பிபிசி ஆவணப்படம் திரையிட முயன்ற டெல்லி பல்கலை.யின் 24 மாணவர்கள் கைது

புதுடெல்லி: பிரதமர் மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை திரையிட ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி இதனை திரையிட முயன்ற ஜேஎன்யூ மற்றும் ஜமியா பல்கலை. மாணவர்கள் நேற்று முன்தினம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த ஆவணப்படத்தை நேற்று டெல்லி பல்கலை.யின் கலைத்துறை மாணவர்கள் திரையிட முயன்றனர். இது குறித்து பல்கலை. தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர். அதனை மீறி பொது … Read more

ஒன்றிய அமைச்சர் மகன் விடுதலை

லக்னோ: உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் 2021ம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா வந்த ஜீப் புகுந்ததில், 4 விவசாயிகள் உயிரிழந்தனர்.   இதையடுத்து ஆஷிஸ் மிஸ்ராவை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப்பின் உச்ச நீதிமன்றம், ஆஷிஸ் மிஸ்ராவுக்கு  இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து சிறையில் இருந்து நேற்று ஆஷிஸ் மிஸ்ரா விடுதலை செய்யப்பட்டார்.

மூன்றாம் முன்னணி; தெலங்கானா முதல்வரின் அதிரடி வியூகம்.!

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி முன்னணியை உருவாக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மூன்றாம் கூட்டணியை உருவாக்க அவர் செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் ஹைதராபாத்தில் உள்ள கம்மம் நகரில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற பாரதிய ராஷ்டிர சமிதியின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர், சிபிஎம் பினராயி விஜயன், சமாஜ்வாதி … Read more

ஜம்மு காஷ்மீர் நடைபயணத்தில் பாதுகாப்பு விஷயத்தில் காவல்துறையினர் தோல்வியடைந்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

ஜம்மு காஷ்மீரில் தனது நடைபயணத்திற்கான பாதுகாப்பு விஷயத்தில், காவல்துறையினர் தோல்வியடைந்துவிட்டதாக, ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் அனந்த் நாக்கில், ராகுல்காந்தி இன்று இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பயணம் தொடங்கிய 500 மீட்டரிலேயே ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி, ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் செயல்பாடு தோல்வியடைந்ததாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவலர்களை எங்கும் காண முடியவில்லை என்றும் தெரிவித்தார். தான் மேற்கொண்டு யாத்திரை செல்வதை தனது … Read more

மகளுக்கு ரூ50 கோடியில் கல்யாண பரிசு?.. நடிகர் சுனில் ஷெட்டி தரப்பு மறுப்பு

மும்பை: தனது மகளின் கல்யாண பரிசாக ரூ. 50 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களாவை பரிசாக அளித்ததாக வெளியாகும் செய்திகளை நடிகர் சுனில் ஷெட்டி தரப்பு மறுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகையும்,  நடிகர் சுனில் ஷெட்டியின் மகளுமான அதியா ஷெட்டிக்கு கடந்த சில தினங்களுக்கு  முன் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள்,  கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று பல கோடி ரூபாய்  மதிப்பிலான பரிசு … Read more

ஆலப்புழா அருகே மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: வாலிபர் அதிரடி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை தூக்கி சென்று கொடூரமாக பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே நூரநாடு பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (27). தாய், தம்பியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் போதை பொருளுக்கு அடிமையான பிரணவின் தொல்லை தாங்க முடியாமல் தாயும், தம்பியும் வேறொரு வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த ஒரு மாற்றுத் திறனாளி இளம்பெண் … Read more

ஒரேநாளில் 80 பேரை கடித்த தெருநாய்! ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாயென தெரிந்ததால் ஏற்பட்ட விபரீதம்

பீகார் மாநிலம் அராவ் பகுதியில் தெருநாய் ஒன்று 80க்கும் மேற்பட்டவர்களைக் கடித்துக் குதறியுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அராவ் மாவட்ட பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று, அப்பகுதி மக்களில் 80க்கும் மேற்பட்டவர்களை நேற்று கடித்துக் குதறியுள்ளது. அதில் 12 பேர் குழந்தைகள் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். நாய் கடியால் பாதிக்கப்பட்ட அத்தனை பேரும், அராவ் மாவட்ட மருத்துவமனைக்கு படையெடுத்துள்ளனர். இதைக் கேள்விப்பட்டதும் அந்த நாயைப் பிடிப்பதற்கு அரசு … Read more

பாதயாத்திரையில் திடீரென மயங்கி விழுந்தார் தெலுங்கு நடிகர் தாரகரத்னா..!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லேகேஷ் நடத்தி வரும் யுவகளம் என்ற பாதயாத்திரையில் பங்கேற்ற 39 வயதான தெலுங்கு நடிகர் தாரகரத்னா திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சோர்வு காரணமாகவே தாரகரத்னா மயக்கமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் சந்திரபாபு நாயுடு நடத்திய பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.f Source link

பிபிசி ஆவணப்படத்தை திரையிட திட்டமிட்டதால் டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு..!!

டெல்லி: பிபிசி ஆவணப்படத்தை திரையிட திட்டமிட்டதால் டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒரே அறிக்கை… மொத்தமாக ஆட்டம் காணும் அதானி குழுமம்! என்னதான் நடக்கிறது பங்குசந்தையில்?

அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழுமம் மேலும் சரிவைச் சந்தித்து வருகிறது. இன்று 20 சதவிகிதம் வீழ்ச்சியடைந்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஆய்வு அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமம் மேலும் சரிவைச் சந்தித்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளும் இன்று 20 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 3,112 ரூபாய் முதல் 3,276 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை … Read more