ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு

புதுடெல்லி: காஷ்மீரில் வரும் 30ம் தேதி நடக்கும் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்ள 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம்  மாநிலங்களை கடந்தது. கடந்த 5ம் தேதி மீண்டும் அரியானாவுக்குள் நுழைந்த பாதயாத்திரை நேற்றுமுன்தினம் இரவு பஞ்சாப்புக்கு சென்றது. பாதயாத்திரை 12 மாநிலங்களை … Read more

ராகுல் காந்தி யாத்திரை ஜம்முவில் நுழையும் போது இணைவோம்; சிவசேனா உறுதி.!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய … Read more

தலைவர்களை புறக்கணித்த கவர்னர் ஜனாதிபதியுடன் தமிழ்நாடு அமைச்சர் இன்று சந்திப்பு

புதுடெல்லி: தமிழ்நாடு என்று கூறாமலும், தமிழக தலைவர்களைப் பற்றி உரையில் படிக்காமல் புறக்கணித்த கவர்னரின் செயல் குறித்து ஜனாதிபதியை இன்று சந்தித்து, தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் எம்பிக்கள் முறையிடுகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 9ம் தேதி உரையாற்றும்போது, தமிழ்நாடு என்று சொல்லாமல், தமிழகம் என்று குறிப்பிட்டார். அதோடு தமிழ்நாட்டுக்காகவும், அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பெயரையும் சொல்லாமல், தன்னிச்சையாக சில பகுதிகளை சேர்த்து உரை நிகழ்த்தினார். அப்போது சட்டப்பேரவையில் … Read more

பிரதமர் துவக்கி வைக்கவுள்ள வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு – ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திராவில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ள வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்திற்கு புதிதாக வந்தே பாரத் ரயில் சேவை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 19-ம் தேதி பொதுமக்கள் பயணிக்கும் வகையில் இந்த ரயில் சேவை துவங்குகிறது. வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைப்பதற்கும், மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் பிரதமர் மோடி ஐதராபாத் செல்ல … Read more

தேசிய இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (எம்எஸ்சிஎஸ்) 2002 விதியின் கீழ் தேசிய அளவிலான பன்-மாநில இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு ஏதுவாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், உணவுப்பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் மற்றும் வடகிழக்கு மண்டல மேம்பாட்டுக்கான அமைச்சகத்தின் கொள்கைகள், திட்டங்கள் மூலம் ஆதரவளிக்கும் … Read more

தனது முதல் மின்சார SUV காரை அறிமுகப்படுத்தியது மாருதி சுசுகி நிறுவனம்..!

டெல்லியை அடுத்துள்ள நொய்டாவில் நடைபெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போ  கண்காட்சியில் மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் மின்சார SUV காரை அறிமுகப்படுத்தியது. 3 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு இன்று தொடங்கிய ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்ச்சி வருகின்ற 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது புதிய மாடல் கார்களை காட்சிபடுத்தியுள்ளன. மாருதி சுசுகி அறிமுகப்படுத்திய இந்த SUV கார் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 550 கி.மீ தூரம் வரை செல்லும் எனவும், … Read more

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

டெல்லி: மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். முன்னாள் அமைச்சர் கிம்மனே ரத்னாக்கர் அலுவலகத்தில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றார்.   

கொரோனா 4வது அலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்; சுகாதாரத்துறை அமைச்சர்.!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், … Read more

எருமேலியில் இன்று பிரசித்தி பெற்ற பேட்டை துள்ளல்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கு முன்னதாக நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை வரும் 14ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக சபரிமலையில் தினமும் சராசரியாக 95 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் … Read more

ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் மறுப்பு!

ஏர் இந்தியா விமானத்தில், பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்து விட்டது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடி போதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது மூதாட்டியின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் … Read more