கேரளா மூணாறு அருகே அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்கக்கோரி 2-ம் நாளாக பொதுமக்கள் போராட்டம்

கேரளா: மூணாறு அருகே அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்கக்கோரி 2-ம் நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூணாறு அருகே சுற்றி திரியும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க கேரளா ஐகோர்ட் தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னகானல் பஞ்சாயத்துக்குட்பட்ட சிங்குகண்டம் பகுதியில் சாலையோரத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ரூ.500 நோட்டு வீசிய டி.கே.சிவகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்கு

பெங்களூரு: காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் கடந்த 28ம் தேதி மண்டியா மாவட்டத்தில் உள்ள பெவினஹள்ளியில் ‘மக்களின் குரல்’ பேரணியில் பங்கேற்றார். அவரை உற்சாகமூட்டும் வகையில் காங்கிரஸார் மலர்களை தூவி வரவேற்றனர். அப்போது மகிழ்ச்சி அடைந்த டி.கே.சிவகுமார் 500 ரூபாய் நோட்டுகளை மேளக் கலைஞர்கள் மீது வீசினார். இதுகுறித்து புகாரின் அடிப்படையில் மண்டியா மாவட்டத்தின் ஆட்சியர் கோபால கிருஷ்ணா வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மண்டியா ஊரக போலீஸார் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் மீது 3 … Read more

பெங்களூருவில் 19 வயது பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது

பெங்களுரு: பெங்களூருவில் 19 வயது பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 25-ம் தேதி 19 வயது இளம்பெண் தனது நண்பருடன் புகைபிடித்துக் கொண்டிருந்தபோது 4 இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர். தகராறில் ஈடுப்பட்ட 4 இளைஞர்கள் இளம்பெண்ணை தங்களது காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

கோச்சிங் சென்டர்கள் கலாச்சாரம் | திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி; மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற உயர் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களைக் குறிவைத்து தனியார் கோச்சிங் சென்டர்கள் பணம் பறிப்பது உள்ளிட்ட மாணவர்களைச் சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பற்றி மாநிலங்களவையில் திமுக எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் அளித்த பதில்: மாணவர்களின் கற்றல் திறனை ஒரே நேரத்தில் மொத்தமாக மதிப்பிடும் நடைமுறைதான் தற்போது நாடு முழுவதும் இருக்கிறது. இந்த நடைமுறைதான் தற்போதைய … Read more

கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில் 1 குழந்தை, 1 பெண் உள்பட 6 பேர் உயிரிழப்பு…!

டெல்லியில் கொசுவர்த்தி சுருள் மெத்தையில் பட்டு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு கொசுவர்த்தி சுருளை ஏற்றிவைத்துவிட்டு உறங்கிக்கொண்டிருந்தபோது, கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து தீப்பிடித்துள்ளது. நச்சுப்புகையால் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் சுய நினைவை இழந்துள்ளனர். தீ விபத்து மற்றும் மூச்சுத்திணறலால் உறங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மூச்சுத்திணறல் காரணமாக ஆபத்தான … Read more

புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள்: திடீர் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி!

டெல்லி: புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், திடீரென அங்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், தொழிலாளிகளிடம் கலந்துரையாடினார். இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நமது நாடாளுமன்றம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக … Read more

போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 86 வயதாகும் போப் பிரான்சிஸ்-க்கு மூச்சுக்குழாயில் ஏற்பட்ட தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் இன்னும் சில நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பலாம் என்றும் வாட்டிகன் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் … Read more

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கொலை செய்து கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த இளம்பெண்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த இளம்பெண் காவல் நிலையத்தில் சரணடைந்தார். முலுகு கிராமத்தை சேர்ந்த 30 வயதான ஸ்ரீனு என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் வெளியில் செல்லும்போதெல்லாம் கடந்த சில மாதங்களாக பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இளம்பெண் வீட்டில் இருந்தபோது குடிபோதையில் தள்ளாடியபடி சென்ற ஸ்ரீனு, அவருக்கு பாலியல் தொல்லை … Read more

காரைக்காலில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காரைக்கால்: காரைக்காலில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஸ்ரீ கைலாசநாதர் தேர் திருவிழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ‘போஸ்டர்’ ஒட்டியதாக 8 பேர் கைது

புதுடெல்லி: குஜராத் மாநிலம், அமதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டியதாக 8 பேரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். இது குறித்து அகமதாபாத் குற்றப் பிரிவு போலீஸார் கூறியதாவது: “மோடி ஹட்டாவோ தேஷ் பச்சோ” (மோடியை அகற்றுங்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்) என்ற முழக்கங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சட்டவிரோதமாக ஒட்டப்பட்டிருந்தன. இது குறித்த விசாரணையில் இந்தச் சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது … Read more