புதுச்சேரியில் புதிய கட்டடங்களில் சூரியஒளி மின் அமைப்பு கட்டாயம் – மின்துறை அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவோர் சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அனைத்து வீடுகளிலும் சூரிய ஒளி மின்சக்தி அமைப்பு ஏற்படுத்துவதை ஊக்குவிப்போம் என்றும் தெரிவித்தார். ராகுல்காந்தியின் எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் கருப்பு சட்டை அணிந்து திமுக மற்றும் … Read more

லஞ்சம் வாங்கிய வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ மடல் விருபக்சப்பாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

கர்நாடகா: லஞ்சம் வாங்கிய வழக்கில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ மடல் விருபக்சப்பாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கில் முன்ஜாமின் கோரி மடல் விருபக்சப்பா மனு தாக்கல் செய்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

உ.பி-யில் 10 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட கொடூரம்: 3 பேர் கைது

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 10 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, “உத்தரப் பிரதேசத்தில் உள்ள பஹ்ராச் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் வர்மா. இவருக்கு 10 வயதில் விவேக் என்ற மகன் உள்ளார். விவேக்கை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என்று போலீஸில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த நிலையில், விவேக் கழுத்து அறுப்பட்டு உயிரிழந்ததை போலீஸார் … Read more

அதானியின் நிறுவனங்கள் மீது விசாரணை நடத்துவதற்கு பிரதமர் அச்சப்படுவது ஏன்?.. ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: முறைகேடு அம்பலமான பிறகும் மக்களின் பணம் அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுவது ஏன்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ‘மோடி’ சமூகத்தினரை பற்றி விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து, எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தியை மக்களவை செயலகம் தகுதிநீக்கம் செய்து அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று அறப்போராட்டம் நடத்தினர். ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் … Read more

ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கு: உ.பி. அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான உத்தரபிரதேச அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில், தலித் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்ணின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என உத்தரவு … Read more

அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிரான கவிதாவின் மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லி மதுபான விற்பனை கொள்கை ஊழல் வழக்கில், அமலாக்கத்துறை பிறப்பித்த சம்மனை எதிர்த்து, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. டெல்லி மதுபான விற்பனை கொள்கையால் ஆதாயம் அடைந்த மது விற்பனையாளர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டப்பட்டது. இந்த ஊழல் வழக்கில் துணை முதல்வராக இருந்து மணிஷ் சிசோடியா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். மதுபானங்களை விநியோகித்த … Read more

ராகுல் காந்திக்கு ஆதரவாக களமிறங்கிய மம்தா பானர்ஜி; நேஷனல் ஹாட்.!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற வியூக கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். காங்கிரஸின் பரம எதிரி மம்தா வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இல்லாத எதிர்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சி செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக … Read more

80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுதங்கள் ஏற்றுமதி – பாதுகாப்பு அமைச்சகம்

இலங்கை,  மாலத்தீவு, மொரிசீயஸ், நேபாளம், எகிப்து, பூடான் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018- 22 காலகட்டத்தில் உலக அளவில் மிகவும் அதிகமாக 11 சதவீதத்துக்கு ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்ததாக ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் இன்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில், 2015-16 நிதியாண்டில் 2 ஆயிரத்து 59 கோடி ரூபாய்க்கு இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், அதனுடன் … Read more

முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீச்சு: கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு: சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இடஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கர்நாடக அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அந்த 4% ஒக்கலிகா மற்றும் லிங்காயத்து சமுதாயத்தினருக்கு சமமாக பிரித்து வழங்கப்பட்டது. உள்இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பில் தற்போது போராட்டம், வன்முறை வெடித்துள்ளது. சதாசிவ கமிஷன் அளித்த அறிக்கையின் படி உள்இடஒதுக்கீட்டை செயல்படுத்த கர்நாடக அரசு … Read more

எடியூரப்பா வீடு மீது கல்வீசி தாக்குதல்.. வீட்டில் இருந்த பாஜக கொடி அகற்றம் – பின்னணி என்ன?

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீடு மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜன மனஷா மையத்தின் பரிந்துரையை எதிர்த்து ஷிகாரிபுரா தாலுகா பஞ்சாரா சமாஜ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் தீவிரமடைந்ததால் போராட்டக்காரர்கள் எடியூரப்பா வீடு மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை இடஒதுக்கீடு தொடர்பாக எடுத்த முடிவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. … Read more