கர்நாடக பாஜக முன்னாள் எம்எல்சி பாபுராவ் சிஞ்சன்சூர் காங்கிரஸில் இணைந்தார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜத ஆகிய முக்கிய கட்சிகள் பிற கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜக முன்னாள் எம்எல்சி புட்டண்ணா அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் 14 தலித் அமைப்புகளின் தலைவர்கள் முன்னாள் அமைச்சர் ஆஞ்சநேயா வழிகாட்டுதலின்பேரில் க‌ர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் முன்னிலையில் காங்கிரஸில் … Read more

நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலர் உத்பால் குமார் சிங் அறிவித்துள்ளார். தகுதி … Read more

ஒளரங்கசீப் குறித்து செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்… குடும்பத்தை வெளியேற்றிய கிராமம்!

செல்போனில் ஒளரங்கசீப் குறித்து தவறான ஸ்டேட்டஸ் வைத்ததற்காக, இளைஞர் ஒருவரின் குடும்பத்தை, கிராமத்தைவிட்டே வெளியேற்றி உள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து பிரிந்த மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள ஔரங்காபாத் நகரை, பெயர் (சத்ரபதி சம்பாஜி நகர்) மாற்றம் செய்தது தொடர்பாக ஏற்கெனவே உள்ளூர் அரசியல் கட்சியினருக்கு இடையே சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தற்போது புதிய பிரச்சினை ஒன்று வெடித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் … Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு

புதுடெல்லி: காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 65 முதியவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் பஞ்சாபில் உள்ள பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 1988-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு 34 ஆண்டுகள் கழித்து அதாவது கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நவ்ஜோத் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு … Read more

கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை முடிவு

டெல்லி: கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்துள்ளனர். விட்டு உயயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரித்துள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

ராகுல் காந்திக்கு முன் உள்ள சட்ட வாய்ப்புகள் என்னென்ன?

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது நீதிமன்ற தீர்ப்பின் தாக்கம் என்பதால் அந்த தீர்ப்பை எதிர்த்து தடை பெறுவதுதான் சரியானதாக இருக்கும் என சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு இரண்டு வருட சிறை தண்டனை வழங்கியது சூரத் நகரில் உள்ள சீஃப் ஜூடிசியல் (CJM)  மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம். ஆகவே இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் குஜராத் மாநிலத்தில் சூரத் பகுதியில் உள்ள செஷன்ன்ஸ் நீதிமன்றத்தை அணுகி மேல்முறையீடு … Read more

கலப்பு திருமணம் செய்தால் ரூ.10 லட்சம்!!

கலப்பு திருமணம் செய்து கொண்டால் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட்டில் கலப்பு திருணம் குறித்த நிதியுதவி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, கலப்பு மணம் செய்பவர்களுக்கு நிதியுதவி 5 லட்ச ரூபாயில் இருந்து 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சமூக … Read more

பிஹார் உட்பட 4 மாநில பாஜக தலைவர்கள் மாற்றம் – தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் இந்த ஆண்டு 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. சமீபத்தில் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்துவிட்டன. திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. அதேபோல் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், கர்நாடகா உட்பட மற்ற மாநில தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னர் கட்சியை மேலும் பலப்படுத்த பாஜக மேலிடம் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு … Read more

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு என பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதியிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுகிறது.

ராகுல் காந்தி எம்.பி. பதவியைத் திரும்பப் பெறுவது சுலபமா… கடினமா? ஓர் அலசல்

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டாலும், ராகுல் காந்தி தனது மக்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவது சுலபமல்ல எனவும், அதற்கு அதிக அவகாசம் தேவைப்படும் எனவும் சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். முதல்கட்டமாக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, தான் குற்றவாளி என சூரத் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு மற்றும் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இரண்டு வருட சிறைத்தண்டனை ஆகிய இரண்டுக்கும் தடை பெற வேண்டும். அப்போது, எதிர்தரப்பு ராகுல் காந்தியின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதற்கும், மேலும் தீர்ப்பு அவருக்குச் … Read more