குடியரசு தின விழாவை நடத்தியே தீர வேண்டும் – தெலங்கானா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஹைதராபாத்: தெலங்கானாவில் ஆளுநரை தவிர்க்க கரோனா பாதிப்பை காரணம் காட்டி, குடியரசு தின விழாவை மாநில அரசு ரத்து செய்தது. ஆனால் குடியரசு தின விழாவை ஆளுநர் தலைமையில் நடத்தியே தீரவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கும் (கேசிஆர்) இடை யில் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. தெலங்கானா அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடைபெறும். ஆளுநரும் … Read more