மனைவியும், பால்ய நண்பரும் உறவில் இருந்ததால் ஆத்திரம்: சரமாரியாக குத்திக் கொன்ற கணவர்!

தனது பால்ய நண்பருடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததற்காக 30 வயதுடைய மனைவியையும் நண்பரையும் சரமாரியாக குத்திக் கொன்ற சம்பவத்தில் ஆறே மணிநேரத்தில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் நடந்திருக்கிறது. கொலைக்கான பின்னணியை விசாரிக்க களத்தில் இறங்கிய டெல்லி போலீசார் இந்த இரட்டைக்கொலை குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதன்படி கடந்த கடந்த டிசம்பர் 30ம் தேதி 30 வயது பெண் மற்றும் ஒரு ஆணின் உடல் ஆரோபிந்தோ மார்க்கத்தில் உள்ள சஃப்தார்ஜங் மருத்துவமனை அருகே ரத்த … Read more

பாலியல் புகார்: ஹரியாணா விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் ராஜினாமா

சண்டிகர்: ஹரியாணா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது தடகள விளையாட்டு பெண் பயிற்சியாளர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில், “எனது பிம்பத்தை கெடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. என் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை. அந்தப் புகார் தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தப்படும் என்று நம்புகிறேன். அதனால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” … Read more

ராகுல் யாத்திரை அரசியல் மாற்றத்தை கொண்டுவரும்; சஞ்சய் ராவத் உறுதி.!

கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அக்கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் ராகுல் காந்தியின் பாத்யாத்திரை பேசு பொருளாகியுள்ளது. … Read more

மகாராஷ்டிரா நாஷிக்கில் தீ விபத்து : தொழிற்சாலை உள்ளே சிக்கிய பணியாளர்கள் – தொடரும் மீட்புப்பணி!

Fire Breakout in Nashik : மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் நகரில் உள்ள தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாஷிக் நகரின் முந்தேகான் கிராமத்தில் உள்ள அந்த தொழிற்சாலையில் உள்ள பெரிய கொதிகலன் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த தீ விபத்து சம்பவம் இன்று காலை 11 மணிக்கு நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது தீ விபத்தை அணைக்க பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். … Read more

மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் ஜிண்டால் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.19 பேர் காயம் அடைந்துள்ளனர்.

”பிரதமர் மோடி அப்படி என்னத்த பண்ணிட்டாருனு அவர அப்டி சொல்றீங்க” – பீகார் முதல்வர் காட்டம்!

புதிய இந்தியாவின் தந்தை என பிரதமர் மோடியை சொல்லும் அளவுக்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பி அரசியல் உலகில் பரபரப்பை கிளப்பியிருக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்களிப்பு என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ள நிதிஷ் குமார், தேசத் தந்தையைச் சுட்டுக்கொன்ற குற்றவாளியைக் கொண்டாடும் அமைப்புகளாகத்தான் அவை இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். #WATCH | They had nothing to do with the … Read more

புதிய இந்தியாவின் தேசத்தந்தை மோடி; பாஜக கருத்துக்கு நிதிஷ்குமார் பதிலடி.!

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 21ம் தேதி நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, பாஜக மூத்தத் தலைவரும், மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் மனைவி அம்ருதா பட்னவிஸ் பேசும்போது, ‘‘நாட்டில் இரண்டு தேசப்பிதாக்கள் உள்ளனர். ஒருவர் இந்தியாவின் முந்தைய காலத்தின் தந்தை. மற்றொருவர், நவீன இந்தியாவின் தேசத் தந்தை. முந்தைய காலத்தின் தேசத் தந்தை மகாத்மா காந்தி. நவீன இந்தியாவின் தேசத் தந்தை பிரதமர் நரேந்திர மோடி’’ என்று அவர் … Read more

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் என்ன? ஏன் கூடவில்லை? தொடரும் கேள்விகள்

நியூடெல்லி: 2023 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. புத்தாண்டை மக்கள் புதிய ஆற்றலுடன் கொண்டாடுகிறார்கள். இதனுடன், புத்தாண்டில், மக்கள் புதிய வேலைகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அதே நேரத்தில், புத்தாண்டின் போது, ​​மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளாக செய்யும் முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தற்போது புத்தாண்டை முன்னிட்டு சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பும் பொய்க்க செய்த அரசின் திட்டம் இது. முதலீட்டு திட்டம் உண்மையில், மக்கள் தங்கள் வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பதிலும் முதலீடு … Read more

கார் விபத்தில் சிக்கியது எப்படி?: ரிஷப் பன்ட் விளக்கம்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட். 25 வயதான இவர் இந்த ஆண்டு பிசிசிஐயின் டெஸ்ட் சிறந்த பேட்ஸ்மேன் விருதையும் வென்று இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தாயாரை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து காரில் சொந்த ஊரான உத்தரகாண்ட் செல்லும்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். தற்பொழுது அவர் டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பேசி உள்ள காவல்துறை, 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அனுமதி … Read more

ரயில்வே வாரியத்தின் தலைவராக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்பு

ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அனில் குமார் லஹோடி பொறுப்பேற்றுக் கொண்டார். 1984-ஆம் வருட இந்திய ரயில்வே பொறியாளர்கள் பிரிவைச் சேர்ந்த லஹோடி, மத்திய, வடக்கு, மத்திய வடக்கு, மேற்கு மற்றும் மத்திய மேற்கு ரயில்வேகளிலும், ரயில்வே வாரியத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். மேற்கு ரயில்வேயின் பொதுமேலாளராக அவர் பதவி வகித்த போது அதிக சரக்குகளை கையாண்டு ரயில்வே துறை சாதனை படைத்ததோடு, அதிக எண்ணிக்கையிலான விவசாய ரயில்களும் இயக்கப்பட்டன. சமீபத்தில் மத்திய … Read more