பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க வந்த பிரதமர் மோடிக்கு கர்நாடகாவில் உற்சாக வரவேற்பு

கர்நாடகா: பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க வந்த பிரதமர் மோடிக்கு கர்நாடகாவில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. மாண்டியாவில் அரசு நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடிக்கு 2 கி.மீ தூரத்திற்கு மலர்த்தூவி தொண்டர்கள் வரவேற்றனர். காரரில் விழுந்த பூக்களை மீண்டும் பாஜகவினர் மீது வீசி மகிழ்ச்சியை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். ரூ.16,000 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இன்று பிற்பகல் 12 மணிக்கு மாண்டியாவில் முக்கிய … Read more

விலை அதிகரிக்காமல் 150 நாடுகளுக்கு மருந்து விநியோகம்

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறியதாவது: கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலக அளவில் கரோனா பரவல் தீவிரமடைந்தது. மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவை அதிகரித்தது. இந்த சமயத்தில் இந்தியா வெளிநாடுகளுக்கு மருந்துப் பொருட்களை விலைஅதிகரிக்காமல் அனுப்பியது. கரோனா கால கட்டத்தில் உலகளவில் கடும் நெருக்கடி பல்வேறு சவால்கள் ஏற்பட்டன. எனினும், லாப நோக்கு இல்லாமல், மனிதாபிமான முறையில் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 150 நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் … Read more

கொரோனா தொற்றுக்காலத்தில் தவறான தகவல் பரவியதால் ஆயிரக்கணக்கானோர் பலி: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு

மும்பை: கொரோனா தொற்றுக்காலத்தில் தவறான தகவல் பரவியதால்  ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள் என்று ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர்  கூறினார். புனேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த இளைஞர்  20 மாநாட்டில் கலந்து கொண்டு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது: கொரோனாவின் போது  தவறான செய்திகளை பரப்பியதுடன் தவறான தகவல்களை  தெரிவித்ததன் காரணமாகவே பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர்  பலியாகிவிட்டனர். சிலநேரங்களில் தொழில்நுட்பம் பயனுள்ளதா என்று நாங்கள்  சிந்திக்க வேண்டியதாயிற்று. இப்போது உலகளவில் … Read more

நடிகர்களுடன் படப்பிடிப்பு நடத்தி வடமாநிலத்தவர் தாக்கப்படுவதுபோல் சித்தரித்த கும்பல் கைது: தமிழக போலீஸார் பிஹாரில் முகாம்

புதுடெல்லி: தமிழகத்தில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக கிளம்பிய சர்ச்சைக்கு இரு மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிஹாரை சேர்ந்த மணிஷ் காஷ்யப் என்பவர் தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளர் என கூறிக் கொண்டு தனது யூடியூப் சேனலில் போலி செய்திகளை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் … Read more

சாப்பிட போன ஓட்டலில் சிறுவனை கடித்த எலி

ஐதராபாத்:  ஐதராபாத்தில் துரித உணவகத்தில் 8வயது சிறுவனை எலி கடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் கோம்பள்ளியில் உள்ள பிரபல துரித உணவகத்தில் கடந்த 8ம் தேதி 8வயது சிறுவன் தனது பெற்றோருடன் உணவருந்திக்கொண்டு இருந்தான். அப்போது அங்குள்ள கழிவறையில் இருந்து ஓடிவந்த எலி ஒன்று சிறுவனின் மீது ஏறியது. அதனை தள்ளிவிட முயன்றபோது சிறுவனை அந்த எலி கடித்தது. உடனடியாக சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். அங்கு காயங்கள் … Read more

ஏப்ரல் 30-ல் தெலங்கானா தலைமைச் செயலக கட்டிடம் திறப்பு – முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் புதியதலைமைச் செயலக கட்டிடம் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தெலங்கானா மாநில அரசு ரூ. 650 கோடி செலவில் அதன் தலைநகர் ஹைதராபாத்தில் மிகபிரம்மாண்டமாக தலைமைச் செயலகத்தை கட்டியுள்ளது. ஹைதராபாத் ஹுசைன் சாகர் ஏரி அருகே 64,989 சதுர அடியில், 11 அடுக்கு மாடி கட்டிடமாக புதிய தலைமைச் செயலகம் உருவாகியுள்ளது. புதிய தலைமைச் செயலக கட்டிடத்திற்கு … Read more

கொரோனாவை மிஞ்சும் வேகத்தில் பரவுகிறது மீண்டும் மிரட்டும் எச்3என்2 இன்புளூயன்சா: வைரஸ் காய்ச்சலால் பலர் அவதி; இருமல், சளி, காய்ச்சல் அதிகரிப்பு

நாடு முழுவதும் இன்புளுயன்சா என்ற வைரஸ் காய்ச்சல் தற்போது மீண்டும் பரவி வருகிறது. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழ்நாடு அரசு நேற்று ஒரே நாளில் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டது. இருப்பினும் பொதுமக்கள் இன்னும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த வைரஸ் கொரோனாவை விட வேகமாக பரவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.   இன்புளூயன்சா ஏ … Read more

அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறை – ரயில்வே அமைச்சகம் திட்டம்

புதுடெல்லி: அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறை வசதியை ஏற்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ரயில் பெட்டிகளில் பயோ கழிப்பறை வசதி செய்யப்பட்டு வருகிறது. ராஞ்சி ராஜ்தானி ரயிலில் சோதனை முயற்சியாக பயோ கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டது. இது பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஆண்டு மக்களவையில் கூறும்போது, “நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் சுமார் 1,450 பெட்டிகளில் பயோ கழிப்பறைகள் பொருத்தப்பட்டுள்ளன” … Read more

அரசாங்கத்திற்கு பதற்றத்தை அதிகரித்த H3N2! மக்களுக்கு மிகுந்த எச்சரிக்கை

H3N2 சிகிச்சை: H3N2 வைரஸ் மத்திய அரசின் கவலையை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், நிதி ஆயோக் H3N2 தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்தியது, அப்போது மத்திய அரசின் சார்பில் கடிதம் எழுதி மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. H3N2 இல் இலிருந்து அதிக ஆபத்தில் உள்ளவர்கள் யார் என்று யாருக்கு சொல்லப்பட்டது? H3N2 இலிருந்து யார் தீவிரமான நிலையைப் பெறலாம்? H3N2 அறிகுறிகளைக் காட்டிய பிறகு யாரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்? காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் கடுமையான சுவாச … Read more

மத்திய பல்கலை, இளநிலை, முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30-வரை அவகாசகம் நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: மத்திய பல்கலை, இளநிலை, முதுநிலை படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30-வரை அவகாசகம் நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்றுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் மார்ச் 30-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது. கியூட் நுழைவுத்தேர்வு மே 21-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது