தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் கட்சி தொடங்க தடை கோரிய வழக்கில் மே மாதம் விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் தேர்தல் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அரசியல் கட்சிகள் தொடங்கவும், கட்சியை நடத்தவும் தடை விதிக்கக் கோரிய வழக்கை வரும் மே மாதம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்கீல் அஸ்வினி உபாத்யாய் கடந்த 2017ம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘தற்போது கொலை, கற்பழிப்பு, கடத்தல், பணமோசடி, கொள்கை, தேச துரோகம் போன்ற கொடூர குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர் கூட அரசியல் கட்சியை தொடங்கி, அதன் தலைவராகவோ … Read more

எகிறிய EB பில்.. பணம் கட்டாததால் கட்டில், பைக் பறிமுதல்.. அரை நிர்வாணத்தில் ஓடிய மூதாட்டி!

மின்சார கட்டணத்தை கட்டவில்லை என்பதால் தலித் மூதாட்டி பெண்ணை அரை நிர்வாணமாக பொதுவெளியில் மின்வாரிய ஊழியர்கள் ஓடச் செய்திருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கடும் கண்டனத்தை பெற்றிருக்கிறது. மத்திய பிரதேசத்தின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாகர் மாவத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி 19 ஆயிரம் ரூபாய்க்கான மின் கட்டணத்தை கட்டாததால் மின்வாரிய ஊழியர்கள் மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கட்டில் மற்றும் இரு சக்கர … Read more

பரவுகிறது கரோனா வைரஸின் புதிய திரிபு

புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்பிபி1 வைரஸ் பரவி வருகிறது என்று தெரியவந்துள்ளது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் பரவியது. இதனால் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் இறந்தனர். கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகுகரோனாவால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. … Read more

உசார்! ஏப்ரல் 1 முதல் UPI மூலம் பணம் செலுத்தினால் வரி! வந்தது புதிய விதி!

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஒரு சுற்றறிக்கை மூலம் UPI பேமெண்ட்டுகளுக்கான ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் கட்டணங்களை பரிந்துரைத்துள்ளது.  இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சமீபத்திய சுற்றறிக்கையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸில் (UPI) வணிக பரிவர்த்தனைகளுக்கு ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPI) கட்டணங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.  யுபிஐயின் ஆளும் குழுவான என்சிபிஐ, ரூ.2,000க்கும் அதிகமான தொகைகளுக்கு, யுபிஐ-யில் பிபிஐகளைப் பயன்படுத்தினால், பரிவர்த்தனை மதிப்பில் 1.1 சதவீதம் பரிமாற்றம் … Read more

வழக்கறிஞர் கொலை வழக்கில் மாஜி எம்.பி ஆதிக் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

பிரயாக்ராஜ்:  வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரயாக்ராஜ்   சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாபியா கும்பல் தலைவனாக இருந்து பின்னர் அரசியல்வாதியாக மாறிய ஆதிக் அகமது.  கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆதிக் அகமது, அவரது தம்பி காலித் அசீம் என்ற அஷ்ரப்  உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, கைது … Read more

கேரளா: அச்சு அசலாக பெண்கள் போல் வேடமிட்டு ஆண்கள் பங்கேற்ற ஸ்ரீதேவி ஆலய திருவிழா

கேரளாவில் பெண்கள் போல் வேடமிட்டு ஆண்கள் பங்கேற்கும் கோவில் திருவிழாவில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி ஆலயத்தில் பல தலைமுறைகளாக சமைய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தக் கோவிலில் முதலில் பெண்கள் தான் வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்பு அம்மனின் சக்தியை தெரிந்து கொண்டதால் ஆண்களும் – பெண்கள் போல் வேடமிட்டு வழிபாடுகள் செய்யவும் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. வருடந்தோறும் நடக்கும் இந்த விழாவில் … Read more

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸி சேவை – மத்திய அமைச்சர் சிந்தியா தகவல்

பெங்களூரு: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும்என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். பறக்கும் டாக்ஸி தொழில்நுட்பம் தொடர்பாக நேற்று பெங்களூருவில் நடைபெற்ற மாநாட்டில் ஜோதிராதித்யா சிந்தியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “நாம் பறக்கும் கார்களை இதுவரையில் சினிமாவில்தான் பார்த்தோம். ஆனால், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரவுள்ளது. பறக்கும் டாக்ஸிகளுக்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த … Read more

டெனிம் ஜாக்கெட், தலைப்பாகை இல்லாமல் நடமாடும் அம்ரித்பால் சிங்? கண்காணிப்பு கேமரா பதிவுகளை வெளியிட்ட போலீசார்!

தேடப்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங், கடந்த 21ந் தேதி டெல்லி வீதிகளில் நடமாடும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். தலைப்பாகை இல்லாமல் டெனிம் கோட்டு அணிந்து முகக் கவசத்தால் முகம் மறைத்து நடமாடும் நபர் அம்ரித்பால் தான் என்று போலீசார் உறுதி செய்துள்ளனர்.தமது பாஸ்போர்ட் அல்லது போலி பாஸ்போர்ட் மூலமாக நேபாளம் வழியாக மூன்றாவது நாட்டுக்கு தப்பிச் செல்ல அம்ரித்பால் சிங் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தகவலையடுத்து நேபாள அரசுக்குத் தகவல் … Read more

பான்-ஆதார் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு: ஜூன் 30 வரை அவகாசம்

புதுடெல்லி: பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு 5வது முறையாக வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.  அதைத் தொடர்ந்து, இதற்கான கால அவகாசம் 4 முறை நீட்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பான் – ஆதார் இலவசமாக இணைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் … Read more

உத்தர பிரதேச முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது உட்பட 3 பேருக்கு ஆயுள்

லக்னோ: உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமது உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது உள்ளிட்டோர் மீதுகுற்றம் சாட்டப்பட்டது. கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக வழக்கறிஞர் உமேஷ் பால் இருந்தார். கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அவர் கடத்தப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப் … Read more