டெல்லியில் லேசான நிலநடுக்கம்!

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புத்தாண்டின் முதல் நாளான நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ஹரியானா மாநிலத்தின் ஜாஜார் பகுதியை மையமாக கொண்டு உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கல் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. புத்தாண்டு பிறந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அதாவது நள்ளிரவு 01:19:42 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. ஹரியானாவின் ஜாஜார் பகுதியில் இருந்து … Read more

மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது நாளை தீர்ப்பு..!

மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. குளிர்கால விடுமுறைக்குப் பின்னர் நாளை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளின் விசாரணை மீண்டும் தொடங்க உள்ளது. இந்நிலையில் டிசம்பர் 7ம் தேதி பழைய 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில் விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. Source link

நாடு முழுவதும் இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டு நீடிப்பு நாளை முதல் அமல்

டெல்லி: இலவச உணவு தானிய திட்டம் ஓராண்டு நீடிப்பு நாடு முழுவதும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த 2020 ஏப்ரல் மாதம் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியது. இத்திட்டத்தின்படி ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரேஷனில் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த செப்டம்பரில் இத்திட்டத்தை டிசம்பர் 31 வரை 3 மாதங்களுக்கு ஒன்றிய அரசு நீட்டித்தது. இந்த சூழலில் … Read more

#BIG NEWS: சிலிண்டர் விலை உயர்வு ..!!

இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோகம் என இரு வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கும், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வணிக பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஒவ்வொரு மாதமும், சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. அண்மைக் காலமாக வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தன. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெரும் … Read more

சூரியன் முதல் சந்திரன் வரை பல திட்டங்களை செயல்படுத்தி 2023-ல் சாதனைக்கு தயாராகிறது இஸ்ரோ

புதுடெல்லி: ஆதித்யா, சந்திரயான்-3, ககன்யான்விண்கலங்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஆர்எல்வி ராக்கெட்டை தரையிறக்குவது உட்பட அறிவியல் சோதனைகள் பலவற்றை இந்தாண்டு மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ 2023-ம் ஆண்டில் அறிவியல் திட்டங்கள் பலவற்றை மேற்கொள்ளவுள்ளது. மீண்டும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்ட ஆர்எல்வி ராக் கெட்டை, கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏரோனாடிக்கல் பரிசோதனை மையத்தில் இன்னும் சில மாதங்களில் இஸ்ரோ தரையிறக்கி பரிசோதிக்கவுள்ளது. சூரியனை பற்றிய ஆய்வை மேற்கொள்ள ஆதித்யா என்ற விண்கலத்தையும் … Read more

டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு

டெல்லி: கிரேட்டர் கைலாஷ் இல் உள்ள மூத்த குடிமக்கள் பராமரிப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். 13 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று சந்தன் சவுத்ரி, தெற்கு காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2022-ல் ரூ.1,320 கோடி உண்டியல் வருவாய்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் ஒரு நாள் உண்டியல் வருவாய் ஒரு லட்சத்தை கடந்தது. இது தற்போது பன்மடங்கு உயர்ந்து தினமும் சராசரியாக ரூ. 3.5 கோடி உண்டியல் வருவாய் கிடைக்கிறது. இதனால், இந்த 2022-ம்ஆண்டு ஏழுமலையான் கோயில்உண்டியலில் பக்தர்கள் ரூ.1,320கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் தொடர்ந்து கடந்த 10 மாதமாக பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 100 கோடிக்கும் மேல் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். டிசம்பர் … Read more

லும்பி – ப்ரோவாக் தடுப்பூசி – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

ஆட்டு அம்மைக்கான தடுப்பூசியான லும்பி ப்ரோவாக்-ஐ வணிக ரீதியில் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாக்பூரில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. எல்.எஸ்.டி.க்கு உள்நாட்டு தடுப்பூசியான லும்பி ப்ரோவாக்கை உருவாக்குவதில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.ஏ.ஆர் மேற்கொண்ட பாராட்டுக்குரிய முயற்சியை மத்திய அமைச்சர் ரூபாலா பாராட்டினார். மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் கால்நடைத் துறையின் எதிர்காலத் தேவைகளுக்காக … Read more

வாட்ஸ்அப்பில் தவறான இந்திய வரைபடம்

புதுடெல்லி: தவறாக காட்டப்பட்டுள்ள இந்திய வரைபடத்தை உடனே சரி செய்யும்படி வாட்ஸ்அப் நிறுவனத்தை ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், “இந்தியாவில் வணிகம் செய்து வரும், தொடர்ந்து வணிகம் செய்ய விரும்பும் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவின் சரியான புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும். வாட்ஸ்அப் நிர்வாகிகளே தவறாக இடம்பெற்றுள்ள இந்திய வரைபடத்தை விரைந்து சரி செய்யுங்கள்” என ரீட்விட் செய்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட … Read more

வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் முன்கூட்டியே துவங்கிய இலவச தரிசன டிக்கெட் விநியோகம்

வைகுண்ட ஏகாதசிசையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் பிரவேச டிக்கெட் விநியோகம் துவங்கியது. நாளை வைகுண்ட ஏகாதசிசையை முன்னிட்டு முதல் 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் பேர் என்ற கணக்கில் நான்கு லட்சத்து 50 ஆயிரம் இலவச வைகுண்ட வாசல் பிரவேச தரிசன டிக்கெட் என்ற பெயரில் தேவஸ்தான நிர்வாகம் இலவச விநியோகம் செய்ய முடிவு செய்தது. இதற்காக திருப்பதியில் உள்ள … Read more