ஜனவரி 1 முதல் வட்டி உயர்வு

அஞ்சலக சேமிப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு இன்று ஜனவரி 1 முதல் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட உள்ளன. வங்கிகள் நிரந்தர வைப்பு தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியதைத் தொடர்ந்து, அஞ்சலக சேமிப்பு திட்டத்திற்கான வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதம் 1.1 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் தற்போது 7.6 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வரும் நிலையில், … Read more

திருப்பதியில் நாளை வைகுண்ட ஏகாதசி அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு

திருமலை:  வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நாளை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து வரும் … Read more

புத்தாண்டில் பீதி குஜராத்தில் பரவிய புதிய கொரோனா

புனே: அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஒமிக்ரானின் உருமாறிய எக்ஸ்பிபி.1.5 எனும் புதிய கொரோனா வைரஸ் குஜராத்தில் ஒருவருக்கு தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் புதிய கொரோனா வைரஸ் உருவாகி, இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக, உருமாற்ற வைரஸ் பரவலை தடுக்க, அவைகளின் மரபணு மாற்ற பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவில் சமீபத்தில் கொரோனா அதிகரித்ததில் 40 … Read more

2570 ஏக்கர் கையகப்படுத்தி சபரிமலை அருகே விமான நிலையம்: கேரள அரசு அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலை அருகே விமான நிலையம் அமைப்பதற்கு 2570 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அனுமதி வழங்கி கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் சபரிமலை அருகே விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சபரிமலை அருகே உள்ள எருமேலியில் விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இப்பகுதியில் கே.பி.யோகன்னான் என்ற … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2022ல் காணிக்கை ரூ.1,446 கோடி: 2.54 கோடி பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2022-ம் ஆண்டில் 2.54 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1,446 கோடி கிடைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் தவித்தனர். கொரோனா குறைந்ததால் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்பிறகு கடந்த ஜனவரியில் ரூ.79.39 கோடியும், பிப்ரவரியில் ரூ.79.33 கோடியும் உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.  பின்னர், மார்ச் முதல் வாரத்தில் இருந்து பக்தர்களின் … Read more

புதிதாய்ப் பிறந்தது 2023 ஆங்கிலப் புத்தாண்டு..!

புதிதாய்ப் பிறந்தது 2023 ஆங்கிலப் புத்தாண்டு. எங்கும் குதூகலம்- மகிழ்ச்சிக் கொண்டாட்டம்.. மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்..! ஒருவருக்கொருவர் ‘ஹேப்பி நியூ இயர்’ கூறி வாழ்த்து..! சென்னை மெரினாவில் புத்தாண்டைக் கொண்டாடிய மக்கள்.. புத்தாண்டு பிறந்ததும் ஹேப்பி நியூ இயர் என ஆரவாரம்.. மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டம்.. கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களிலும் ஆட்டம்-பாட்டம் உற்சாகம்..! புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.. புத்தாண்டு பிறந்ததும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.. … Read more

'பாஜகவை எனது குருவாக பார்க்கிறேன்..!' – ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி!

“பா.ஜ.க.,வும், ஆர்எஸ்எஸ்சும் என்னை கடுமையாக விமர்க்கின்றன. இதுவே எனக்கு வழிகாட்டியாக இருப்பதுடன், என்னை மேலும் மேம்படுத்த உதவியாக இருக்கிறது,” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி துவக்கிய பாரத் ஜோடோ யாத்திரையானது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் (ஜனவரி 2) யாத்திரை மீண்டும் துவங்க உள்ளது. பாத யாத்திரையின் போது, ராகுலுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மத்திய … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு – உலக தலைவர்கள், கட்சி தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு உலகத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி பேரிழப்பை சந்தித்துள்ளார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்’’ என்று தெரிவித்துள்ளார். … Read more

அமைச்சரவை விரிவாக்கத்திற்கு அமித் ஷா ஓகே – தேர்தலுக்கு பக்கா ப்ளான்..!

கர்நாடக மாநில அமைச்சரவையை மாற்றி அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பச்சைக்கொடி காட்டி உள்ளார். கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சுமார் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் பணிகளில், அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. பாஜகவை … Read more

'குண்டு துளைக்காத காரில் அமர்ந்து செல்ல முடியாது': ராகுல் காந்தி விளக்கம்

டெல்லி: மக்களிடம் நேரடியாகச் சென்றுப் பேச விரும்புவதால் குண்டு துளைக்காத காரில் செல்ல முடியாது. மேலும்  காரில் அமர்ந்தபடி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை செல்ல முடியாது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக சிஆர்பிஎஃப் மற்றும் டெல்லி போலீஸ் புகார் தெரிவித்திருந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.