ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட 8 ஆண்டுகள் தடை?

புதுடெல்லி: குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட 8 ஆண்டுகள் தடை? – ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் கூறியதாவது: மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டுள்ளார். குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் ஜாமீன் வழங்கியுள்ளது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் பதவி நீக்க நடவடிக்கையை எதிர்த்து, குஜராத் உயர் … Read more

நிதி மசோதாவில் புதிய நிவாரணம் ரூ.7,27,700 வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி இல்லை

புதுடெல்லி: புதிய வருமான வரி விதிப்பு முறையில் வழங்கப்பட்டுள்ள சிறிய நிவாரணத்தின்படி, ஆண்டு வருமானமாக ரூ.7 லட்சத்து 27 ஆயிரத்து 700 வரை சம்பாதிப்போர் வரி செலுத்த தேவையில்லை என வரி நிபுணர்கள் கூறி உள்ளனர். கடந்த 1ம் தேதி அறிவிக்கப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில், புதிய வருமான வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி, ரூ.7 லட்சம் வரை ஆண்டு சம்பளம் பெறுவோர் வரி செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் … Read more

வயநாடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல்!?

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து கேரளாவில் வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019இல் பிரச்சாரத்தில், நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த வாரம் வெள்ளியன்று முடிந்தது. இதையடுத்து … Read more

நேரடி காட்சிகள்!! வீட்டின் மொட்டை மாடியில் விமானம் மோதல்.. இருவர் படுகாயம்..!!

ஜார்க்கண்ட் தன்பாத்தில் உள்ள பர்வாடா விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அந்த கிளைடர் வகை விமானம், 500 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் மீது மோதியதில் விமானி மற்றும் 14 வயது பயணி ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும், உரிய விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நடந்த இடத்தின் காட்சிகள், வீட்டின் கான்கிரீட் தூணால் அந்த விமானம் … Read more

சிபிஐ, அமலாக்கத் துறையை தவறாக பயன்படுத்துகிறது மத்திய அரசு – 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

புதுடெல்லி: சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக 14 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளன. இது தொடர்பான வழக்கு ஏப்ரல் 5-ம்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 14 எதிர்கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஒடுக்குவதையும், அவர்களை செயல்படவிடாமல் தடுப்பதையும் இலக்காக வைத்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை போன்ற மத்திய முகமை அமைப்புகளை … Read more

மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: பிரதமர் மோடி பெங்களூர் வருகை!

ஜனவரி மாதம் முதல் அடிக்கடி கர்நாடகாவுக்கு செல்லும் பிரதமர் மோடி கடந்த மூன்று மாதங்களில் ஏழாவது முறையாக இன்று மீண்டும் கர்நாடகா செல்கிறார். அவரது வருகையை முன்னிட்டு பெங்களூரு, சிக்பள்ளாப்பூர், தாவணகெரே ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு! கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது பாஜக. காங்கிரஸ், … Read more

கிருஷ்ணராஜபுரா- ஒயிட்பீல்டு மெட்ரோ ரயில் தடத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பெங்களூரு மெட்ரோவில் கிருஷ்ணராஜபுரா-ஒயிட்பீல்டு இடையேயான புதிய வழித்தடத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் சிக்பள்ளாப்பூருக்கு சென்று மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை திறந்து வைக்கிறார். பின்னர் கிருஷ்ணராஜபுரா- ஒயிட்பீல்டு இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து, தாவணகெரேவுக்கு செல்லும் பிரதமர் மோடி, பாரதிய ஜனதாவின் விஜய சங்கல்ப … Read more

கட்கரியை மிரட்டிய கர்நாடக சிறைக்கைதி சிக்கினார்

நாக்பூர்:   நாக்பூரில்  உள்ள, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு கடந்த 21ம்  தேதியன்று அடுத்தடுத்து மூன்று போன் அழைப்புகள் வந்தன. அதில் பேசிய மர்ம  ஆசாமி, ரூ.10 கோடி கேட்டு ஒன்றிய அமைச்சருக்கு  கொலை மிரட்டல் விடுத்தார்.  அதெற்கென யுபிஐ ஐடியில், பணத்தை செலுத்துமாறும் கூறியிருந்தார். இந்த  வழக்கில் போன் அழைப்பை வைத்து ஆய்வு ெசய்ததில் கர்நாடகா மாநிலத்தின் பெலகாவியில் உள்ள சிறையில் உள்ள கைதி ஜெயேஷ் பூஜாரி என்பது தெரியவந்தது.  சோதனை செய்ததில், மங்களூரூவில் … Read more

கேஸ் மானியம் ரூ.200ஆக அதிகரிப்பு!!

சமையல் எரிவாயு மானியம் ரூ.200 ஆக அதிகரித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சமையல் … Read more

உடனே அப்ளை பண்ணுங்க..!! சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு..!!

மும்பையை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி Apprentice பிரிவில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 230 பணியிடங்களும், புதுச்சேரியில் ஒரு பணியிடமும் காலியாக உள்ளன. மீதமுள்ள இடங்கள் பிற மாநிலங்களில் காலியாக இருக்கின்றன. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் பணி இடம்: இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாட்டில் … Read more