பச்சை முட்டையில் இருந்து மயோனைஸ் தயாரிக்க கேரள தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் அசைவ மயோனைஸ், பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு தடை விதிக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் கேட்டரிங் சேவைகளுக்கு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என கேரள சுகாதார அமைச்சர் வீணா தெரிவித்தார்.

இந்தியாவை இயக்குவது இளைஞர் சக்தி – தேசிய இளைஞர் விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

பெங்களூரு: மத்திய‌ இளைஞர் நலன் துறையும் கர்நாடக அரசும் இணைந்து ஜனவரி 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ‘தேசிய இளைஞர் விழா’வுக்கு ஏற்பாடு செய்துள்ளன. சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான நேற்று கர்நாடகாவின் ஹுப்ளியில் இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். விழாவில் பிரதமர் பேசியதாவது: விழாவில் நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். கணிதம், அறிவியல், பொறியியல், தொழில், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் … Read more

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்!

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75. இதை அவருடைய மகள் சுபாஷினி தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளார். சரத் யாதவின் மறைவிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பொறியியல் பட்டதாரியான இவர், ராம் மனோகர் லோஹியாவின் சோஷியலிச கருத்துகளால் ஈர்க்கப்பட்டு 1974ல் அரசியலில் குதித்தார். அப்போது நடைபெற்ற உத்தரப் … Read more

எல்லையில் நிலைமையை கணிக்க முடியாது: ராணுவ தளபதி தகவல்

புதுடெல்லி: சீனா உடனான வடக்கு எல்லையில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் கணிக்க முடியாததாக உள்ளதாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். ராணுவ தினத்தையொட்டி ராணுவ தளபதி மனோஜ் பாண்டே டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, ‘‘சீனாவுடனான வடக்கு எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஆனால் கணிக்க முடியாததாக இருக்கிறது. எந்த சவால் வந்தாலும் எதிர்கொள்ளும் வகையில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்னர். நமது வீரர்கள் வலுவான நிலையை … Read more

பிரதமர் மோடி பற்றி சர்ச்சை கருத்து – ம.பி. காங்கிரஸ் தலைவருக்கு ஜாமீன் மறுப்பு

ஜபல்பூர்: மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா படேரியா. இவர் பன்னா மாவட்டத்தின் பவாய் நகரில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி மதம், ஜாதி மற்றும் மொழி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவார். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் எதிர்காலம் அபாய நிலையில் உள்ளது. அரசியலமைப்பை காப்பாற்ற நீங்கள் விரும்பினால், மோடியை காலி செய்ய தயாராக இருங்கள். காலி செய்ய வேண்டும் என்றால் அவரை தோற்கடிக்க … Read more

கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அங்கீகாரம் தர பரிந்துரை

புதுடெல்லி: கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக கோவோவாக்ஸ் பயன்படுத்தும் வகையில் அதற்கான சந்தை அங்கீகாரத்துக்கு மருந்து தர கட்டுப்பாடு ஆணையத்தின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் கண்டுபிடித்த கோவோவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விநியோகம் செய்யும் உரிமையை சீரம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் இயக்குனர் பிரகாஷ் குமார் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரலுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதில் … Read more

பிஹாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பைரத்து செய்ய பொதுநல மனு தாக்கல்

புதுடெல்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கைக்கு பிஹார் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து அகிலேஷ் குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், “மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின் பட்டியல் 1-ல் இடம்பெற்றுள்ளது. எனவே, அதுபோன்ற கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, பிஹார் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக 2022-ம் ஆண்டு ஜுன் 6-ல் வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய … Read more

ராகுலுடன் யாத்திரையில் பங்கேற்ற முன்னாள் நிதித்துறை செயலாளர் வீட்டில் சிபிஐ வழக்கு

புதுடெல்லி: ராகுலுடன் ஒற்றுமை நடைபயணத்தில் பங்கேற்ற முன்னாள் நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயராம் மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. ஒன்றிய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளராக இருந்தவர் அரவிந்த் மாயராம். தற்போது ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் பொருளாதார ஆலோசகராக இருக்கிறார். இவர் சமீபத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் கலந்துகொண்டார். இதையடுத்து, அவர் மீதான பழைய புகார் ஒன்றை ஒன்றிய புலனாய்வு துறை தூசி தட்டி எடுத்து விசாரித்து வருகிறது. இது … Read more

ஆரம்ப பள்ளியில் பரிமாறப்பட்ட மதிய உணவில் பல்லி மற்றும் எலி..!!

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள மயூரேஷ்வரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு இருந்த சம்பவம் அறங்கேறியது. அதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சம்பவம் அறங்கேறியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் சஹுர்காச்சி பித்யானந்தபுர் ஆரம்ப பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளில் நேற்று வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்த எலி மற்றும் பல்லி கிடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பலரின் கவனத்தையும் பள்ளிகள் பக்கம் திருப்பியுள்ளது. உணவில் எலி … Read more

ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்த ஆணையம்

புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் செல்கின்றனர். இந்நிலையில், மத்திய அரசு கடந்த 2-ம் தேதி ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான வரைவு மசோதாவை வெளியிட்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த சுய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முன்மொழியப்பட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்படும் … Read more