சந்திரபாபு நாயுடு நிகழ்ச்சியில் உயிரிழந்த தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

நெல்லூர்: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 2 பெண்கள் உட்பட 8 தொண்டர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் நெல்லூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர், கந்துகூரு என்டிஆர் சர்க்கிள் அருகே ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சென்றார். சந்திரபாபு நாயுடுவின் பேச்சை கேட்க தொண்டர்கள் ஏராளமானோர் … Read more

Breaking: பிரதமர் மோடியின் தாயார் காலமானார்: ட்விட்டரில் பிரதமர் அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரோபென் (100) கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அகமதாபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனை யு.என்.மேத்தா மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பிரதமரின் தாயார் ஹீரோபென் காலமானார். இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) காலமானார்!

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி (100) காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

பாரம்பரிய முறைப்படி நடந்த முகேஷ் அம்பானியின் மகன் நிச்சயதார்த்தம்..!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இவரது மனைவி நீதா அம்பானி. இந்த தம்பதியின் 3வது மகன் ஆனந்த் அம்பானி. இவர், அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர். ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ பிளாட் பார்ம்கள் மற்றும் ரீடெயில் வென்ச்சர்ஸ் வாரியங்களில் உறுப்பினராக இருந்தவர், தற்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். அதேபோல், தொழிலதிபர் வீரேன் … Read more

கடலில் 400 கி.மீ. தூர இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: ரஷ்யாவுடன் சேர்ந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகளை போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும். இந்த ஏவுகணைகள் சீறிப்பாயும் வேகம் மற்றும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப் படை நேற்று மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை ஒன்றை எஸ்யு-30 எம்கேஐ ரக போர் விமானத்தில் இருந்து கடலில் 400 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை நோக்கி செலுத்தியது. இந்தப் பரிசோதனை … Read more

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு உடல்நிலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அவரது மறைவை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர், இன்று அதிகாலை உணர்வுப்பூர்வமான ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. அம்மா… ஒரு துறவியின் பயணத்தை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உங்களிடம் உணர்ந்தேன். ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள். மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை உங்களுடையது” என … Read more

மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெறாத டாக்டர்கள் பணியாற்ற அனுமதித்ததால் சிபிஐ ரெய்டு: நாடு முழுவதும் 91 இடங்களில் நடந்தது

புதுடெல்லி: வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இந்தியாவில் பணியாற்ற அனுமதி அளித்தது தொடர்பாக நாடு முழுவதும் 91 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடிப்பவர்கள் இந்தியாவில் நடத்தப்படும் வெளிநாடு மருத்துவ பட்டதாரி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் இங்கு மருத்துவராக பணியாற்ற  அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் வெளிநாடு மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சில மாநில மருத்துவ கவுன்சில்கள் … Read more

ஒரு சூடான டீ, இரண்டு சமோசா கிட்டத்தட்ட 500 ரூபாய்

ஒரு கோப்பை சூடான தேநீருடன் இரண்டு மொறுமொறு சமோசாக்கள் இருந்தால் போதும் பலருக்கும் அந்த நாளே அழகானதாக மாறிவிடும். ஏன் இது தான் பல பேரின் காலை டிபன்.. ஆனால், அந்த டீயும் சமோசாவுமே ஒரு துயரத்தைக் கொடுத்திருப்பதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். ஊடகவியலாளர் ஃபராஹ் கான் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவையிட்டுள்ளார். அதில், மும்பை விமான நிலையத்தில் ஒரு தேநீர், இரண்டு சமோசா மற்றும் ஒரு குடிநீர் பாட்டில் வாங்கினேன். இதற்கு ரூ.490 விலையாகக் … Read more

ஜார்க்கண்ட் நடிகை ரியா குமாரி கொலையில் கணவரை கைது செய்தது கொல்கத்தா போலீஸ்

ஹவுரா: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் நடிகை ரியா குமாரி என்கிற இஷா அய்லா (32). இவரது கணவர் பிரகாஷ் குமார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ரியா குமாரி நேற்று முன்தினம் தனது கணவர் பிரகாஷ் மற்றும் குழந்தையுடன் கொல்கத்தாவுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் மேற்கு வங்கத்தின் உலுபெரியா நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ரியா தலையில் காயத்துடன் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்தார். ஹவுரா மாவட்டம் பக்னான் என்ற … Read more

மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

புதுடெல்லி: போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வங்காள விரிகுடா பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. “சுகோய் 30 ரக போர் விமானத்திலிருந்து ஏவப்பட்ட இந்த பிரமோஸ் ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது” என்று விமானப்படை தெரிவித்துள்ளது. சுகோய் 30 ரக போர் விமானங்களில் இருந்து நிலம் மற்றும் கடல் பகுதிகளில் மிக நீண்ட தூரங்களில் தாக்குதல்களை நடத்துவதற்கான திறனை … Read more