முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது

டெல்லி: 2023-24 கல்வி ஆண்டில் முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட மையங்களில் காலை 9 மணி முதல் பகல் 12.30 வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது.

பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு – இந்தியாவின் கண்டுபிடிப்பை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகோள்

புதுடெல்லி: அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸ் பிரதமர் மோடியை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “பல்வேறு விவகாரங்கள் குறித்து பில் கேட்ஸ் உடன் ஆலோசனை நடத்தினேன். அவரது பணிவு, உலகத்தின் மீதான தெளிவான பார்வை பிரமிக்க வைக்கிறது” என்று தெரிவித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து பில் கேட்ஸ் தனது இணைய பக்கத்தில் விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த ஒரு வாரமாக நான் இந்தியாவில் … Read more

உணவுத் தட்டுப்பாட்டால் தவிக்கும் நிலையிலும் கூட, இந்தியாவில் போதைப் பொருள் கடத்தல் மூலம் தீவிரவாதத்துக்கு நிதியளிக்கும் பாகிஸ்தான்

கடுமையான நிதி நெருக்கடி மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் தவிக்கும் நிலையிலும் கூட, காஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுவதற்கு பாகிஸ்தான் நிதி ஒதுக்கி வருவதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்காக போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக  ஜம்முகாஷ்மீர் போலீசார்  சோதனை நடத்தினர். அப்போது, எல்லைக் கோடு அருகே உள்ள ஒரு வீட்டில் இருந்து ஏழு கிலோ ஹெராயின், இரண்டு கோடி ரூபாய் ரொக்கம், 15000 அமெரிக்க டாலர்கள், … Read more

தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளைக் கடந்தும் பலன் அளிக்கிறது கல்லணை: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை இன்னும் உறுதியுடன் நின்று மக்களுக்கு பலன் தந்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைகளிலும் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் குறித்து இணையவழி கருத்தரங்கு மூலம் மக்களுக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்து வருகிறார். அந்த வரிசையில் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தொடர்பாக நேற்றைய இணையவழி கருத்தரங்கில் அவர் பேசியதாவது: வளர்ச்சி மற்றும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, எந்தவொரு நாட்டின் நிலையான வளர்ச்சியிலும் … Read more

மகாராஷ்டிராவில் வங்கதேசத்தினர் 18 பேர் கைது

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையின் கன்சோலி பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரின் திருமண நாளை கொண்டாட அந்நாட்டை சேர்ந்த பலர் கடந்த புதன்கிழமை ஒன்று கூடினர். அங்கு போலீஸார் திடீர் சோதனை நடத்தியதில் வங்கதேசத்தை சேர்ந்த 10 பெண்கள் உள்ளிட்ட 18 பேர் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இன்றி ஓராண்டுக்கு மேலாக அப்பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 1946-ம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டம் மற்றும் 1950-ம் ஆண்டு பாஸ்போர்ட் விதிகளின் … Read more

திரிபுராவில் 8ம் தேதி புதிய அரசு பதவியேற்பு: பிரதமர் பங்கேற்பு

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. முதல்வர் மாணிக் சாஹா நேற்று முன்தினம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பாஜ தலைமையிலான புதிய அரசு வருகின்ற 8ம் தேதி பதவியேற்கின்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பதவியேற்பு விழா விவேகானந்தர் மைதானத்தில் நடைபெறும் என்றார். … Read more

திரிபுராவில் பாஜக அரசு வரும் 8-ஆம் தேதி பதவியேற்பு..!!

சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக 32 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஒரு இடத்தையும் வென்றுள்ளது. பிரதமரின் மாநில பயணம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் எஸ்.கே.சின்ஹா ஆலோசனை நடத்திவருகிறார். மார்ச் 8-ம் தேதி புதிய அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் திரிபுரா வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். முதல்வர் மாணிக் சாஹா தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நரேன் … Read more

பழைய பென்ஷன் திட்டத்துக்கு திரும்ப மத்திய அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: நாட்டில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கும் புதிய பென்ஷன் முறையே பின்பற்றப்படுகிறது. இருப்பினும் பழைய ஓய்வூதிய முறை வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: புதிய பென்ஷன் திட்டம் 2004-ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இதனிடையே டிசம்பர் 22, 2003-க்கு முன் விளம்பரப்படுத்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்த மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய … Read more

நாடு முழுவதும் பரவி வரும் ஃபுளு காய்ச்சல் – பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை… மத்திய அரசு எச்சரிக்கை

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கோவிட்டின் ஆரம்பகால அறிகுறிகளைப் போல் தோன்றும் ஃபுளு காய்ச்சல் பரவி வருகிறது என்பதால் மத்திய அரசு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியான இருமல் சில சமயங்களில் காய்ச்சல் ஆகியவை இதன் முக்கிய அடையாளங்கள். அப்படி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் சில வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. மருத்துவரை ஆலோசிக்காமல் … Read more

மம்தா குறித்து சர்ச்சை மே. வங்க காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கைது

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். இதன் பின்னர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீதான விமர்சனத்துக்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை கவுஸ்தக் பாக்சி கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அவர் மீது நேற்று முன்தினம் பர்டோலா காவல்நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை போலீசார் குழுபாராக்பூரில் உள்ள கவுஸ்தக் வீட்டிற்கு சென்று சோதனை … Read more