”வாரிஸ் பஞ்சாப் தே” இயக்கத் தலைவர் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய தீவிரம்..!

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய போலீசார் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், பல்வேறு தோற்றங்களுடன் அம்ரித் பால் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். ‘வாரிஸ் பஞ்சாப் தே’ இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய நிலையில், அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரித் பால் சிங் தனது தோற்றத்தை மாற்றி இருக்கலாம் என சந்தேகிக்கும் பஞ்சாப் போலீசார், பல்வேறு தோற்றத்துடன் அவர் காணப்படும் 7 புகைப்படத்தை … Read more

ஸ்டிரைக்கில் பங்கேற்றால் விளைவுகளை சந்திக்கணும்: ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: பழைய ஓய்வூதியத்தை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி நாடு முழுவதும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தேசிய கூட்டு போராட்டக் குழு (என்ஜேசிஏ) சார்பில் மாவட்ட அளவிலான பேரணிகள் நடத்த நேற்று திட்டமிடப்பட்டது. இந்நிலையில், அனைத்து ஒன்றிய அரசு துறைகளின் செயலாளர்களுக்கு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் விடுக்கப்பட்ட … Read more

ஒரே வீட்டில் கணவன், மனைவி, 2 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரழப்பு..!!

மேற்குவங்க மாநிலம், மேற்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள தொழில்துறை நகரமான துர்காபூரைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் அமித் மொந்தல் (37). இவரது மனைவி ரூபா (33). இந்த தம்பவதிக்கு நிமித் (7) என்ற மகனும், ஒன்றரை வயது மகளும் இருந்தனர். நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் அமித் குடும்பத்தை சேர்ந்த யாரும் வீட்டை விட்டு வெளியே யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், … Read more

மரண தண்டனையை நிறைவேற்ற மாற்று வழிகளை ஆராயலாம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை

புதுடெல்லி: தூக்கு தண்டனை கொடூரமானதா என்பது குறித்து விவாதம் நடத்துமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மரண தண்டனையை நிறைவேற்ற வலி குறைவான வழி ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து தகவல் சேகரிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மரண தண்டனையை தூக்கு தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்றலாம் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான … Read more

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 3ம் தேதி வரை நீட்டித்து, டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தனது மனைவி உடல்நலமில்லாமல் இருப்பதால் ஜாமினில் விட வேண்டுமென கூறியிருந்தார். அவருக்கு ஜாமின் … Read more

ஒன்றிய அரசை கண்டித்து 2 நாள் போராட்டம்: மே.வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு

கொல்கத்தா:  மேற்குவங்கம் மீதான ஒன்றிய அரசின் பாகுபாட்டை கண்டித்து வரும் 29, 30 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்த போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து டம்டம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “அடுத்த நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் கூட மேற்கு வங்க மாநிலத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஒன்றிய அரசிடம் இருந்து மேற்குவங்கத்துக்கு மட்டும் தான் எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. ஒன்றிய அரசின் இத்தகைய பாரபட்ச, எதேச்சாதிகார போக்கை … Read more

7வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது: இன்று விடுமுறை

புதுடெல்லி: லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்கக் கோரி, பாஜ எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி செய்கின்றனர். இதனால் 6 நாட்கள் தொடர்ச்சியாக அவை முடங்கிய நிலையில், நேற்றும் இரு அவையிலும் கடும் அமளி நீடித்தது. மாநிலங்களவையில், எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே எழுந்து பேச முற்பட்ட போது, அவரை பேச விடாமல் பாஜ எம்பிக்கள் அமளி செய்தனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி … Read more

பெண் நக்சல் சுட்டுக்கொலை

பிஜபூர்: சட்டீஸ்கரின் பிஜபூர் மாவட்டத்தில் உள்ள கோர்சோலி மற்றும் தோட்கா இடையே உள்ள காட்டுப்பகுதியில் போலீசார், மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் சிறப்பு படையினர் தீவிர நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த நக்சல்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். இதற்கு போலீசார் தந்த பதிலடியில் பெண் நக்சல் ஒருவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சீருடையில் இருந்த பெண் நக்சலின் சடலத்தை போலீசார் மீட்டனர். அங்கிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மற்றவர்கள் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகினர்.

மக்களவையில் விவாதமின்றி துணைமானிய கோரிக்கை நிறைவேற்றம்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.1.48 லட்சம் கோடி செலவழிப்பதற்கான துணைமானிய கோரிக்கை விவாதமின்றி மக்களவையில் நேற்று நிறைவேறியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அப்போது, நடப்பு 2022-23ம் நிதியாண்டில் கூடுதலாக செலவழிக்க ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 508.89 கோடிக்கு ஒப்புதல் அளிக்க கோரும் துணை மானிய கோரிக்கையை  ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தாக்கல் செய்தார். இந்நிலையில், மக்களவையில் நேற்று விவாதமின்றி ரூ.1 லட்சத்து 48 … Read more

ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்ற விருப்பம்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சமாதானம்

புதுடெல்லி:  டெல்லி அரசின் பட்ஜெட் தாக்கலுக்கு ஒன்றிய அரசு அனுமதியளிக்காதது குறித்து முதல்வர்  கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் தாக்கலுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,  டெல்லி அரசு சேவையாற்ற விரும்புகின்றது. சண்டையிடுவதற்கு விரும்பவில்லை. சண்டை யாருக்கும் பயன்படாது. நாங்கள் பிரதமருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.   பிரதமர் டெல்லியை வெல்ல வேண்டும் என்று நினைத்தால் டெல்லி மக்களின் இதயங்களை … Read more