மதுபோதையில் சாலையின் இரும்பு தடுப்பு மீது மோதி ரகளை.. தட்டிக்கேட்ட போலீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது..!

புதுச்சேரி யூனியம் பிரதேசம் காரைக்காலில், மதுபோதையில் சாலையின் இரும்பு தடுப்பு மீது மோதி ரகளை செய்து தட்டிக்கேட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்கரை பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து பேரிகார்டு மீது மோதி ரகளை செய்த இரு இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சமீபத்தில் சாலையில் காவல்துறையினர் வைத்திருந்த பேரிகார்ட்டை வாகனத்தில் இருந்தபடி இழுத்து சென்று அட்டகாசத்தில் ஈடுபட்ட இருவர் எனத் … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணை

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது.

ராணி வேலு நாச்சியார் பிறந்த நாளில் பிரதமர் மோடி தமிழில் புகழஞ்சலி

புதுடெல்லி: ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று ட்விட்டரில் தமிழில் புகழஞ்சலி வெளியிட்டார். தமிழகத்தின் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த 18-ம் நூற்றாண்டு வீரமங்கை ராணி வேலு நாச்சியார். சேதுபதி ராஜாவின் ஒரே மகளான வேலு நாச்சியார் போர்க்கலைகள், குதிரையேற்றம் போன்றவற்றையும் அறிந்தவர். பிரெஞ்சு, உருது என பல மொழிகளையும் கற்றவர். காளையார் கோவில் போரில், அவரது கணவர் முத்து வடுகநாத தேவரை, ஆற்காடு நவாப்பின் மகன் தலைமையிலான ஆங்கிலேயர் படை … Read more

காதல் திருமணம் செய்த இளைஞர் வீட்டிற்கு தீ வைப்பு

தெலுங்கானா மாவட்டம் கரீம்நகர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் வீட்டினை தீ வைத்து கொளுத்திய  பெண்ணின் சகோதரனை போலீசார் தேடி வருகின்றனர். ஹஜுராபாத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சஞ்சனாவின் தம்பி பாலையா நண்பர்களுடன் சேர்ந்து ராஜசேகர் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டது மட்டுமின்றி தயாராக வாங்கி வைத்திருந்த பெட்ரோலையும் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அந்த வீடு … Read more

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர் சுட்டுக் கொலை

சண்டிகர்: பஞ்சாபில் சர்வதேச எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்த நபர் எல்லைப்பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில், எல்லைப்பாதுகாப்பு படையினர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். குருதாஸ்பூரின் அஜ்னலா செக்டாரில் காலை 8 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பிராந்தியத்திற்குள் மர்ம நபர் ஊடுருவ முயற்சிப்பதை வீரர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து அவரை திரும்பி செல்லும்படி வீரர்கள் எச்சரிக்கை விடுத்தனர். எனினும் அவர் இதனை பொருட்படுத்தாமல் முன்னேறி … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரையின் பலன் – 2024-ல் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல்?

புதுடெல்லி: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின் பலனாக 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அவரை முன்னிறுத்த முனைப்பு காட்டப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க முன் வருமா எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. காங்கிரஸின் தேசிய தலைவராக பதவி வகித்த ராகுல் காந்தி கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சோனியா காந்தியே கட்சியின் இடைக்கால தலைவராக நீடித்தார். ஒருவழியாக, புதிய தலைவராக மல்லிகார்ஜுன … Read more

மே. வங்கத்தில் சேவையை தொடங்கிய 3வது நாளே வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு, கண்ணாடி சேதம்: என்ஐஏ விசாரணைக்கு பாஜ வலியுறுத்தல்

மால்டா: மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்ட  மூன்றே நாட்களில் அதன் மீது கல்வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒரு பெட்டியின் கண்ணாடி சேதம் அடைந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஹவுரா ரயில் நிலையத்தில் கடந்த 30ம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தாயார் காலமான நிலையிலும் இறுதி சடங்குக்கு பின், பிரதமர் மோடி காணொலி மூலம்  இந்த  ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் … Read more

காரில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் மரணம் – பாலியல் துன்புறுத்தலுக்கான தடயம் இல்லை

புதுடெல்லி: டெல்லியில் காரில் 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பெண் உயிரிழந்த விவகாரத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கான தடயங்கள் எதுவும் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: டெல்லியைச் சேர்ந்தவர் அஞ்சலி சிங் (20). கடந்த ஜனவரி 1-ம் தேதி அதிகாலையில் இவர் சென்ற ஸ்கூட்டியின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, காரின் அடியில் சிக்கிக்கொண்ட அஞ்சலி 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். … Read more

சிக்கன் சாப்பிட்ட நர்ஸ் சாவு: 20 பேருக்கு வாந்தி மயக்கம்

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ரஷ்மி (33). அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2  தினங்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அல்ஃபாம் சிக்கன்  மற்றும் பிரியாணி சாப்பிட்டு உள்ளார். இதை சாப்பிட்ட ஒரு மணி  நேரத்திலேயே அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து  அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  உடல்நிலை மோசமானதால் பின்னர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி  … Read more

சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதே இந்திய அறிவியல் சமூகத்தின் இலக்கு – அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தியாவை சுயசார்பு உடைய நாடாக உருவெடுக்கச் செய்வதை இந்திய அறிவியல் சமூகம் இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 108-வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் ‘அறிவியல், தொழில்நுட்பம் மூலம் பெண்கள் மேம்பாட்டுடன் கூடிய நிலையான வளர்ச்சி’ என்ற தலைப்பில் பேசியதாவது: அறிவியலில் வளர்ச்சி என்பது இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதை … Read more