ஒரே வழக்கில் இருவேறு தீர்ப்பு: சென்னை ஐகோர்ட்டுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஒரே வழக்கில் வெவ்வேறு விதமான தீர்ப்புகள் வெளியாகி இருப்பது குறித்து உடனடியாக கவனிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து செப்டம்பர் ஐந்தாம் தேதி நீதிமன்றத்தில் நீதிபதிகள் கூறிய முக்கிய விவரங்கள் மட்டும் தீர்ப்பாக வெளியான நிலையில், செப்டம்பர் 7ம் தேதி உயர்நீதிமன்றத்தின் இணையதளத்தில் அது வேறு விதமான தீர்ப்பாக பதிவாகி இருந்தது. … Read more

தமிழ் தேர்வு விலக்கு கோரிய மனு பிப்.6ல் விசாரணை

புதுடெல்லி: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் என கடந்த 2016ல் தமிழக அரசு விதிமுறை வகுத்தது. இதை ரத்து செய்யக் கோரியும், மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசாணைக்கு தடை விதிக்க மறுத்து, 2022ம் ஆண்டு வரை மொழிவாரி சிறுபான்மை … Read more

பெண் சீடர் பலாத்கார வழக்கு சாமியார் அசாராம் பாபு குற்றவாளி: தண்டனை இன்று அறிவிப்பு

காந்திநகர்: ஆசிரமத்தில் இருந்த பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் அசாராம் பாபு குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.  குஜராத்தின் அகமதாபாத்தில் அசாராம்பாபுவின் ஆசிரமத்தில் இருந்த பெண் சீடரை கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை பல முறை சாமியார் அசாராம் பாபு பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013ல் வழக்கு பதிவு செய்யபட்டது.   வழக்கை விசாரித்த காந்திநகர் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி டிகே சோனி, அசாராம் பாபு … Read more

அனல் பறக்கும் அரசியல் சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: நாளை ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி: அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி, பிபிசி ஆவணப்பட விவகாரம் போன்ற பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஒன்றிய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டமாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். … Read more

15 ஆண்டுகள் பழமையான 9 லட்சம் அரசு வாகனங்கள் ஏப்ரல் 1ம் தேதி நிறுத்தப்படும்: நிதின் கட்கரி அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், ‘‘சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் 15 ஆண்டுக்கு மேற்பட்ட பழமையான 9 லட்சம் அரசு வாகனங்களை நிறுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்பாட்டில் இருந்து நீக்கப்படும். அவைகளுக்கு பதிலாக, மாற்று எரிசக்தியில் இயங்கக் கூடிய புதிய வாகனங்கள் கொண்டு வரப்படும். மேலும் எத்தனால், மெத்தனால், பயோ சிஎன்ஜி, பயோ எல்என்ஜி மற்றும் … Read more

‘இந்தியா மீதான தாக்குதல்’ என்ற குற்றச்சாட்டுக்கு பதிலடி தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது: அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் குட்டு

புதுடெல்லி: ‘பங்குச்சந்தையில் மோசடி என வெளியான அறிக்கை இந்தியா மீதான தாக்குதல்’ என அதானி குழுமம் கூறிய குற்றச்சாட்டுக்கு, ‘தேசியவாதத்தால் மோசடிகளை மறைக்க முடியாது’ என ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலடி தந்துள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குழுமம் பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத மோசடிகளை செய்ததாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த 24ம் தேதி அறிக்கை வெளியிட்டது. 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக பல்வேறு ஆதாரங்களை … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கில் 3 நாட்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் 3 நாட்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தை எதிர் தரப்பாக சேர்க்க வேண்டும் என்ற பழனிசாமி தரப்பின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றது. ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்த பழனிசாமி கோரியிருந்தார்.

மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்விலிருந்து விலக்குமா தமிழக அரசு?

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் மொழியியல் சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக வரும் ஆறாம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கட்டாய தமிழ் மொழி தேர்வில் இருந்து விலக்களிக்கக்கோரி மொழி சிறுபான்மையினர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்டிருந்த இந்த அறிவிப்பு ஆணையை ரத்துசெய்ய கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை … Read more

பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் கைலாஷ் கேர் மீது பாட்டில் வீசிய இரண்டு இளைஞர்கள் கைது…!

பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல பாடகர் கைலாஷ் கேர், கர்நாடகாவின் ஹம்பியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கன்னட மொழி பாடல்களை பாடாததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், மேடையில் காலி பாட்டிலை வீசி எறிந்தனர். ஹம்பி உற்சவத்தையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், மேடையில் பாடிக்கொண்டிருந்த கைலாஷ் கேர் மீது பிளாஸ்டிக் பாட்டில் வீசப்பட்டது. சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரித்தபோது, பல்வேறு மொழி பாடல்களை பாடிய கைலாஷ் கேர், கன்னட பாடல்களை பாடாததால் ஆத்திரத்தில் பாட்டிலை … Read more

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனுதாக்கல்

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனுதாக்கல் செய்துள்ளார். விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.