‘கோயில்களில் மணி அடித்தவர்கள்..’- உ.பி. முதல்வரை பொளந்த பீகார் அமைச்சர்.!

பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் கடந்த ஜனவரி 11ம் தேதி நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே ஆற்றிய உரையில், ‘‘ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்ட ராமசரித்மானஸ் கவிதை சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறது. ராம்சரித்மனாஸின் சில பகுதிகள் மீண்டும் குறிப்பிட்ட சாதியினருக்கு பாகுபாடு காட்டுகிறது. ராம்சரித்மனாஸுக்கு ஏன் எதிர்ப்பு வந்தது? கல்வியைப் பெற்ற பின் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் பாம்புகளைப் போல ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும் என்று அது கூறுகிறது. ‘ராம்சரித்மனாஸ்’ மற்றும் ‘மனுஸ்மிருதி’ சமூகத்தை … Read more

கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் விரைவில் நலம் பெற வேண்டி சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மகாகாளீஸ்வரர் கோயிலில் பிரார்த்தனை

உஜ்ஜைன்: கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விரைவில் நலம் பெற வேண்டி இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உஜ்ஜைனில் உள்ள மகாகாளீஸ்வரர் கோயிலில் பிரார்த்தனை செய்தனர்  செய்தனர்.   இந்தூரில் நாளை நடைபெற உள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி, 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் மிகவும் பிரசித்தி … Read more

"எனக்கு இரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் தருவேன்!" – நேதாஜியும், உலகப் பயணங்களும்!

சுபாஷ் சந்திர போஸ் 23 ஆம் தேதி, ஜனவரி மாதம் 1897 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த சமயம், ஒரிசா மாநிலம் கட்டாக்கில் ஒரு பெரிய செல்வச்செழிப்பான பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் “ஜானகிநாத் போஸ்” தாயின் பெயர் “பிரபாவதி” ஆவார். இவர்கள் இருவருக்கும் ஒன்பதாவது மகனாக இவர் பிறந்தார். ஆங்கிலோ சென்ட்ரிக் கல்வியை ஆரம்பகாலமாகப் பெற்றார் சுபாஷ். இவரது தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீலாகவும், தாய் ஒரு தெய்வ பக்தி மிக்கவராகவும் … Read more

“அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன்” – மகாராஷ்ட்டிர ஆளுநர் அறிவிப்பு

மும்பை: அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக விரும்பவதாகவும், இதனை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்திருப்பதாகவும் மகாராஷ்ட்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மும்பை வந்திருந்தபோது, அரசியல் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். எஞ்சி இருக்கும் எனது வாழ்வை படிப்பது, எழுதுவது உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அன்பையும் பரிவையும் தொடர்ந்து … Read more

மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்க கோஷ்யாரி வலியுறுத்தல்

மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்குமாறு பகத் சிங் கோஷ்யாரி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடி மும்பை வந்தபோது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலக ஆளுநர் கோஷ்யாரி விருப்பம் தெரிவித்ததாகவும், எஞ்சியுள்ள வாழ்க்கையை எழுதவும், படிக்கவும், சமூக செயல்பாடுகளில் ஈடுபடவும் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு; 3 நீதிபதிகள் அமர்வுக்கு விரைவில் ஒப்புதல்: சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அறிவிப்பு

புதுடெல்லி: கடந்தாண்டு பிப். 5ம் தேதி கர்நாடக அரசு, கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்த‌து. இதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. இதற்கிடையே இந்த தடையை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு, ‘ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே, கல்வி நிலைய‌ங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்’ என்று உத்தரவிட்டது. இதை … Read more

“தைரியமும் போராட்ட குணமும்…” – நேதாஜியின் பிறந்த தினத்தில் தலைவர்கள் புகழஞ்சலி

புதுடெல்லி: “நேதாஜியின் சிந்தனைகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, இந்தியா குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற நாம் பணியாற்றுகிறோம்” என்று பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாள் இன்று (திங்கள்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைவர்கள் பலரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி: தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி,“பராக்ரம தினமான இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்துவதோடு இந்திய … Read more

அமெரிக்க விசா பெறுவது இனி எளிது; தூதரகம் பலே நடவடிக்கை.!

இந்தியாவில் விசா செயலாக்கத்தில் தாமதங்களைக் குறைக்கும் நோக்கத்துடன், முதல் முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு சிறப்பு நேர்காணல்களை திட்டமிடுதல் மற்றும் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட புதிய முயற்சிகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது. விசா நிலுவையைக் குறைப்பதற்கான பல்முனை அணுகுமுறையின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் மும்பை, சென்னை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தூதரகங்கள் கடந்த ஜனவரி 21 அன்று “சிறப்பு சனிக்கிழமை நேர்காணல் நாட்களை” நடத்தியது. “முதல் முறையாக விசா விண்ணப்பிப்பவர்களுக்கான காத்திருப்பு … Read more

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.ஆளுநர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்துள்ளேன் என பகத்சிங் கோஷ்யாரி தகவல் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளி.. 12 கி.மீ பயணித்து வகுப்பெடுக்கும் ஆசிரியர்!

மகாராஷ்டிராவில் ஒரேயொரு மாணவருக்காக 12 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்தி வருகிறார். மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கணேஷ்பூர் கிராமம். இந்த கிராமத்தில் 150 பேர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் ஒரேயொரு மாணவர் மட்டும் படிப்பதுதான் வியப்புக்குரிய விஷயம். கார்த்திக் ஷெகோக்கர் என்ற மாணவர் அந்தப் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். Maharashtra | A Zilla … Read more