பணம் செலுத்தியும் உரிய நேரத்தில் செல்போனை டெலிவரி செய்யவில்லை! ஃப்ளிப்கார்ட்-க்கு அபராதம்

பணம் செலுத்தி ஆர்டர் செய்த செல்போனை டெலிவரி செய்யாததால் ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம். பெங்களூரு ராஜாஜி நகரில் வசித்துவரும் திவ்யஸ்ரீ என்பவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அன்று ரூ.12,499 மதிப்புள்ள ஒரு புதிய செல்போனை வாங்குவதற்காக ஃபிளிப்கார்டில் ஆர்டர் கொடுத்துள்ளார். இதற்கான முழு பணத்தையும் முன்கூட்டியே அவர் செலுத்திவிட்டார்.  திவ்யஸ்ரீ ஆர்டர் செய்திருந்த செல்போன் ஜனவரி 16ம் தேதி டெலிவரி செய்யப்படும் என … Read more

உயர்நீதிமன்ற நீதிபதி நியமன பரிந்துரைகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் நிராகரித்தது: ஒன்றிய அரசு தகவல்..!

டெல்லி: உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான பரிந்துரைகளில் 30% உச்சநீதிமன்ற கொலீஜியம் நிராகரித்து விட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் இடங்களை நிரப்ப உயர்நீதிமன்ற கொலீஜியம் உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு பெயர்களை பரிந்துரைக்கும். உச்சநீதிமன்றம் கொலீஜியம் அந்த பரிந்துரையை பரிசீலித்து ஒன்றிய அரசுக்கு பட்டியலை தரும். அந்த வகையில் 2021-ஆம் ஆண்டில் 251 பெயர்கள் உயர்நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அதில் 2022-ல் மே மாதம் வரை 148 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு … Read more

`இன்றைய இளைஞர்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்கறதில்ல…’- மத்திய அரசை சாடிய சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், மகாராஷ்ட்ராவில் நிகழும் வேலைவாய்ப்பின்மை குறித்து பேசுகையில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் ஒரு இடத்தில், “வேலையின்மையால் பல சமூக பிரச்னைகள் எழுந்துள்ளன. இளைஞர்களுக்கு திருமண வயது வந்த பின்னர்கூட, வேலை இல்லாததால் பெண் கிடைக்காமல் இருக்கின்றனர்” என்றுள்ளார் அவர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜன் ஜகர் யாத்ராவை கொடியசைத்து தொடங்கிவைத்த பின்னர் பேசுகையில் இக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய விவசாய நலத்துறை அமைச்சரான சரத் பவார், … Read more

100 நாள் வேலை திட்டம் | மொபைல் செயலி மூலம் வருகை பதிவு ஊழலுக்கு வழிவகுக்கும்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலைக்கு வருபவர்கள் இனி மொபைல் செயலி மூலமாக வருகையை பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய அறிவிப்பு ஊழலுக்கு வழிவகுக்கும் என்று காங்கிஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”நாடுமுழுவதிலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் 9 கோடி பணியாளர்களும் தங்களின் வருகையை இனி மொபைல் செயலி மூலம் பதிவு … Read more

வாயை திறந்தால் ரகசியத்தை உளறிடுவேன்… பிரசாந்த் கிஷோர் பேச்சால் பிகாரில் பரபரப்பு!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டு பிரபலமான தேர்தல் வியூக நிபுணர் என்ற அடையாளத்தை பெற்றவர் பிரசாந்த் கிஷோர். இவர் அடுத்தகட்டமாக பிகாரில் அரசியல் மாற்றத்தை நிகழ்த்த மும்முரம் காட்டி வருகிறார். இதற்காக அவர் கையிலெடுத்துள்ள விஷயம் பாத யாத்திரை. இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸின் எழுச்சிகாக நாடு தழுவிய அளவில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நடைபயணத்தை போல், பிகாரில் அரசியல் புரட்சிக்கு வித்திட்டு வருகிறார் பிரசாந்த் கிஷோர். பிகாரில் அரசியல் … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அரவணை பாயாசத்தில் தரமற்ற ஏலக்காய் பயன்படுத்தியது ஆய்வில் அம்பலம்

கேரள: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அரவணை பாயாசத்தில் தரமற்ற ஏலக்காய் பயன்படுத்தியது ஆய்வில் அம்பலம் மாகியுள்ளது. அரவணை பாயாசத்தில் உள்ள ஏலக்காயில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப் பூச்சிமருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருவனந்தபுரத்தில் உள்ள உணவுப் பொருள் ஆய்வகத்தில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகப் பூச்சி மருந்து கொண்ட ஏலக்காய் அரவணை பாயாசத்தில் பயன்படுத்தியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

”புதுச்சேரியில் அரசின் திட்டங்களை பெற ஆதார் கட்டாயம்” – துணைநிலை ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி மாநிலத்தில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசையின் உத்தரவுப்படி சமூகநலத் துறை சார்பாக  அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவுப்படி சமூகநலத்துறை செயலர் உதயக்குமார் அனைத்து துறை செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அரசின் சேவைகள், பலன்கள் அல்லது மானியங்களை வழங்குவதற்கான அடையாள ஆவணமாக ஆதாரை பயன்படுத்துவது அரசாங்க விநியோக செயல்முறைகளை எளிதாக்குகிறது. வெளிப்படைத் தன்மை மற்றும் செயல்திறனைக் கொண்டு வருகிறது. … Read more

குரூப்பை விட்டு தூக்கியதால் வாட்ஸ்அப் அட்மினின் நாக்கை அறுத்த கும்பல்

மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஃபர்சுங்கி பகுதியில் கடந்த டிச.28ஆம் தேதி இரவு 10 மணியளவில் பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த வகையில், ஹடாப்சர் காவல் நிலையத்தில் 38 வயது பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, ஓம் ஹைட்ஸ் ஹவுசிங் சொசைட்டி என்ற குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டுள்ளனர்.  ஹவுசிங் சொசைட்டியின் தலைவரான அந்த பெண் கொடுத்த புகாரில்,”எனது கணவர், அந்த குடியிருப்பில் வசிப்பவர்களை இணைத்து,’Om Heights … Read more

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வணிக வளாகத்தில் நுழைந்து பதான் படத்தின் பேனர்களை உடைத்த பஜ்ரங் தள் அமைப்பினர்

குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வணிக வளாகத்தில் நுழைந்து பதான் படத்தின் பேனர்களை உடைத்த பஜ்ரங் தள் அமைப்பினர். படத்தின் பாடலில் காவி நிறத்தில் கவர்ச்சி உடை அணிந்ததற்கு பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தனியார் வங்கிகளின் நிகர லாபம் 25% அதிகரிப்பு: 2022-2023 நிதியாண்டில் 3-வது காலாண்டில் லாபம் உயர்வு

டெல்லி: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தனியார் வங்கிகளின் நிகர லாபம் 25% வரை அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். கொரோனா பேரிடரிலிருந்து தொழில் துறைகள் மீண்டதால் 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடன் தேவைகள் பன்மடங்கு அதிகரித்தன. வீடு, வாகனங்கள், தனிநபர் கடன்களுக்கான தேவையும் அதிகரித்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட தனியார் துறை வங்கிகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதா அளவுக்கு கடன் விநியோக சந்தையை விரிவுபடுத்தின. இதனால், 2022 – 2023 … Read more