மோடி, மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். வரும் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சி தனது 100 பகுதியை நிறைவு … Read more

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதில் பாஜகவிற்கு விருப்பமில்லை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதில் பாஜகவிற்கு விருப்பமில்லையென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். கர்நாடக மாநிலத்தில் 2 நாள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அமித்ஷா, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை கர்நாடக அரசு ரத்து செய்திருப்பது குறித்து இக்கருத்தினை தெரிவித்தார். தேவரா ஹிப்பர்கி, பாகல்கோட் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அமித்ஷா, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வாரிசு அரசியல் தான் உச்சத்தில் இருக்கும் எனவும் கர்நாடகா கலவரங்களால் பாதிக்கப்படும் எனவும் … Read more

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு

சண்டிகர்: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார். அவருக்கு வயது 95. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான இவர், இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வந்த … Read more

தனது ஊழியருக்கு ரூ.1,500 கோடி மதிப்புள்ள பிரமாண்ட வீடு பரிசளித்த முகேஷ் அம்பானி

மும்பை: பேங்க் பேலன்ஸில் மட்டுமல்ல, பெரிய மனது காட்டுவதிலும் பணக்கார மனிதர் என்ற பாராட்டுக்களை பெற்றுவருகிறார் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி. இப்படி அம்பானி புகழப்படுவதற்கு காரணம் அம்பானி தனது ஊழியர் ஒருவருக்கு கிஃப்டாக கட்டிக்கொடுத்துள்ள 1500 கோடி மதிப்பிலான 22 மாடி வீடு. இந்த காஸ்ட்லி கிஃப்ட்டை பெற்ற நபர் அம்பானியின் நெருங்கிய நண்பரும், வலதுகரமாக அறியப்படுபவருமான மனோஜ் மோடி. அம்பானி குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமான இந்த மனோஜ் மோடி, முகேஷ் அம்பானியுடன் சேர்ந்து மும்பை … Read more