சிபிஐ இயக்குநருக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடிதம்

டெல்லி : சிபிஐ இயக்குநருக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்  ‘நாட்டிலேயே மேகாலயாவில் அதிக ஊழல் நடப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்; அவர் கண்டிப்பாக ஆதாரம் இல்லாமல் பேசியிருக்க மாட்டார்; நீங்கள் அவருக்கு சம்மன் அனுப்பி, அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும்’என உத்தரவிட்டார்.

ஏப்ரல் மாதம் எத்தனை நாள் வங்கிகள் இயங்காது? வெளியானது லிஸ்ட்

ஏப்ரல் 2023 வங்கி விடுமுறைகள்: மார்ச் மாதம் இன்னும் 8 ன் நாட்களில் முடிய உள்ளது. மறுபுறம் ஏப்ரல் 1 முதல் நாட்டில் புதிய நிதி தொடங்குகிறது. இதனுடன், ஒவ்வொரு ஆண்டும் புதிய நிதியாண்டில் இதுபோன்ற பல மாற்றங்கள் ஏற்படுகின்றன, இது சாதாரண மக்களின் பாக்கெட்டுகளை நேரடியாக பாதிக்கும் என்றே கூறலாம். அதேபோல் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் ஏப்ரல் 2023 இல் வரும் வங்கி விடுமுறைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கும் ஏப்ரலில் வங்கி தொடர்பான ஏதேனும் … Read more

டெல்லியில் இளம்பெண் நிக்கி யாதவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாஹில் உள்பட 6 பேருக்கு காவல் நீட்டிப்பு!

டெல்லியில் இளம் பெண் நிக்கி யாதவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாஹில் மற்றும் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் காவல் முடிவடைந்ததையடுத்து அந்த ஆறு பேரும் நேற்று டெல்லி துவாரகா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். நிக்கியுடன் ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்த சாஹில் கடந்த மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். நிக்கி கொலைக்குப் பின் வேறு ஒரு பெண்ணை அவர் மணம் முடித்துள்ளார். இதையடுத்து, கொலையை மறைத்ததற்காக சாஹிலின் தந்தை … Read more

மறுபடியும் முதல்ல இருந்தா?…. அதிகரிக்கும் கொரோனா பரவல்.. பொது இடங்களில் கட்டாயம் முகக்கசவம் அணிய கேரள அரசு உத்தரவு!!

திருவனந்தபுரம் : கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. எக்ஸ்பிபி.1.16 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. 138 நாட்களுக்கு பிறகு நேற்று 1,134 பேருக்கு புதிதாக தொற்று பரவியது. இதனால் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 7026ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள். இதனால் ஒட்டுமொத்த … Read more

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் : கேரள அரசு உத்தரவு!!

திருவனந்தபுரம் : கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே நாளில் 210 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து கேரள அரசு பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியது.

அதிகரிக்கும் கொரோனா.. டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி : நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை  நடத்த உள்ளார்.இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,134 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் 7,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; நாட்டில் இன்ஃபுளூயன்சா காய்ச்சல் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதம ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

டெல்லி மெட்ரோ நிலைய ரயில்களின் வேகம் 100கிலோ மீட்டராக அதிகரிப்பு

புதுடெல்லி -துவாரகா இடையே செல்லும் மெட்ரோ ரயிலின் வேகம் 100கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம்  வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த பாதையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து  விமான நிலையத்திற்கு செல்லும் பயண நேரம் வழக்கமான நேரத்தை விட  சில நிமிடங்கள் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புதுடெல்லி- துவாரகா ரயில் பாதையில்  நாளொன்றுக்கு சராசரியாக 65ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.  Source link

மம்தா-குமாரசாமி நாளை சந்திப்பு

கொல்கத்தா: மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி நாளை மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார். மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் சமீபத்தில் சந்தித்து பேசினார். இந்நிலையில், முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி மம்தாவை நாளை சந்தித்து பேசுகிறார். இது 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பாஜ அல்லாத கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைப்பதற்கான முயற்சி என கருதப்படுகிறது.

எல்லையில் பிரச்சினைகள் உள்ள போதும் சீனா போரை விரும்பவில்லை.. சீனாவின் மூத்த தூதரக அதிகாரி

எல்லையில் பிரச்சினைகள் உள்ள போதும் இந்தியாவுடன் சீனா போரை விரும்பவில்லை என்று  டெல்லியில் உள்ள சீனாவின் மூத்த தூதரக அதிகாரி மா ஜியா கூறினார். இருதரப்பினரும் எல்லைப் பகுதிகளில் போரையோ மோதலையோ விரும்பவில்லை என்று  மா ஜியா தெரிவித்துள்ளார். இந்திய பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், இருதரப்பினரின் நிர்வாக ரீதியான மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு ஆகியவை எல்லையில் மாற்றத்தை ஊக்குவிப்பதாகக் கூறினார். வெளியுறவு அமைச்சர்  ஜெய்சங்கர்  எல்லை நிலைமையை கடுமையானது என்று கூறியதற்கு பதிலளித்த மா, இரு தரப்பினரும் … Read more

50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ராணுவ வீரர்களுக்கு சிறுதானிய உணவு பொருட்கள் அறிமுகம்

புதுடெல்லி: ஐம்பது ஆண்டுகளுக்கு பின் ராணுவ வீரர்களுக்கு மீண்டும் சிறுதானிய உணவு  பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2023ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐநா அறிவித்துள்ள நிலையில், ராணுவ வீரர்களுக்கு ரேஷனில் சிறுதானிய உணவு பொருட்கள் வினியோகிக்கப்படும். பாரம்பரிய சிறுதானிய உணவுகள் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. இதனைக் கருத்தில் கொண்டே ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து பிரிவினருக்கும் அன்றாட உணவில் சிறுதானியங்கள் சேர்க்கப்படுகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் சிறுதானியங்களுக்கு பதிலாக கோதுமை வழங்கப்பட்டது. தற்போது, ராணுவ … Read more