அரசியல் சாசனமே முதன்மையானது என ப.சிதம்பரம் கருத்து
டெல்லி: நாடாளுமன்றமே முதன்மையானது என துணைகுடியரசு தலைவர் கூறியது தவறு, அரசியல் சாசனமே முதன்மையானது என ப.சிதம்பரம் தெரிவித்தார். பெரும்பான்மை கொண்ட அரசு நாடாளூமன்ற முறையை மாற்றி ஜனாதிபதி முறையை கொண்டு வந்தால் அது செல்லுமா, மாநிலங்கள் இனி சட்டம் இயற்ற முடியாது என நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினால் அது செல்லுமா என ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.