தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகாரை சேர்ந்த ரயில்வே ஊழியர் கைது

பாட்னா: தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியபீகாரை சேர்ந்த ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெஹெர்கா ரயில் நிலையத்தில் போர்ட்டராக பணிபுரிந்து வரும் பிரசாந்த் குமாரை தமிழ்நாடு போலீசார் கைது செய்துள்ளனர். பீகாரில் கைது செய்யப்பட்ட பிரசாந்த் குமாரிடம் தமிழ்நாடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களில் சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் பீகார் உள்பட வடமாநிலங்களில் … Read more

அதிவேகத்தில் வந்த காரும் – அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

கேரளாவின் பத்தனம்திட்டாவில், முன்னால் சென்ற காரை முந்த முயன்று, எதிரே வந்த மற்றொரு காரின் மீது அதிவேகமாக மோதிய அரசுப்பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தேவாலயத்தின் சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. கோநி – பள்ளிப்பாடி அருகே, வளைவு சாலையில் அதிவேகமாக சென்ற அரசுப்பேருந்து, முன்னால் சென்ற காரை முந்த முயன்றது. அப்போது, எதிரே வந்த மற்றொரு காரின் மீது மோதிய பேருந்து, அருகில் இருந்த தேவாலயத்தின் சுற்றுச் சுவர் மீது மோதி நின்றது. இதில், ஓட்டுனர் உட்பட … Read more

பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனை கடித்த எலி

ஐதராபாத் : ஐதராபாத்தின் மெக்டொனல்ஸ் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை எலி கடித்ததால் பரபரப்பு.ஏற்பட்டது  மெக்டொனல்ஸ் கழிவறையிலிருந்து வந்த எலி கடித்ததில் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக தந்தை கொடுத்த புகாரால் உணவகம் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

CCTV Video: அரசு பேருந்து பயங்கர விபத்து… சர்ச் சுவரும் இடிந்து விழுந்து பயங்கரம்!

Kerala Pathanamthitta Accident CCTV Video: கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் கீழவாளூர் பகுதி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. அந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வீடியோவில், கேரள அரசு பேருந்து சாலையில் வந்துகொண்டிருந்தபோது, கார் மீது மோதியவுடன் அங்கிருந்து கிறிஸ்துவ தேவாலய வெளிப்புறச்சுவர் மீது மோதியதில் தேவலாயத்தில் வளைவுச்சுவர் இடிந்து பேருந்தின் மீது விழுந்தது பதிவாகியுள்ளது. இவையனைத்தும் ஒரே சில மணித்துளிகளில் … Read more

உலகின் மிக நீளமான ரயில்வே நடை மேடையை கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நாளை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி..!

உலகின் மிக நீளமான ரயில்வே நடை மேடையை கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கிறார். அங்குள்ள ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ரயில் நிலையம் மாநிலத்தின் 2வது பரபரப்பான ரயில் நிலையமாகும். பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கோவா உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் முக்கிய ரயில் நிலையமாக இந்த ரயில் நிலையம் விளங்குகிறது. இங்கு 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்றரை கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டிருக்கும் ரயில்வே நடைமேடையானது, உலகின் மிக நீளமான நடைமேடை என கின்னஸ் … Read more

மோடி குறித்த ஆவணப்பட விவகாரம்: பிபிசி-க்கு எதிராக குஜராத் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

காந்திநகர்: பிரதமர் மோடி குறித்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்திற்கு எதிராக குஜராத் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இங்கிலாந்து செய்தி நிறுவனமான ‘பிபிசி’ சமீபத்தில் பிரதமர் மோடி  குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நடந்த கோத்ரா கலவரம் தொடர்பான   ஆவணப்படத்தை வெளியிட்டது. இதுதொடர்பான யூடியூப் வீடியோக்கள், டுவிட்டர்  போன்ற சமூக வலைதள பதிவுகளை ஒன்றிய அரசு முடக்கியது. பிபிசி ஆவணப்படத்தை ஒளிபரப்ப விதிக்கப்பட்ட தடை விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின. நாடாளுமன்றத்திலும் இவ்விவகாரம் … Read more

ரூ.8,480 கோடியில் பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலையை நாட்டுக்கு நாளை அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி..!

பெங்களூரு-மைசூரு இடையே 8 ஆயிரத்து 480 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள Expressway சாலையை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். 118 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ள NH-275 எனப்படும் அந்த சாலையில் 4 ரயில்வே மேம்பாலங்கள், 9 பாலங்கள், 40 சிறிய பாலங்கள், 89 சுரங்க பாதைகள் உள்ளன. அந்த சாலையின் மூலம் இருநகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 75 நிமிடங்களாக குறையும். கர்நாடகாவில் நாளை … Read more

ரெய்டுகளுக்கு பயந்து ஒருபோதும் கட்சி மாறமாட்டார் கவிதா: ஐதராபாத்தில் '#Bye Bye Modi' என்ற ஹேஷ் டேக்கு விளம்பரங்கள்

ஐதராபாத்: ரெய்டுகளுக்கு பயந்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகராவின் மகள் கவிதா கட்சி மாறமாட்டார் என்பதை குறிக்கும் வகையில் அம்மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகராவின் மகள் கவிதா டெல்லியில் ஒன்றிய அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். இந்நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் பாரத் இராட்டிர சமிதி தொண்டர்கள் வித்தியாசமான விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். உண்மையான நிறம் என்றும் சாயம் போவதில்லை என்ற வாசகங்கள் … Read more

ஹோலி சர்ச்சை: மார்பை தொட்ட ஆண்கள்; இந்தியாவை விட்டு வெளியேறிய ஜப்பான் பெண்.!

ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால், அவர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். நடப்பு ஆண்டில் ஹோலி பண்டிகை கொண்டாட்டமும், அது சார்ந்த சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவிவருகின்றன. பெண்களின் அனுமதி இல்லாமலேயே கண்ட இடங்களில் கை வைப்பது கொண்டாட்டமாக நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய வீடியோ ஒன்றில், சிறுமி என்றும் பாராமல் அவளுடைய அந்தரங்க உறுப்புகளில் வண்ணப் பொடியை பூசுவதும் முத்தம் … Read more

துணை முதல்வர் கைதானது போன்று கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்!: கோர்ட்டில் ஆஜரான கைதி பேட்டி

புதுடெல்லி: டெல்லி துணை முதல்வர் கைது செய்யப்பட்டது போன்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று கைதி சுகேஷ் சந்திரசேகர் கூறினார்.  ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இவர், டெல்லி அமைச்சர்கள், சிறைத்துறை அதிகாரிகள், சினிமா நடிகைகள் உள்ளிட்ட பலருக்கு பல கோடி ரூபாய் கொடுத்ததாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து டெல்லி ஆம்ஆத்மி தலைவர்கள், … Read more