சட்டீஸ்கரில் நாளை மறுநாள் காங்கிரஸ் மாநாடு: எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் கூட்டணி ‘பார்முலா’ என்னாகும்? அரசியல் தடைகளை உடைப்பது குறித்து முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: சட்டீஸ்கரில் நாளை மறுநாள் காங்கிரசின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் காங்கிரசின் கூட்டணி பார்முலா குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் … Read more

அக்னிவீர் திட்டத்தில் நுழைவுத்தேர்வு – திருச்சி மண்டல இயக்குனர் கர்னல் தீபக் குமார் பேட்டி

அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறையில் முதல் கட்டமாக ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு நடத்தவிருப்பதாக ராணுவ ஆள்சேர்ப்பு முகமையின் திருச்சி மண்டல இயக்குனர் கர்னல் தீபக் குமார் பேட்டியளித்துள்ளார். இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு முகமை இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் கர்னல் தீபக்குமார் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ”ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் … Read more

‘100 மோடி வந்தாலும் வெற்றி எங்களுக்கே’ – காங்கிரஸ் தலைவர் சூளுரை.!

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு வருகிற 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனே திரிபுரா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மூன்று மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்.டி.பி.பி.) தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில் கடந்தமுறை நாகா மக்கள் முன்னணி 26 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக திகழ்ந்தது. ஆனால் … Read more

தலைமைச் செயலகத்துக்கு சைக்கிளில் சென்ற பீகார் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ்..!

பீகார் தலைமைச் செயலகத்துக்கு சைக்கிளில் சென்ற அம்மாநில அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ், மறைந்த உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் தனது கனவில் வந்ததாகவும் தாமும் அவரும் சைக்கிளில் பயணித்து அவர் பிறந்த கிராமத்துக்குச் சென்றதாகவும் வினோத விளக்கம் அளித்துள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சரான லாலு பிரசாத் யாதவ்வின் மகனான தேஜ் பிரதாப் யாதவ், பீகாரின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். காலை திடீரென பாதுகாவலர்களுடன் சைக்கிளில் தலைமைச் செயலகம் சென்ற … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.!

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. அதிமுக வழக்கில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. சென்னை உயர்நீதிமன்றம் பெஞ்ச் ‘பொதுக்குழு செல்லும்’ என்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுவதால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11 ஆம் தேதி … Read more

சரியும் அதானி குழும பங்குகள்.. அலறும் ஆஸ்திரேலிய மக்கள்.. பின்னணி காரணம் இதுதான்!

அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகள் தொடர் சரிவின் காரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகள் தொடர் சரிவின் காரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதானியின் வீழ்ச்சி, அந்நாட்டின் ஓய்வூதிய சேமிப்பு நிதிகளைப் பாதித்துள்ளதாகத் தெரிய வந்திருக்கிறது. கார்டியன் வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கையின்படி, “ஆஸ்திரேலியாவின் 243 டாலர் பில்லியன் ப்யூச்சர் பண்ட், காமன்வெல்த்தின் நீண்டகால நிதி நிலுவையை வலுப்படுத்த அமைக்கப்பட்டது. இதில் குயின்ஸ்லாந்தில் … Read more

மோர்பி பால விபத்து | உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

காந்திநகர்: குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விபத்தின் பின்னணி: குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 233 மீட்டர் நீளம் கொண்ட கேபிள் நடைபாலம் கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பாரம் தாங்காமல் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மீது இருந்தவர்களில் 135 பேர் … Read more

சீன விவகாரத்தில் ராகுல்காந்தியின் கருத்து சிறந்ததாக இருந்தால், கேட்க தயாராக உள்ளேன்.! வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

புதுடெல்லி: சீன விவகாரத்தில் ராகுல்காந்தியின் கருத்து சிறந்ததாக இருந்தால், அவர் சொல்வதைக் கேட்க தயாராக உள்ளேன் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘சீனாவுக்கான தூதராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளேன். இந்திய – சீன எல்லைப் பிரச்னைகளை பல ஆண்டுகளாக கையாண்ட அனுபவம் எனக்கு உள்ளது. அதற்காக நான் மிகவும் அறிவாளி என்று கூறவில்லை. ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதைப் … Read more

அதானி குழும பங்குகளுக்கு அடிமேல் அடி! பல கோடிகள் இழப்பு.. பின்னுக்கு தள்ளப்பட்டார் அதானி!

பங்குகள் விலை வீழ்ச்சியால் அதானி குழும நிறுவனங்களுக்கு ஒரு மாதத்தில் ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக இன்றும் பங்குச்சந்தையில் சரிவு இந்தியப் பங்குச் சந்தைகள், இன்று கணிமான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. வர்த்தக நிறைவில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 927 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 744 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 272 புள்ளிகள் வீழ்ச்சிகண்டு 17 ஆயிரத்து 554 புள்ளிகளிலும் வர்த்தகமாகியது. பங்குச் சந்தையில் ஹெவிவெயிட் … Read more

இந்தியாவை விட தங்கம் மிகவும் மலிவாக கிடைக்கும் உலகின் ‘சில’ நாடுகள்!

இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில்  தங்கம் என்பது ஒவ்வொவொரு குடும்பத்திலும், குடும்ப விழாக்களிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது என்றால் மிகையில்லை. ஏனென்றால், தங்கம் வைத்திருப்பது மிகவும் மதிப்பும் கவுரமும் கொடுக்கும் என நம்பப்படுகிறது. அதோடு, சேமிக்கும் நோக்கிலும் தங்கம் வாங்குபவர்கள் அதிகம் உள்ளனர்.தனி நபர் மட்டுமல்லாது,  ஒவ்வொரு நாடும் முடிந்தவரை தங்கத்தை அதிக அளவில் வைத்திருக்க விரும்புகிறது. கடினமான காலங்களில் தங்க ஆபரணங்களை வைத்திருந்தால் அது பெரிதும் கை கொடுக்கும் என்பதையும்  மறுக்க இயலாது. இந்தியாவில், 2023 … Read more