இந்தியா மனிதநேயத்தை முதன்மையாக கொண்ட நாடு; உலகம் முழுவதையும் ஒரேகுடும்பமாக கருதுகிறோம்: பிரதமர் மோடி

டெல்லி: இந்தியா மனிதநேயத்தை முதன்மையாக கொண்ட நாடு; உலகம் முழுவதையும் ஒரேகுடும்பமாக கருதுகிறோம் என்று பிரதமர் கூறியுள்ளார். குடும்பத்தில் ஒருவருக்கு கஷ்டம் இருந்தால் அதற்கு உதவுவது இந்தியாவின் கடமை என்றும் துருக்கியில் ஆபரேஷன் தோஸ்தில் ஈடுபட்டுள்ள NDRF மற்றும் பிற அமைப்புகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

”அதானி குழுமத்துக்கு மேலும் கடன் வழங்க தயார்”- பேங்க் ஆஃப் பரோடா அறிவிப்பின் பின்னணி என்ன?

அதானி பற்றிய செய்திகள் தினந்தோறும் ஏதாவது ஒரு வகையில் ஊடகங்களில் தவறாமல் இடம்பிடித்து வருகின்றன. அந்த வகையில், இன்று அதானி குழுமத்துக்கு கூடுதலாக கடன்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அதானியின் இன்றைய நிகர மதிப்பு ஹிண்டன்பர்க் (அமெரிக்க புலனாய்வு நிறுவனம்) வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமம் தொடர்ந்து பொருளாதாரத்தில் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இன்றுவரை, அதன் பங்குகள் வீழ்ச்சியிலேயே உள்ளன. அதன்படி, … Read more

நடுரோட்டில் சிறுமியின் முடியைப் பிடித்து இழுத்துச் சென்ற நபர்!! VIDEO

ஊதியம் பிரச்னையில் சிறுமி ஒருவரை கடையின் உரிமையாளர் கத்தியால் தாக்கி முடியைப் பிடித்து நடுரோட்டில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே ஹுடியரி என்ற பகுதியில் ஓம்கார் திவாரி (47) என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில் 16 வயது சிறுமி ஒருவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சிறுமியிடம் ஓம்கார் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமிக்கும், ஓம்காருக்கும் இடையே சம்பள பண பிரச்னை ஏற்பட்டது. இதனால் … Read more

“தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாக சொல்வது உண்மைக்குப் புறம்பானது” – ஜே.என்.யு விளக்கம்

புதுடெல்லி: “ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தேசியத் தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பானது; திரித்துச் சொல்லப்பட்டதாகும்” என்று அந்தப் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக மாணவர் மையம் ஒன்றில் (Teflas) மாணவர் சிலரும் வெளியாட்களும் சேர்ந்து ஒழுங்கீனமாக நடந்துகொண்டுள்ளனர். அப்போது நேர்ந்த குழப்பத்தில், நம் வணக்கத்திற்குரிய தேசியத் தலைவர்கள் அவமதிக்கப்பட்டதாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பானது; திரித்துச் சொல்லப்பட்டதாகும். இந்த நிகழ்வை தீவிரமாக விசாரிக்குமாறு துணைவேந்தர் … Read more

திருமணமான காதலியை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய காதலன்: டெல்லியை போன்று ராஜஸ்தானில் பயங்கரம்

நாகூர்: ராஜஸ்தானில் திருமணமான காதலியை துண்டு துண்டாக வெட்டி கிணறு உள்ளிட்ட இடங்களில் வீசியெறிந்த காதலனை போலீசார் கைது செய்தனர். 25 நாட்களுக்கு பின் துப்பு கிடைத்ததால் உடல் பாகங்களை போலீசார் தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டம் பாலசார் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான குட்டி என்ற இளம்பெண், தனது தாய் வீட்டில் இருந்து கடந்த ஜனவரி 20ம் தேதி முண்டாசரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். ஆனால் அங்கு போய் சேரவில்லை. … Read more

ஃபேஸ்புக்கில் தனிப்பட்ட புகைப்படங்கள் பகிர்வு: கர்நாடகாவில் பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடையே மோதல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முக்கியப் பொறுப்புகளை கவனித்து இரண்டு பெண் அதிகாரிகள் பகிரங்கமாக பொது வெளியில் சண்டையிட்டு வருகின்றனர். சமூக வலைதளமான ஃபேஸ்புக் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்தது இதற்கு காரணம் எனத் தெரிகிறது. இது அந்த மாநில அரசுக்கு தலைவலியை கொடுத்து வருகிறது. இந்தச் சூழலில், பெண் உயர் அதிகாரிகளின் இந்த அணுகுமுறையைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அந்த மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கடுமையான நடவடிக்கைகள் பாயும் என எச்சரித்துள்ளார். அப்படி என்ன நடந்தது? ஞாயிறு … Read more

ஐதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐஎம் தலைவருமான ஒவைசியின் வீடு மீது கல்வீசி தாக்குதல்: டெல்லி போலீசார் விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் ஐதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐஎம் தலைவருமான ஒவைசியின் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவரும், ஐதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஒவைசியின் வீடு டெல்லியின் அசோகா சாலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், ஜன்னல்களை சேதப்படுத்தியதாகவும்  அசாதுதீன் ஒவைசியின் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. … Read more

ஒரே மாதத்தில் இவ்ளோ வீழ்ச்சியா! ரூ.4.13 லட்சம் கோடியாக சரிந்தது அதானியின் சொத்துமதிப்பு

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமம் தொடர் சரிவுகளைச் சந்தித்து வரும் நிலையில், இன்றைய நிலவரப்படி, அதானியின் நிகரமதிப்பானது 50 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (4.13 லட்சம் கோடி ரூபாய்) குறைவாகவே உள்ளது. இன்றுவரை சரிவைச் சந்திக்கும் அதானி குழும பங்குகள் அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமத்தின் வளர்ச்சி அதளபாதாளத்தில் விழுந்துள்ளது. அந்த குழுமம், முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், கடனில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்த திட்டம், எஃபி.பி.ஓ. … Read more

பிஹார் அரசியல் | நிதிஷ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கினார் உபேந்திர குஷ்வாஹா

பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், ராஷ்ட்ரிய லோக் ஜனதா தளம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாகவும் முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான உபேந்திர குஷ்வாஹா, கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைத்தார். அதன் பிறகு, ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்த நிதிஷ் குமார், அக்கட்சியின் தலைவரான … Read more

பீகார் மாநிலம் பாட்னா அருகே இருதரப்பினர் இடையே மோதல்.. துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

பீகார் மாநிலம் பாட்னா அருகே தனியார் நிலத்தில் கார் பார்க்கிங் தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். வன்முறையில் மேலும் சிலர் காயம் அடைந்த நிலையில், வீடுகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மீதும் கிராமத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பத்தால் அங்கு பதற்றம் நிலவுவதால், கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி … Read more