பற்றி எரியும் திரிபுரா; பாஜகவினர் வெறியாட்டம்.!

திரிபுராவில் பாஜக ஆட்சியை தக்க வைத்ததும், கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளை தீக்கிரையாக்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆட்சியை அமைக்க 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஆனால் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 11 இடங்கள் குறைவாகவே பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் முக்கிய … Read more

மருமகளை காதலித்த மாமனார்… மகனின் பைக்கையும் விட்டுவைக்கவில்லை!

Rajasthan Bizarre Love: காதலில் விழுவது மிக அழகான உணர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் நபரிடம், நீங்கள் காதலில் விழுந்தால் என்ன செய்வது? வினோதமானது தானே! ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது மகனின் மனைவியுடன் காதலித்துள்ளார். இந்த காதலால், அந்த நபரின் பேத்தியை (மகனின் மகள்) விட்டுவிட்டு இருவரும் ஓடிவிட்டனர். ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள சிலோர் கிராமத்தில் இந்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பவன் வைரகி சதர் … Read more

''நாடு ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டது'' – பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடு ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டதையே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான மத்திய விசாரணை அமைப்புகளின் கைது நடவடிக்கைகள் உணர்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் டெல்லி மாநில கல்வி அமைச்சராக இருந்தவருமான மணிஷ் சிசோதியா கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். டெல்லியில் கடந்த 2021-22ல் அமல்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீது … Read more

நாடு முழுவதும் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆய்வு மையம் அறிவுறுத்தல்!

புதுடெல்லி: நாடு முழுவதும் சமீப காலமாக பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு ‘A H3n2 ‘ என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் ‘A H3n2 ‘ வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் … Read more

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு புகழாரம்..!!

இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ் பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை அன்று சந்தித்திருந்தார். இது தொடர்பாக கேட்ஸ் நோட்ஸ் பிளாக் தளத்தில் அவர் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முக்கிய பிரபலங்களை அவர் சந்தித்து வருகிறார். … Read more

மேகாலயாவில் என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா ஆட்சி அமைப்பதில் திடீர் திருப்பம்..!!

மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. சோகியோங் தொகுதி வேட்பாளர் உயிரிழந்ததால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 26 இடங்களில் வெற்றி பெற்றிருந்த என்பிபி கட்சி தலைவர் கான்ராட் சங்மா, 32 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னர் பகு சவுகானை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கான்ராட் சங்மா … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவை பிடிக்க டெல்லியில் தனிப்படை போலீசார் முகாம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவை பிடிக்க டெல்லியில் தனிப்படை போலீசார் முகாமீட்டுள்ளனர். திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ், ஆய்வாளர் ஐயப்பன் உள்பட 7 பேர் கொண்ட தனிப்படை போலீஸ் டெல்லியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாரணாசி மணிகர்னிகா காட் பகுதியில் சாம்பலைக்கொண்டு ஹோலி கொண்டாட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மணிகர்னிகா காட் பகுதியில் திரண்ட ஏராளமானோர் சாம்பலைக்கொண்டு ஹோலி கொண்டாடினர். வருகின்ற 8-ம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. மணிகர்னிகா காட் பகுதியில் சாம்பலை வைத்து விளையாடும் ஹோலி நாடு முழுவதும் பிரபலமானது. இங்கு ஹோலி பண்டிகை கொண்டாடவும், அதனை பார்ப்பதற்கும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்தனர். இதேபோல் மதுராவில் … Read more

CCTV: சாலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு… ஆளையே சாய்த்த அதிவேக தண்ணீர் – மிரளவைக்கும் வீடியோ!

மகாராஷ்டிரா தலைநகர் யாவத்மல் விதர்பா குடியிருப்பு என்ற பகுதிக்கு அருகே, சாலையின் கீழே பதிக்கப்பட்டிருந்த ராட்சத தண்ணீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, சாலையில் பெரிய குழி ஏற்பட்டது. ராட்சத குழாய் வெடிப்பால் தண்ணீர் வேகமாக பொங்கிவந்த நிலையில், அதில் இருச்சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியினர் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்க அனுப்பிவைத்தனர். மேலும், இந்த வெடிப்பு குறித்து வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. 40 வினாடிகள் உள்ள அந்த சிசிடிவி … Read more

உலகில் முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ‘பாகுபலி’ மூங்கில் தடுப்பு

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலத்தில் வாணி – வரோரா நெடுஞ்சாலையில் 200 மீட்டர் தூரத்துக்கு மூங்கில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் முறையாக நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள இந்த மூங்கில் தடுப்பு குறிப்பிடத்தக்க சாதனை. இதற்கு ‘பாகுபலி’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தற்சார்பு இந்தியா நடவடிக்கையில் சிறப்பான செயல்பாடு. இந்த மூங்கில் தடுப்புகள் பல அரசு மையங்களிலும், தேசிய வாகன பரிசோதனை சாலை களிலும் பல சோதனைகளுக்கு … Read more