சர்ச்சை கவர்னர் வெளியேற விரும்பியதால் மகாராஷ்டிரா புதிய ஆளுநராக அமரீந்தர் சிங் நியமனம்?.. காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவியவருக்கு பரிசு
புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில ஆளுநரான பகத்சிங் கோஷியாரி, சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கிவருகிறார். குறிப்பாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததால், மாநில பாஜக தலைவர்களால் ஆளுநர் கோஷியாரிக்கு … Read more