சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்துள்ளது: சஞ்சய் ராவத் புகாருக்கு ஷிண்டே தரப்பு மறுப்பு
மும்பை: சிவசேனா கட்சிப் பெயர் மற்றும் அதன் சின்னத்தைப் பெற ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்ததாக சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார். இதை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு மறுத்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இந்நிலையில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினர். இதனால் … Read more