மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதில் பாஜகவிற்கு விருப்பமில்லை – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதில் பாஜகவிற்கு விருப்பமில்லையென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். கர்நாடக மாநிலத்தில் 2 நாள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அமித்ஷா, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை கர்நாடக அரசு ரத்து செய்திருப்பது குறித்து இக்கருத்தினை தெரிவித்தார். தேவரா ஹிப்பர்கி, பாகல்கோட் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அமித்ஷா, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வாரிசு அரசியல் தான் உச்சத்தில் இருக்கும் எனவும் கர்நாடகா கலவரங்களால் பாதிக்கப்படும் எனவும் … Read more

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு

சண்டிகர்: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் காலமானார். அவருக்கு வயது 95. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவரான இவர், இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வந்த … Read more

தனது ஊழியருக்கு ரூ.1,500 கோடி மதிப்புள்ள பிரமாண்ட வீடு பரிசளித்த முகேஷ் அம்பானி

மும்பை: பேங்க் பேலன்ஸில் மட்டுமல்ல, பெரிய மனது காட்டுவதிலும் பணக்கார மனிதர் என்ற பாராட்டுக்களை பெற்றுவருகிறார் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி. இப்படி அம்பானி புகழப்படுவதற்கு காரணம் அம்பானி தனது ஊழியர் ஒருவருக்கு கிஃப்டாக கட்டிக்கொடுத்துள்ள 1500 கோடி மதிப்பிலான 22 மாடி வீடு. இந்த காஸ்ட்லி கிஃப்ட்டை பெற்ற நபர் அம்பானியின் நெருங்கிய நண்பரும், வலதுகரமாக அறியப்படுபவருமான மனோஜ் மோடி. அம்பானி குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமான இந்த மனோஜ் மோடி, முகேஷ் அம்பானியுடன் சேர்ந்து மும்பை … Read more

கேரளாவில் உள்ள கிறிஸ்தவ மத தலைவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

கொச்சியில் நடைபெற்ற சந்திப்பின் போது, சர்ச் தலைவர்கள்  கிறிஸ்துவ சமூகம் தொடர்பான தங்கள் கவலைகளை பகிர்ந்து கொண்டதுடன், மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பிரதமரிடம் விவாதித்தனர். 

“எல்லையோர கிராமங்கள் கடைசி கிராமங்கள் அல்ல” – பிரதமர் மோடி

எல்லையோர கிராமங்கள் நாட்டின் கடைசியல்ல; அவைதான் முதல் கிராமங்கள் என்ற பிரதமர் மோடியின் கூற்றை உத்தரகாண்ட் மாநில அரசு உறுதிபடுத்தியுள்ளது. அதாவது, கடந்தாண்டு அக்டோபர் மாதம் சாமோலி கிராமத்தில் பேசிய மோடி, எல்லையோர கிராமங்கள் நாட்டின் கடைசி கிராமங்கள் அல்ல, அவை நாட்டின் முதல் கிராமங்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான் உத்தரகாண்ட் மாநில எல்லையோரத்தில் உள்ள மானா என்னும் கிராமத்தின் பெயர், ”முதல் இந்திய கிராமம் மானா” என்று மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது. அந்த பெயர்ப் … Read more

குனோ தேசிய பூங்காவில் உதய் சிவிங்கிப் புலி உயிரிழப்பு – மன அழுத்த பாதிப்பு காரணமா?

போபால்: உதய் என்னும் சிவிங்கிப் புலி உயிரிழந்த நிலையில், குனோ தேசிய பூங்காவில் ஒரே மாதத்தில் இரண்டு சிவிங்கிப் புலிகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள், சிறப்பு சரக்கு விமானம் மூலம் இந்தியாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்டன. அவற்றை மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிலையில், மேலும் சில சிவிங்கிப் புலிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் கொண்டுவரப்பட்டன. … Read more

"ஏய்.. ஏய்.. என்ன பண்ற".. விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர் – தொடரும் அட்டூழியம்

டெல்லி: அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் இந்தியப் பயணி ஒருவர் தனது அருகே அமர்ந்திருந்த சக பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற 2 சம்பவங்கள் நடைபெற்றிருக்கும் நிலையில், தற்போது இந்த நிகழ்வு மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது, மக்களுக்கு விமானப் பயணமே வேண்டாம் என்ற மனநிலைதான் ஏற்படுகிறது. சிலரின் அநாகரீகமாக செயல்களே இதற்கு காரணம். ஓடும் விமானத்தில் புகைப்பிடிப்பது, எமர்ஜென்சி கதவை … Read more

ரிலையன்ஸில் நெடுங்காலம் பணியாற்றிய ஊழியருக்கு ரூ.1,500 கோடி பங்களாவை பரிசளித்தார் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனத்தில் நெடுங்காலம் பணியாற்றி அதன் வெற்றிக்கு வழி வகுத்தவர்களில் ஒருவரும், முகேஷ் அம்பானியின் வலதுகரமாக கருதப்படுபவருமான மனோஜ் மோடிக்கு, ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவை முகேஷ் அம்பானி பரிசளித்துள்ளார். ஒரு சதுரடி 45 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் மும்பை மாநகரின் நெப்பியன் கடற்கரை சாலையில் அந்த 22 மாடி கட்டடம் அமைந்துள்ளது. விருந்தாவன் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் 8 ஆயிரம் … Read more

அடுத்த மாதம் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை!!

மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட விடுமுறைப் பட்டியலின்படி தெரியவந்துள்ளது. மாதத்தின் தொடக்க நாளே விடுமுறைதான். தொழிலாளர் தினம் என்பதால் மே 1ஆம் தேதி நாடு முழுவதும் விடுமுறை. மே 5ஆம் தேதி புத்த பூர்ணிமா என்பதால், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரகண்ட், அசாம், பீகார், குஜராத், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விடுமுறை. மே 7 – ஞாயிறு, மே … Read more

ஐஏஎஸ் அதிகாரி கொலை வழக்கில் விடுதலை ஆகிறார் முன்னாள் கேங்ஸ்டர் ஆனந்த் மோகன் – பிஹாரில் புதிய சர்ச்சை

பாட்னா: ஐஏஎஸ் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையிலிருந்த முன்னாள் கேங்க்ஸ்டரும், முன்னாள் எம்.பி.யுமான ஆனந்த் மோகன் விடுதலையாகிறார். ராஜ்புட் சமூகத்தைச் சேர்ந்த அவர் இப்போது விடுவிக்கப்படுவது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஹாரில் கணிசமான வாக்குவங்கி கொண்ட அச்சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும், தேர்தல் ஆதாயத்திற்காக சிறை சட்ட விதிகளில் மாற்றம் செய்து அதன்மூலம் ஆனந்த் மோகன் விடுதலையாக வழிவகுத்துக் கொடுத்துள்ளார் முதல்வர் நிதிஷ் குமார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. யார் … Read more