சீன எல்லை அருகே 37 புதிய சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டம்

சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ICBR எனப்படும் இந்திய- சீன எல்லைச் சாலைகள் அமைக்கும் பணிகள் லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் 3ம் கட்டப் பணிகளுக்கான உயர்மட்டக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்க … Read more

அம்ரித்பால் சிங் தலைமறைவு? நேபாள அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம்

காத்மாண்டு: காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் நேபாளத்தில் தலைமறைவாகி உள்ளார் என கூறப்படுகிறது.  அவரை அங்கிருந்து தப்பாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி நேபாளத்துக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரித்பால் சிங். காலிஸ்தான்  ஆதரவாளரான இவர் வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இவரை  கைது செய்ய 7 மாவட்டங்களை சேர்ந்த மாநில போலீசார் அடங்கிய ஒரு சிறப்பு படை அமைக்கப்பட்டு  தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அம்ரித்பால் … Read more

லே பகுதியில் 3 சாலையும் முன்கூட்டியே திறப்பு – சீன எல்லையில் 37 சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: துருப்புகளின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்காக இந்த ஆண்டு லே செல்லும் 3 வழித்தடங்களிலும் விரைந்து பனி அகற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் வழியாகவும் இமாச்சல பிரதேசத் தின் மணாலி வழியாகவும் லே செல்லும் சாலைகள் லடாக்கின் உயிர்நாடியாக உள்ளன. இச்சாலைகள் குளிர் காலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மாதக் கணக்கில் மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் 439 கி.மீ. நீள ஸ்ரீநகர் வழித்தடம் இந்த ஆண்டு 68 நாட்களுக்குப் பிறகு, அதாவது மார்ச் 16-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த … Read more

ஜி20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிகள் உச்சி மாநாடு இன்று தொடக்கம்.!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஜி 20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த இரண்டுநாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். வெளிநாட்டு பிரதிநிதிகளுக்குத் தேவையான போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றுக்காக 157 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநாட்டின் போது வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு மாநிலம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய முழுமையான தகவல்கள் வழங்கப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, மாநாட்டையொட்டி விசாகப்பட்டினம் … Read more

பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டம் தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் கையெழுத்திட மறுப்பு: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: பிஎம் ஸ்ரீ பள்ளி என்பது பள்ளிகளை மேம்படுத்த ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய நிதியுதவி திட்டம். இந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்.5ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 14500க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும். இந்த திட்டத்தில் இதுவரை 9 ஆயிரம் பள்ளிகள் கல்வி அமைச்சகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் உள்பட 2.5 லட்சம் … Read more

‘சிந்திக்கும் இயந்திர மனிதன் வருவான்’ – 59 ஆண்டுக்கு முன்பே கணித்த எழுத்தாளர்

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு குறித்து புனைக் கதை எழுத்தாளர் ஆர்த்தர் கிளார்க் 59 ஆண்டுக்கு முன்பே பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் இப்போது பேசு பொருளாகி உள்ளது. இது மனிதனைப் போலவே சில பணிகளை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஓட்டலில் உணவு வழங்கும் சேவை செய்வது முதல் மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சை செய்வது வரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ரோபோக்கள் வந்துவிட்டன. இந்த … Read more

2024-25 கல்வியாண்டில் புதிய பாடப்புத்தகங்கள் வெளியீடு: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: தேசிய கல்வி கொள்கையின்படி  பாட புத்தகங்களில் மாற்றம் செய்யப்பட்டு  2024-25 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது என ஒன்றிய அரசு  தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய பாஜ அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது.  இந்நிலையில் 2024-25 கல்வியாண்டு முதல் அனைத்து நிலை மாணவர்களும் புதிய, புதுப்பிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை படிப்பார்கள் என ஒன்றிய  கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாட புத்தகங்களில் திருத்தம் செய்து புதிய பாடங்களை சேர்ப்பதற்கு  முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்துாரி … Read more

வினோத கிராமம்..!! திருமணத்திற்கு முன்பே.. துணையுடன் பாலியல் உறவில் ஈடுபட அனுமதி..!!

சட்டீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா என்ற பழங்குடி இன மக்கள், தனித்துவமான பண்பாட்டு பழக்க வழக்கத்தை கொண்டவர்கள். பொதுவாக நமது சமூகத்தில் காதலையே முழுமையாக ஏற்கும் பக்குவம் இல்லை. அப்படி இருக்க இந்த பழங்குடி மக்களோ, இளம் வயதினர் திருமணம் செய்யாமலேயே பாலியல் உறவில் ஈடுபட அனுமதிக்கும் பழக்கத்தை ஒரு சடங்காகவே அவர்கள் பின்பற்றுகின்றனர் என்றால் வியப்பாக உள்ளது. கவுக்டல் என்ற பாரம்பரியத்தை இந்த பழங்குடி மக்கள் பின்பற்றுகின்றனர். இந்த பழங்குடியின மக்கள் மூங்கிலால் ஒரு பெரிய … Read more

கருப்பு உடையணிந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் – அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்

புதுடெல்லி: ராகுல் காந்தி பதவி தகுதி இழப்பு, தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் மோடி குறித்து பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் நீதிமன்றம், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. … Read more

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படும்: பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி விநியோகிக்கப்படும் என பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் மானிய விலையில் வழங்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத கால சம்பளம் வழங்கப்படும். காங். ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 716 ஊழியர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவர். வீடு கட்டுவதற்காக கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியவர்களின் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என ரங்கசாமி அறிவித்திருக்கிறார்.