பழைய ஓய்வூதியத் திட்டம் கேட்டு நாடாளுமன்றம் முற்றுகை – தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
புதுடெல்லி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று 50 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2003 டிசம்பர் 22-ம் தேதி புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்துக்கு மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது. … Read more