ராகுல் காந்தி மீது இன்னும் 10 அவதூறு வழக்கு இருக்கு… ஆனால் அவரு ஒரு வழக்கு கூட தொடரவில்லை

ராகுல்காந்தி அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் மோடி என்ற பெயரை அவதூறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கீழமை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருக்கும் இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் என்றாலும், அவர் தண்டிக்கப்பட்டவுடன் எம்பி பதவியில் இருந்து உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களின் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். அதானி தொடர்பாக ராகுல் … Read more

இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

கேரளா: கொச்சி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. துருவ் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக நொறுங்கி விபத்திற்குள்ளானது. ஹெலிகாப்டர் கீழே விழுந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி – சமூக வலைதள பயோவை மாற்றிய ராகுல் காந்தி

டெல்லி: தான் ஒரு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி என தனது சமூக வலைதள பக்க பயோவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மாற்றியுள்ளார். மோடி சமூகத்தை சார்ந்தவர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை பாராளுமன்ற செயலகம் அறிவித்தது. இந்நிலையில், இது தொடர்பாக நேற்று தனது தரப்பு விளக்கத்தை ராகுல் காந்தி, பத்திரிகையாளர் சந்திப்பின் … Read more

நாட்டில் 2022-ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் 15 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது: பிரதமர் மோடி பேட்டி!

டெல்லி: நாட்டில் 2022-ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் 15 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன் பின்பு, மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி வழியே … Read more

புதிய வந்தே பாரத் ரயில் திருப்பதியில் ஏப்.8-ல் தொடங்குகிறது

திருப்பதி: ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களை இணைக்கும் வகையில் விசாகப்பட்டினம் – செகந்திராபாத் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த பொங்கல் பண்டிகை முதல் தொடங்கி வைத்தார். இந்நிலையில், திருப்பதி – ஹைதராபாத் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க தென் மத்திய ரயில்வே துறை முடிவு செய்தது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 8-ம் தேதி திருப்பதியில் இருந்து வந்தே பாரத் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான … Read more

ராகுல் காந்தி ட்விட்டரில் பரபரப்பு மாற்றம்; இனி வெறும் எம்.பி அல்ல…!

வயநாடு மக்களவை தொகுதி எம்.பியாக இருந்த ராகுல் காந்தி அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான அறிவிப்பை மக்களவை செயலகம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள ‘Bio’-வில் Dis’Qualified MP எனப் பதிவிட்டுள்ளார். அதாவது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி எனக் குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிகள் மாற இருக்கும் முக்கிய விதிகள் என்னென்ன

ஏப்ரல் 1 முதல் மாற்றங்கள்: 2022-23 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில திங்களே உள்ளது. இதனுடன், பல புதிய விதிகள் புதிய நிதியாண்டு மற்றும் ஏப்ரல் மாதத்திலிருந்தும் பொருந்தும். இந்த விதிகள் சாமானியர்களையும் பாதிக்கப் போகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஏப்ரல் 1, 2023 முதல் நிகழும் புதிய மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த மாற்றங்கள் நிதி பரிவர்த்தனைகள், தங்க ஆபரணங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை. ஏப்ரல் 1, 2023 முதல் எந்த விதிகள் மாறப் … Read more

36 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட்: இஸ்ரோ தலைவர் தகவல்

ஹரிகோட்டா: இன்று, ISROவின் LVM3 ஏவுகணை வாகனம், அதன் ஆறாவது தொடர்ச்சியான வெற்றிகரமான விமானத்தில், One Web Group நிறுவனத்தைச் சேர்ந்த 36 செயற்கைக்கோள்களை 87.4 டிகிரி சாய்வுடன் 450 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இதன் மூலம், 72 செயற்கைக்கோள்களை ஒரு வலையிலிருந்து குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தத்தை NSIL வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள SDSC-SHAR இல் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி 09:00:20 மணிக்கு மொத்தம் 5,805 கிலோ … Read more

சிறுபான்மையினர் நல நிதியில் வெறும் 14% மட்டுமே செலவு! மத்திய அமைச்சரின் பதிலால் அதிர்ச்சி!

சிறுபான்மையினர் நலத்திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 14 சதவிகிதம் மட்டுமே செலவினம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் நலத்திட்ட நிதி பற்றி கேள்வி எழுப்பிய எம்பி சு.வெங்கடேசன்! நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன் எம். பி (சி.பி.எம்) சிறுபான்மை மக்கள் நலனுக்கான திட்டங்களின் நிதி ஒதுக்கீடுகள், அதற்காக தற்போதுவரை செலவிடப்பட்ட தொகை பற்றிய கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தார். அவர் எழுப்பிய கேள்வியில், ”கடந்த … Read more

36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி மார்க்-3 இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை: இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்துக்கு சொந்தமான 36 செயற்கைக் கோள்கள், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்படுகின்றன. இந்திய விண்வெளி ஆய்வுநிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதில், வணிகரீதியான செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி … Read more