பூமிக்குள் புதையும் ஜோஷிமத்: என்ன காரணம்? – மத்திய அரசு நிபுணர் குழு அமைப்பு!

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் ஆங்காங்கே நிலவெடிப்புகள் ஏற்பட்டு, சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் 600 கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன. மேலும், ஜோஷிமத் நகரில் உள்ள ஒரு கோயில் இடிந்து விழுந்துள்ளது. ஜோஷிமத் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள கர்ணபிரயாக் நகரிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் விரிசல் விழுந்த தங்களது வீடுகளை … Read more

திறப்பு விழா தேதி அறிவிப்பு அயோத்தி ராமர் கோயில் பூசாரியா அமித்ஷா?: கார்கே காட்டமான கேள்வி

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா தேதி அறிவித்த அமித்ஷா கோயில் பூசாரியா என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.அயோத்தி  ராமர் கோயிலின் கட்டுமான பணி முடிந்து 2024 ஜனவரி 1ம் தேதி கோயில்  திறக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  கூறினார். இதுதொடர்பாக ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர்  சம்பத் ராய்  அளித்த பேட்டியில், ‘அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தியன்று கோயில் கருவறையில் ராமர்  சிலை நிறுவப்படும். தொடர்ந்து … Read more

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரின் தாயாரை சுட்ட 16 வயது சிறுமி – கைதுசெய்து போலீசார் விசாரணை

தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு முன் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இளைஞரின் தாயாரை, 16 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பஜன்பூரா சுபாஷ் மொகலா பகுதியில் 50 வயது பெண் ஒருவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் இவரது கடைக்கு வந்த 16 வயது சிறுமி ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அந்த 50 … Read more

ஒரு நாள் சம்பளத்தை சேகரித்து விபத்தில் படுகாயமடைந்த மாணவிக்கு நொய்டா போலீஸார் ரூ.10 லட்சம் உதவி

புதுடெல்லி: விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பி.டெக் மாணவிக்கு தங்கள் ஒரு நாள் சம்பளத்தை சேகரித்து ரூ.10 லட்சம் உதவி வழங்க நொய்டா போலீஸார் முடிவு செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந் தவர் ஸ்வீட்டி குமாரி. இவர் தனது தோழிகள் கர்சோனி தாங் (அருணாச்சல் பிரதேசம்), அங்கன்பா (மணிப்பூர்) ஆகியோ ருடன் கடந்த டிசம்பர் 31-ம் தேதிபுத்தாண்டை கொண்டாட கிரேட்டர் நொய்டா பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது அதிவேகத்தில் வந்த கார் … Read more

வேண்டாம் அப்படி செய்யாதீங்க… ராகுல் காந்தி பயணம் பற்றி பிரசாந்த் கிஷோர் வெடி பேச்சு!

பிரசாந்த் கிஷோர்… இந்த பெயரை கேட்டாலே மோடியை மத்தியில் ஆட்சி அமைக்க வைத்தது முதல் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேலை செய்தது வரை மாநிலங்களின் லிஸ்ட் தான் முதலில் தோன்றும். அதன்பிறகு நிதிஷ் குமாருக்கு குட்பை சொன்னது, காங்கிரஸ் கட்சியில் சேர எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது என அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறின. ஜன் சூரஜ் யாத்ரா இவரது லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் ”ஜன் சூரஜ் யாத்ரா” என்ற பெயரில் பிகார் மாநிலம் … Read more

நீயில்லாத விடுமுறை வருத்தம் தரும் உண்மையான அன்பு இருந்தால் தனியாக வந்து சந்திக்கவும்…: 13 வயது மாணவிக்கு காதல் கடிதம் 47 வயது ஆசிரியர் சஸ்பெண்ட்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 47 வயது ஆசிரியர் 13 வயது மாணவிக்கு தனியாக சந்திக்க வரவும் என காதல் கடிதம் எழுதியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி கிராமத்தில் உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவி ஒருவருக்கு ஹரி ஓம் சிங் ( 47) என்ற ஆசிரியர் காதல் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில், உன்னை அதிகம் விரும்புகிறேன். விடுமுறை காலத்தில் … Read more

நடுங்க வைக்கும் குளிர், பனிமூட்டத்தால் தவிப்பு – டெல்லியில் விமானங்கள் தாமதம்

வட இந்தியாவில் வழக்கத்துக்கும் அதிகமான உறைய வைக்கும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் தலைநகர் டெல்லியில் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்தியாவில் குளிர் காலமாக இருந்தாலும், வாட்டி வதைக்கும் குளிரால் வட இந்திய மக்கள் அவதிப்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த வருடம் அதிகளவிலான குளிர் அங்கு நிலவி வருகிறது. சொல்லப்போனால், ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு டெல்லியின் பல இடங்கள் சென்றுள்ளது. குறிப்பாக சஃப்தர்ஜங் … Read more

நடுவானில் 2 முறை மாரடைப்பு: பயணி உயிரை காப்பாற்றிய இந்திய வம்சாவளி மருத்துவர்

மும்பை: இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஹெபடாலஜிஸ்ட் கன்சல்டன்ட் மருத்துவராக இருப்பவர் விஸ்வராஜ் வெமலா. இவர் தனது தாயை பெங்களூ ருக்கு அழைத்து வருவதற்காக பர்மிங்ஹாமில் இருந்து ஏர்இந்தியா விமானத்தில் இந்தியாவுக்கு பயணம் செய்தார். இந்நிலையில் விமானத்தில் 43 வயது பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதை அறிந்த விஸ்வராஜ், நாடித்துடிப்பு இல்லாமல் மூச்சு விடாமல் இருந்த அந்தப் பயணியை உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ஒருமணி நேர சிகிச்சையில் அந்தப் பயணி இயல்பு நிலைக்கு வந்தார். … Read more

இமாச்சலபிரசதேசத்தில் சுக்விந்தர் சுகு முதல்வராக பதவியேற்ற நிலையில் அமைச்சரவை கூட்டம் விரிவாக்கம்

இமாச்சலபிரசதேசம்: இமாச்சலபிரசதேச மாநில அமைச்சரவை விரிவாக்கம் சிம்லாவில் ஆளுநர் மாளிகையில் நடந்து வருகிறது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிராமணம் செய்து வைக்கிறார். காங்கிரசின் சுக்விந்தர் சுகு டிசம்பர் 11-ல் முதல்வராக பதவியேற்ற நிலையில் அமைச்சரவை கூட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

”வெளிய தலைகாட்ட முடில.. எங்களுக்கும் குடுங்க” – தெலங்கானா வழுக்கை தலை சங்கத்தினர் கோரிக்கை

முடி உதிர்தல், இள வயதில் நரை முடி வருவது எப்படி பலருக்கும் கடுப்பாக இருக்கிறதோ அதே போல வழுக்கை தலையாக இருப்பவர்கள் சமூகத்தில் அனுபவிக்கும் பல இன்னல்களும் வெறும் வாய் வார்த்தையாக சொல்வது எளிதாக இருக்காது. இப்படி இருக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது போன்று வழுக்கை தலை உள்ளவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வழுக்கை தலை உள்ளவர்களுக்கென தெலங்கானாவில் சங்கம் ஒன்று … Read more